Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்ய உறவால் ஏற்படும் எதிர்ப்புச் சக்தியும்! தடுக்க‍ப்படும் நோய்களும்!

ஒவ்வொரு மனிதனையும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுவது நோய் எதிர்ப்பு சக்தி. இது இல்லாத மக்க ளிடம் தான் ஏராளமான நோய்கள் வந்து `பசக்’கெ ன ஒட்டிக் கொள்கிறது. நோயில் சிக்கும் மனிதனி ன் ஆயுள் குறைவதோடு மருத்துவத்திற்காகச் செய் யும் செலவுகள் சொத்துக் களை விற்கும் அளவுக்கு

கொண்டு வந்து விடுகிறது.

ஆனால் பைசா செலவு இல்லாமல் மனிதனுக்கு நோய் எதிர் ப்பு சக்தியை தாம்பத்யம் வாரி வழ ங்குவதாக சமீபத்தைய ஆராய்ச்சி கள் மூலம் தெரிய வந்துள்ளது என் கிறார் சென் னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத் தைச் சேர்ந்த பிரபல `செக்சால ஜிஸ்ட்’ நிபுணர் டாக்டர் காமராஜ். அவர் மேலும் கூறியதாவது:-

ஆண்-பெண் இடையேயான தாம்ப த்ய உறவின் போது ஐ. ஜி.ஏ. என்ற வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிற து. டி.எச். இ .ஏ. என்ற ஹார்மோன் உடலில் கூடுதலாக சுரக்கும். வாரத்தில் 2 முறை உறவில் ஈடுபடுவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் இந்தி யா போன்ற நாடுகளில் பல நூறு கோடிகள் செலவிடப்படு கிறது.

முறையான உறவை மேற்கொ ண்டால் இந்த செலவுகள் அனைத்தும் அரசுக்கு மிச்சமா கும். சமீப காலமாக நம் நாட்டில் மாரடைப்பால் மரணம் அடைவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு முறையற்ற உறவு தான் காரணம் என்று கண்டுபிடித்து ள்ளனர். உறவின் போது ஆணி ன் உயிரணு பெண் உடலில் பாய்வதால் `ஆக்சிடோஜன்’ அதி க அளவில் சுரக்கிறது.

இதனால் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படாது. பெரும்பாலான நாடுகளில் மார் பக புற்று நோய் அதிகரிப்புக்கு முறையற்ற உறவு தான் காரணம் என்று கண்டறியப் பட்டுள்ளது. முறையான உறவு மூலம் நம் நாட்டில் ரூ.125 கோடி அளவுக்கு மருத்துவ செலவு மிச்சப்படும் என்று கணக் கிடப்பட்டுள்ளது. ஆண்கள் பலர் `புராஸ்டேட்’ சுரப்பியில் புற்று நோய் ஏற்ப ட்டு அவதிப்படுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் முறையான உறவை கடைப்பிடித்தால் புராஸ் டேட் புற்று நோயில் இருந்து தப் பி விடலாம். உறவானது மனிதர் களின் வாழ்க்கைத் தரத்தை அதி கரிக்கிறது. இதில் கிடைக்கும் திருப்தி அவர்களை வாழ்வில் முன்னேற்றம் அடையச் செய்கிற து. எந்த தொழிலில் ஈடுபட்டாலும் அதில் முழு ஈடுபாட்டுட ன் இருக்க வைக்கிறது.

தெளிவான முடிவை எடுத்து வெற்றிச் சிகரங்களை தொட வைத்து விடுகிறது. ஊனமுற் றோரின் வாழ்விலும் ஏற்றத் தை ஏற்படுத்துகிறது. அவர்க ளுக்கு இது புதுதெம்பு, உற்சா கத்தை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு சில நா டுகளில் பல்வேறு நோய்களின் பாதிப்பால் தொழிலாளர்கள், ஊழியர்கள், அடிக்கடி `லீவு’ எடு ப்பார்கள்.

இதனால் தொழில்கள் கடும் பாதிப்படையும். ஆனால் முறை யான உறவை கடைப்பிடித் தால் அவர்கள் நோயின்றி வாழ முடியும். இதனால் அவ ர்கள் லீவு எடுப்பது குறைவ தால் ஆண்டு ரூ.1000 கோடி வரை மிச்சமாகும்.

மாரடைப்பை தடுக்கும்:

45 முதல் 59 வயது வரையான ஆண்-பெண்கள் முறையான உறவில் ஈடுபட்டால் டிஎச்இஏ ஹார்மோன் உடலில் அதிக அளவில்சுரக்கும். டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோனும் அதி கரிக்கும் இவை இரண்டும் இதய தசைகளைவலுப்படுத்தி மாரடை ப்பு வராமல் தடுத்துவிடுகிறது.

இந்த ஹார்மோன்கள் இதயத்தி ற்கு நல்ல பாதுகாப்பு அரணாக வும் திகழ்கிறது. இதுபற்றி சமீபத் தில் 918 ஜோடிகளிடம் ஆய்வு மே ற்கொள்ளப்பட்டது. அப்போது உறவில் ஈடுபடு வோரின் இத யம் பலமாக இருப்பது தெரியவந்தது. மாரடைப்பு ஏற்படாத அளவுக்கு அவர்களது இத யம் சிறந்த முறையில் இ யங்கியது தெரிய வந்தது.

`மாத கணக்கில் உறவில் ஈடுபடாமல் இருப்பவர்க ளுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். முறை யான உறவில் ஈடுபட்டால் நம் நாட்டில் ரூ.100 கோடி அளவு க்கு இதய நோய் சிகிச்சைக்கான செலவு மிச்சமாகும்.

இளமையுடன் ஜொலிக்க…

ஆண்-பெண் இருவரும் முறை யான உறவு மேற்கொண்டால் அவர்களது நரம்பு பலம் அடை யும். உடலில் ரத்தஓட்டம் சீராக இருக்கும். முகத்தில் ஒருவித மினுமினுப்பு ஏற்படும். 10 ஆண்டுகள் வரை இளமையாக தோன்றுவார்கள்.

ஆனால் உறவில் சரிவர ஆர் வம் இல்லாமல் இருப்பவர்க ள் நாள் முழுவதும் கவலை யில் மூழ்கி வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் முகம் வெகு சீக்கிரத்திலேயே முதிர் ச்சி அடைந்து விடும். இதனா ல் தான் சிலர் 50 வயதிலேயே வயதானவர்கள் போல் `ஆகி’ விடுகி றார்கள்.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

நம் நாட்டில் ஏராளமான பேர் இடுப்பு தசைபிடிப்பா ல் கடுமையாக அவதிப்பட் டு வருகிறார்கள். ஆண்-பெ ண் இருவரும் வாரம் 2 மு றை உறவில் ஈடுபட்டால் இடுப்பு பலப்படும். தசைப் பிடிப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

பெண்களின் கருப்பைகீழ் இறங்குவதும் தடுக்கப்பட்டுவிடும். சிலபெண்களுக்கு பேசும்போது , இருமும் போதும், சிறுசீர் கசியும். முறையான உறவு மூலம் இந்த பிரச்சினைக்கு உடனடியாக முற் றுப்புள்ளி வைத்துவிடலாம். குழ ந்தை குறிப்பிட்டகாலத்திற்குமுன் பே பிறப்பது தடுக்கப்பட்டு விடும்.

மன அழுத்தம் நீங்கும்:

நம் நாட்டைப் பொறுத்த வரையில் தம்பதி இடை யே குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அந்த உறவுகள் சரி இல்லாததால் அடி க்கடி சண்டை சச்சரவு ஏற்படு கிறது. காரணம் அதில் ஈடுபடும்போது மன அழுத்தம், கவலை, வெகுவாக குறையு ம்.

இதனால் வாழ்வில் ஒரு வித நிம்மதி ஏற்படுவதா ல் குழப்பம் நீங்கும். தற் கொலை எண்ணம் மன தில் சுத்தமாகவராது. எந் த வேலையையும் முழு ஈடுபட்டுடன் செய்ய முடி யும். சிலர் தூக்கமின்மை க்காக மாத்திரை பயன்ப டுத்துகிறார்கள். இந்த தூக்க மாத்திரைக்காக செய்யப்படும் செலவு குறைக்க ப்பட்டால் நம் நாட்டிற்கு ரூ. 100 கோடி வரை மிச்சமாகும்.

விவாகரத்து குறையும்:

தம்பதி இடையே உறவு சீராக இருந் தால் கருத்து வேறுபாடு அடியோடு குறையும். ஒருவருக்கொருவர் விட் டுக் கொடுத்து செல்லும் மனப்பக்கு வம் வளரும். சகிப்புத்தன்மை தானா கவே வந்து அவர்களை குதூகலம் அடையச் செய்யும்.

சின்னச்சின்ன பிரச்சினை களுக்கும் பொங்கி எழும் பெண்கள் கப்-சிப்பாகி விடுவார்கள். கோபத்தை அதிகப்படுத்தும் சுரப்பிக ளை உறவானது வெகுவா க குறைப்பதுதான் கார ணம். எனவே தம்பதியர் உறவை சீர்குலையாமல் பார்த்துக் கொண்டால் எக்காரணத்தை கொண்டும் விவாக ரத்து ஏணியில் ஏற மா ட்டார்க்ள.

இந்த விவாகரத்து குறைந்தால் நம் நா ட்டுக்குரூ.300 கோடிவரை மிச்சமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்று   டாக்டர் காமராஜ் அவர்கள், மாலை மலரில் எழுதியுள்ளார்.

Leave a Reply