Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உண்மையில் அண்டவெளி (Space) என்பது என்ன? எப்படி உருவாகிறது? இதற்கு எல்லை உண்டா?

உண்மையில் அண்டவெளி (Space) என்பது என்ன? எப்படி உருவாகிறது? இதற்கு எல் லை உண்டா? என்ற கேள் விகள் நம் சிந்தனையில் எப்போதும் நீங்கா இடம் பெற்றவை.

நம் மனம் உடலுக்கு ஒரு திட்டமான வடிவம் கொடு த்து உணர்ந்த வினாடியே அதை ஒரு இடத்தில் காண் கிறோம். நம்மை சுற்றிலும் பொருட்கள் இடத்தில் இருப்ப தை பார்க்கி றோம் அந்த

இடம் வீடு அலுவலகம், வீதி நகரம் நாடு பூமி என விரிந்து கொண்டே செல்கிறது.

சூரிய மண்டலம்

பூமியின் மொத்தம் பரப்ப ளவு 51 கோடியே 66 ஆயி ரம் கிலோ மீட்டர். சூரிய மண்டலத்தின் மூன்றாவ து கிரகமான பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் 152 மில்லியன் கி லோ மீட்டர்.

பூமிக்கும் சூரிய மண்டலத்தின் வெளி எல்லைக்கும் இடை யே 3.5 பில்லியன் மைல்கள் தூரமிருக்கிறது.

சூரியனின் விட்டம் 700000 கி.மீ.

சூரியனும் அதன் எல்லா கோ ள்களும் ஒரு மண்டலமாக அமைந்து இன்னும் பெரிய இடத்தில் மில்கி வே என்னும் கேலக்ஸியில் ஒரு புள்ளியா க இடம் பெறுகிறது.

மில்கி வே கேலக்ஸி

சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி 25 ட்ரில்லியன் மைல் தூரத்தி ல் உள்ளது.

மில்கி வே எனும் காலக்ஸியி ல் சூரியனைப்போல் சுமார் 300 பில்லியன் நட்சத்திரங்கள் இரு க்கின்றனவாம்,

சுழன்று கொண்டிருக்கும் மில் கி வேயின் குறுக்களவு 100, 000 ஒளி வருடங்கள். (வினா டிக்கு சுமார் 1,86,282 மைல்கள் வேகத்தில் பாயும் ஒளி ஒரு வருடம் பயணம் செய்தால் அடையும் தூரம் ஒரு ஒளி வரு டம்.) இதுபோல சுமார் 15 மிலியன் கேலக்ஸிகள் இருக்க லாமாம்.

ஒரு காலக்சிக்கும் அடுத்த காலக்சிக்கும் இடையே பல மில் லியன் ஒளியான்டுகள் இடைவெளி இருக்கும்.

வெறும் கண்ணால் பார்க்கும் போது நட்சத்திரங்கள் வானத் தில் வாரி இறைக்கப்படிருப்பது போல உதிரியாக காணப்பட் டாலும் அவை காலக்ஸிகளில் கொத்து கொத்தாகவே இருக் கிறது. காலக்ஸிகளும் அது போல கூட்டம் கூட்டமாகவே இருக்கிறது.

இடம் என்பது எவ்வளவு பிர ம்மாண்டமென்று பேப்பரும் பேனாவும் எடுத்து இதெல்லா ம் கணக்குப் போட்டு பாருங்கள் ….ஸ்ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே..

இனி மண்டை காயவைக்கும் உண்மைகளும் இருக்கின்றன.

பிரபஞ்ச தோற்றம்

இந்த மொத்த காலக்ஸிகளும் அங்கங்கே இஷ்டத்துக்கு இரு ப்பதுபோல தோன்றினாலும் உண்மையில் பிரபஞ்சப்பெருஞ் சுவர் என்னும் கோட்டைத் தா ண்டாமல் அதன் ஒரு பக்கத்தி லேயே இருக்கின்றன,அதாவது மீன்தொட்டியில் நடுவி ல் ஒரு கண்ணாடி தடுப்பு வைத்து மீன்கள் எல்லாம் அதன் ஒரு பக் கத்திலேயே தடுத்து வைத்திருப்பதுபோல. பிரபஞ்சப் பெருஞ் சுவருக்கு அந்தப்பக்கம் என்ன இருக்கிறதென்றே தெரியாது.

முப்பரிமாண அளவில் சொ ல்வதென்றால் இந்த பிரபஞ் சப் பெருஞ்சுவரின் நீளம் கண்ணுக்கெட்டும் தூரம் வரை முடி விலாது போய்க் கொண்டே இருக்கிறது இது வரை பார்த்த அளவில் 500 மில்லியன் ஒளியாண்டு அகலம் 200 மிலியன் ஒளியாண்டு. தடிமன் 15 மில்லியன் ஒளியாண்டு.

நாம் எப்படி பூமி கோளத்தின் மேல் பரப்பில் நடமாடுகிறோ மோஅதுபோல பிரபஞ்சத்தை ஒரு ஊதபட்டுக்கொண்டிருக்கின் ற பலூனுக்கு ஒப்பிட்டால்அதன் வெளிப்புறத்தில் உள்ள எண்ணற் ற வெள்ளைவண்ண புள்ளிகளின் போல காலக்ஸிகள் எல்லாமே பிரபஞ்சத்தின் தோல் போன்ற பர ப்பில் இருக்கின்றன. பலூனை ஊத ஊத புள்ளிகளுக்கிடயே இடைவெளி அதிகரிப்பதுபோ ல பிரம்மாண்டமான பிரபஞ்சப் பரப்பில் கேலக்சிகள் எல்லா ம் ஒன்றைவிட்டு ஒன்று வேகமாக விலகி ஓடிக்கொண்டிரு க்கிறது.

விண்வெளியில் நேராக பிரயா ணித்துக் கொண்டே இருந்தால் முடிவில் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேருவோம். சர் குலர் பஸ் பிரயாணம் போல.நம் பயணத் தில் வழியில் பார்த்த நட்சத்திர ங்களை மீண்டும் மீண்டும் வேறு இடங்களில் பார்ப்போம்.

விண்வெளியில் நெடுந்தொலை வின் காட்சிகள் என்பது காலத்தில் புதையுண்டு கிடக்கி றது. அதாவது நாம் காணும் பல காட்சிகளும் கடந்த காலத் தின் காட்சிகள். தொலைவில் தெரியு ம் அந்த நட்சத்திரங்கள் இப்போது அப்படி இருக்காது மட்டுமல்ல அங்கும் இருக்கா து.

நட்சத்திரங்கள் காலக்ஸிக்களுக் கு இடையே உள்ள வெளியும் வெ றும் வெற்று வெளியல்ல.அது ச க்திகளாலும் நுண் பொருட்களாலும் நிரம்பியிருக்கிறது. நட் சத்திரங்களின் ஈர்ப்பு சக்தியை பொறுத்து தான் அதை சுற்றி யுள்ள வெளியின் இடம் அமைகிறது.

நம் பார்வைக்கு விண்வெளி ஒரு பூப்போட்ட சேலையை நேராக விரித்து பிடித்தது போ ல் தோன்றினாலும் உண்மை யில் அது நன்றாக கசங்கிய சேலையே அதாவது வெளியி ல் இடம் என்பது தாறுமாறாக வளைந்தும் நெளிந்தும் சுருங் கியும் விரிந்தும் இருக்கிறது. இதன் காரணமாக உண்டாகும் லென்ஸ் எஃபெக்டால் நட்சத்தி ர ஓளியும்தாறுமாறாக நம்மை அடைகிறது அதாவது ஒன்று பலவாகவும் பெரிது சிறிதாகவு ம் சிரிது பெரிதாகவும் தெரியும்.

கருந்துளை உப கிரகங்கள் ,கிர கங்கள் நட்சத்திரங்கள் காலக்சிகள் எல்லாம் ஒன்றை ஒன் று சுற்றிவருவதோடு தானும்சுழல்கின்றன. என்றாலும் இ வை தன்னிஷ்டப்படி  சுழல் வதில்லை அதன் பாதையே அப்படி வளைவாகத்தான் இருக்கிறது .அந்த பாதையை நிர்ணயிப்பது அவற்றின் ஈர் ப்பு விசைகள். அதிக பொரு ண்மையான நட்சத்திரங்கள் அதிக ஈர்ப்பு உடையதாக இருக்கும் அதை சுற்றியுள்ள இடத் தையும் ஓளி யையும் கூட ஈர்த்துக் கொள்ளும்.

சுற்றியுள்ள நட்சத்திரங்களை இடங்களை அப்படியே சுருட்டி ஈர்த்து ஏப்பம் விடும் கருந்துளை கள் வேறு இருக்கிறது. இது ஒளி யை கூட தப்பவிடாமல் ஈர்த்துக் கொள்ளும்,

நிலவுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் நிலவின் விட்டம் போல் 108 மடங்கு.

பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் பூமியின் விட்டம் போ ல் 108 மடங்கு

பல கிரகங்கள் நட்சத்திர ங்கள் கேலக்ஸிகள் எல் லாம் இந்த விதியில் இரு ப்பதாக கார்ல் சாகன் எ னும் அறிஞர் கூறுகிறார் . ஆச்சரியம் தான்.

மொத்த பிரபஞ்சத்தில் வெறும் 4 % மட்டுமே அணுக்கள் அவற்றைத்தான் நாம் நட் சத்திரங்களாக கேலக்ஸிகளாக காண்பது மீதம் 74% என்ன வென்று அறியாத Dark Energy யும் 22% Dark Matters ம் தான் இருக்கிறது,

நாமே ஒரு நட்சத்திர மண்டல த்தில் இருந்து கொண்டு பிரப ஞ்சத்தை காண்பதும் அறிவது ம் எப்படியென்றால் ஒரு மா நாடு கூட்டத்தை மேடையில் இருப்பவர் பார்ப்பது போன் றதல்ல கூட்டத்தின் நெரிசலி ல் முண்டியடித்துக் கொண்டிருக்கும் ஒருவர் கூட்டத்தை பா ர்ப்பது போலானதாகும். நமது காலக்சியான மில்கி வே பிர பஞ்சத்தின் பெரும்பகுதியை நம் பார்வையிலிருந்து மறைத் துக்கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தில் எல்லாமே இயக் கத்தில் இருக்கிறது. வேறு வேறு தளங்களில் வேறு வேறு வேகங்க ளில் சுழன்று கொ ண்டிருக்கிறது. பார்க்கும் நாமும் அவ்வாறான ஒரு சுழற்சியில் இருப்பதால் நா ம் நமக்கு அருகே நம் வேகத்திற்கு இணையான இயக்கத்தை ஓரளவு நிலையாக அடையாள ப்படுத்தலாமே தவிர மில்லி யன் பில்லையன் ஒளிவரு ஷம் போன்ற தூரங்கள் கால ங்க ளில் இயங்கும் பிரபஞ்ச இயக்கம் ஒரு மாயாஜால நிகழ்சி தான். காண்பது கரு துவது எல்லாமே காட்சிப்பி ழைதான், உண்மையில் என்ன தான் இருக் கிறது?

அடிப்படையில் ஏதோ ஒன்றின் இடையறாத சுழற்சி,அதன் அலைகள் பிரதிபலிப்புகள் இவைகளைதான் எலக்ட்ரா னாக, புரோட்டானாக அணு வாக தனிமங்களாக , மூலக் கூறுகளாக பொருட்களாக, உலகமாக, நட்சத்திரமாக, இடமாககாலமாக பொருளா க சக்தியாக உயிர்களாக இன்னும் எல்லாவிதமாகவும் கரு திக்கொண்டிருக்கிறோம்.

விஞ்ஞானம் தெரியாத பாமரனை ப் பொறுத்தவரை தன் அனுபவத் துக்கு எட்டிய அளவிலான தட் டையான, இயக்கமற்ற நிலப்பர ப்பும், மேலே ஈபில் டவர் உயரத் துக்கு இழுத்துக் கட்டப்பட்ட வான முகடும் அதில் சில விளக்குகளு ம் தான் உண்மையான உலகம். முற்றத்தில் கயிற்றுக்கட்டிலில் மல்லாந்து படுத்து நட்சத் திரங்கள் சைட் அடிப்பதை பார்த்து சுகமாக தூங்கிவிடுவான் காலையில் நிச்சயம் சூரி யன் வந்து எழுப்பும் என்ற நம்பிக் கையில். காலக்ஸி சுழல்கிறது என்றும் தான் விண்வெளியில் வினாடி க்கு 589 கி.மீ வேகத்தில் (ஒரு ஜெட் விமானத்தை விட 2000 மடங்கு வேகத் தில்) பயணித்து க்கொண் டிருப்பதை அறியாமல். அவனுக்கு விஞ்ஞானிகள் அளவுக்கும் குழப்பமும் திகைப்பு ம் இல்லை.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

3 Comments

  • அருமையான ஆய்வு .எனக்கு ஒரு விச்யம புரியவில்லை .எப்படி உங்களால் எல்லா நதிகளிலும் என் ஓடம் என்பது போல சகல விசயங்களையும் ஒரு கை பார்க்கிறீர்கள் ?

  • அருமையான ஆய்வு .எனக்கு ஒரு விசயம புரியவில்லை .எப்படி உங்களால் எல்லா நதிகளிலும் என் ஓடம் என்பது போல சகல விசயங்களையும் ஒரு கை பார்க்கிறீர்கள் ?

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: