Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனிதன் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற சித்தர்கள் கண்டறிந்த‌ வழிமுறைகள்

சித்தர்கள் அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பவர்கள். ஆகையால்தான் தாங்கள் கண்டு அ றிந்த உண்மை சாராம் சங்களையும் தத்துவ ஞானங்க ளையும் பிரபஞ்ச சக்திகளையு ம் ஒன்றன்பின் ஒன்றாக தெளி வாக கூறிவைத்தனர். தான் பெ ற்ற இன்பம் பெறுக இவ்வைய கம் என்ற கொள்கை கோட்பா டு கொண்டவர்கள்தான் சித்தர் கள். ஆகையால்தான் அனைத் து ஜீவ ராசிகளும் ஆரோக்கிய மாக வாழ மருத்துவம் கண்டறி ந்தார்கள். தாங்கள் அருளிய மருத்துவ ஏடுகளில் மனிதன் உட்பட அனை த்து உயிரினங் களுக்கும் மருந்து எழு தியுள்ளனர். அதிலும் மனிதனை ஆற றிவு கொண்ட ஜீவன் என்று குறிப்பிடுகின்றனர். மனிதனால் தான் வாழ்வை

பகுத்தறிய முடியும் என்கின்றனர் சித்தர்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மனித இனம் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற பல வழி முறைகளை குறிப்பி ட்டுள்ளனர். ஆரோக்கிய ம் என்பது மருந்து மாத்திரை களைக் கொண்டது மட்டு மல்ல. மனம் தெளிவடைந் து, புத்தி நன்கு கூர்மையடைந்து, ஆழ்ந்த சிந்தனைகளோடு, அமை தியாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ் க்கை என்கின்றனர். அமைதியும் ஆனந்தமும்கொண்ட வா ழ்க்கைமுறை ஆரோக்கியமாக அமையும்.

இந்த ஆரோக்கிய வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டு ம் என்பதை சித்தர்கள் தெளி வாக வகுத்துரைத்துள்ளனர். அதில் தியான முறை, சரசு வாசமுறை, வாழ்க்கை நெ றிமுறை போன்றவை மிக முக்கியமாக கருதப்படுகிற து .

சரசுவாசத்தின் மூலம் தான் உடலில் ஒடுங்கியிருக்கும் சூட் சமங்களை கண்டறிய முடியும். இந்த சரசுவாசப் பயிற்சி பற்றி வர்ம மருத்துவ த்தில் அகத்தியர் தெள்ளத் தெளிவாக குறி ப்பிட்டுள்ளார். இதுபோல் அனைத்து சித்தர்களும் அவரவர் நிலையில் விளக் கமாக கூறியுள்ளனர். இருப்பினும் அக த்தியர் தன்னுடைய வர்ம பரிகார முறை யில் குறிப்பிடும் முறைகள் மனித உடம் பில் உள்ள நாடி நரம்புகள் உயிர் மூச்சு ஒடுங்கும் இடங்கள், நரம்பு நிதானம், மனநிலை, மனிதனை ஆட்கொள்ளும் சக்தி இவைகளைப் பற்றி மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கமாக குறிப்பிட்டு ள்ளார்.

சரசுவாசத்தினால், உயிர்நிலை ஒடுங்கும் இடங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்ப து பற்றி தெளிவு படுத்தினர்.

இவற்றில் மனிதன் அன்றாட வாழ்க்கை முறை செயல்பாடு கள், இல்லற வாழ்க்கை முறை, ஞானிகள் வாழ்க்கை முறை , தாய் சேய் நலம் முதலான வாழ்க்கை முறைக ளையும், அவற்றை எவ்வாறு நெறிமுறைகளுடன் கடைப்பி டிக்க வேண்டும் என்பதையும் அகத்தியர் ஞான வெட்டி என் ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மே லும் சரநிலை சுவாசம் தெரிந்த வர்களால்தான் நரம்பியல், எலும் பியல் துறைகளையும், அபூர்வ சிகிச்சை முறைகளையும் துல்லி யமாக கண்டறிந்து செயல்படுத் தும் வர்ம மருத்துவர்களாக இரு க்க முடியும் என்றும் கூறியுள்ளா ர்.

சரநிலை சுவாசம், நரம்பு நிதா னம் இவைகளை அறிந்தபின்தா ன் வர்ம விளக்கங்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். அதாவது சரப்பயிற்சி, சரநிலை சுவாசம், உச்சந்தலை சுவா சம் சித்தர்களால் கையாளப்பட்டு வந்த மாபெரும் சக்தி வாய்ந்த உன்னதமான நிலையாகும். இந்த நிலையை அறிந்தவர்கள் மிகவும் சிறப்பாக வர்ம மருத்துவத்தை கையாளுவார்கள் என்பது சித்தர் களின் கூற்று.

இதைத்தான் சித்தர்கள்

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்
பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும்

– என்றார்கள்.

வர்ம மருத்துவர்கள் பொதுவாக பிரபஞ்ச சக்தியை உணர்ந் துதான் வர்ம மருத்துவத்தைக்கை யாண்டு வந்துள்ளார்கள். பிரபஞ்ச த்திற்கும், மனித உடலுக்கும் நெரு ங்கிய தொடர்புண்டு என்பது மருத் து வ உலகம் கூறும் உண்மை.

மேலும் அகத்திய பெருமான், பிர பஞ்சத்தை அறிந்தவர்களே மனித உடலை அறிய முடியும். மனித உட லில் ஏற்படும் மாற்றங்களை தெரி ந்து அவற்றை சீராக்கமுடியும் என்கிறார்.

பிரபஞ்ச சக்திதான், மருத்துவ உலகிற்கு ஒரு மாபெரும் வழிகாட்டியாகும். இத னால் சித்தர்கள் பிரபஞ்ச சக்தி கொண் டு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத் தையும் கொடுக்கும் வழிமுறைகளை கண்டறிந்து சொன்னார்கள்.

நன்றி நக்கீரன்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: