Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருவை வளர்க்கும் தச (10) வாயுக்கள்

ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து முதுமை வரை அவற்றின் வளர்ச்சி அனைத்தும்கருவிலே நிர்ணயிக்கப்படுகிறது. முதுமையி ல் நோய் உண்டாவதற்கும் கருவி ன்பாதிப்புதான் முக்கிய காரணமா கிறது. இதனால் தாயின் ஆரோக்கி யமே குழந்தையின் ஆரோக்கிய மாகும். தாயின்மனநிலையையும், உடல்நிலையையும் பொறுத்தே குழந்தையின் நலம் நன்றாக இருக்குமென்று
மருத்துவ உலகம் கூறுகிறது.
 
முதலில் கருவுற்ற பெண்ணின் கருப்பை வலுவான நிலை யில் இருந்தால்தான் குழந் தை சீராக வளரும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண் மையாகும்.
 
கருவுற்ற பெண்கள் எவ்வா று நடந்துகொள்ள வேண்டு ம் என்றும், எத்தகைய மு றைகளைகடைப்பிடிக்க வேண்டும் என்பதையும், கருவை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதையும் சித்தர்கள் தெளிவாக வரையறுத்துள்ளனர். இதுபோல் ஒரு பெண் கருவுறும் முன் தன் உடலையும், மனதை யும் எவ் வாறு வைத்துக் கொள்ள வேண்டும்என்றும் கூறியு ள்ளனர்.
 
சித்தர்களின் கூற்றுப்படியும், வாழ் க்கை தத்துவத்தின்படியும் கணவன் மனைவிஇருவரும் எந்நிலையில் உறவு கொள்ள வேண்டும், எவ்வா று உடலைப்பராமரித்து பாதுகாத்து க் கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
 
கணவனும் மனைவியும் உறவு கொள்ளும்முன் மலச்சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும். சிறுநீரையும், மலத்தையும் அடக்கி வைத்துக் கொ ண்டு உறவுகொள்வதா ல் உண்டாகும் கரு, பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். குறையுள்ள குழந்தை பிறப்பதற்கா ன பல காரணங்களில் இதுவும் ஒரு காரண மாக அமைகிறது.
 
பொதுவாக ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் இருந்தால் உடல் அதிகம் பாதித்து நோய்கள் அனைத்தும் தொற்றிக்கொள்ள முக்கிய காரணமாகிறது.
 
இதைத்தான் அன்றே சித்தர்கள்,
ஓதுகின்ற மலக்கட்டை ஒழிய வைத்தால்
உடலிலுள்ள உபாதையெல்லாம் ஒடுங்கிப் போகும்
தாது உற்ற சிறுநீரை தெளிய வைத்தால்
சடத்திலுள்ள வேகமெல்லாம் தணிந்து போகும்
 
இந்த பாடலிலிருந்து மலச்சிக் கல்தான் அனைத்து நோய்க ளுக்கும் ஆரம்பம் என்பது தெரியவரும்.
 
மலச்சிக்கல் இருந்தால் மனம் விகாரமடைந்து மனச் சிக்க லை உண்டாக்கி விடும். இதை த்தான் சித்தர்கள் மலச்சிக்கலு ம், மனச்சிக்கலும் ஆதிநோய் கள் என்றனர்.
 
இதைப்பற்றி கடந்த பல இதழ் களில் அறிந்திருக்கிறோம்.
 
மனச்சிக்கல், மலச்சிக்கல் இருக்கும்போது கணவனும் மனைவியும் உறவுகொண்டால் குறையுள்ள குழந்தை உருவாகும்.
 
பாலவாதம் என்ற இளம்பிள்ளை வாதம், பார்வைக் குறைபாடு, காது கேளாமை, கைகால் சூம்பி காணப் படுதல் மற்றும் இன்னும் பல நோய் களை உண்டாக்கும்.
 
இது முதுமையில் அதிகம் பாதிப்புகளை உண்டாக்கும்.
 
மனச்சிக்கலையும், மலச்சிக்கலையும் போக்கி ஒரு பெண் தாய்மையடையும்போது உருவாகு ம் கருவானது ஆரோக்கிய குழந் தையாக மாறும்.
 
தாய்மை அடைந்த பின்பும் அந்தப் பெண்ணுக்கு மனசிக்கல், மலசிக் கல் இருக்கக்கூடாது. இதனால் தான் கருவுற்ற பெண்ணை மகிழ்ச் சியாகவும், சந்தோஷமாகவும் வை த்துக் கொள்ள பல சடங்குகளை நம் முன்னோர்கள் வைத்திருப்ப தை பற்றி கடந்த 2008 ஜூன் இதழ் மற்றும் டிசம்பர் இதழ்களில் குழந் தை மருத்துவம் என்ற தலைப்பில் விரி க அறிந்தோம்.
 
கருவுற்ற தாய்க்கு மேல்கண்ட இர ண்டு சிக்கல்கள் இருந்தால் உடலை யும், கருவையும் பாதுகாக்கும் தச வாயுக்கள் (10 வாயுக்கள்) சீற்றம டைந்து சீர்கெட்டு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
 
1) பிராணன்
2) அபானன்
3) உதானன்
4) வியானன்
5) சமானன்
6) நாகன்
7) கூர்மன்
8) தனஞ்செயன்
9) கிரிகரன்,
10)தேவதத்தன்.
 
உடலை சீராக பராமரித்து பாதுகாப்பதும், அதுபோல் கருவுற்ற பெண்ணுக்கு இந்த தச வாயுக்களின் செயல்பாடு நன்கு இருந்தால்தான் கருவின் வளர்ச்சி யும் சீராகஇருக்கும்.
 
தாய்க்கு தசவாயுக்களின் செயல் பாடு சீராக அமையாமல் சீற்றம் மிகுந்து காணப்பட்டால் அது கரு வில் வளரும் குழ ந்தையையும் பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் பாலவாதம் என்னும் இளம்பிள் ளைவாதம் கொண்ட குழந்தை பிறக்கும்.
 
இதைத்தான் அகத்தியர்
 
சொல்லிய பாலர்வாதம் தொடர்ந்திடும் விவரம்தான்
மெல்லிய கருவில் வந்து விரும்பிய தசவாயுக்கள்
தல்லிய விமலம்தானும் நாரவும் சேருமாகில்
தல்லிய குணங்கள் விட்டு தளர்ந்திடும் நரம்புதானே
 
பத்து விதமான வாயுக்கள் நன்கு சீராக செயல்பட்டால்தான் உடலும், மனமும்புத்துணர்வுடன் காணப்படும். 
 
நன்றி நக்கீரன்

2 Comments

Leave a Reply