மைசூர் மன்னர் பரம்பரை 400 ஆண்டுகளாக சாபத்தின் பிடியில் சிக்கி தவித்துவருகிறது. 1612ம் ஆண்டு ராஜா உடையார் மைசூரை
விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த திருமலராஜாவிடம் இருந்து கைப்பற்றினார். அப்போது திருமல ராஜாவின் மனைவி அலமேலம்மா ராஜ நகைகளை எடுத்து க் கொண்டு தலக்காட்டு க்கு தப்பிச்சென்றுவிட் டார். தனது கணவரிட ம் இருந்து ராஜ்ஜியம் பறி க்கப்பட்டதால் அவர் ஆ த்திரம் அடைந்திருந்தா ர்.
நகைகளை வாங்க உடையாரின் வீரர்கள் அலமேலம்மா வை கண்டுபிடித்தபோது கைது நடவடிக்கையில் இ ருந்துதப்பிக்க அவர்அருகில் உள்ள காவிரி ஆற்றில் குதி த்து தற்கொலை செய்து கொ ண்டார்.
சாபம்
தற்கொலை செய்யும் முன்பு அவர் உடையார் பரம்பரை க்கு சாபம் அளித்தார். அதாவது தலக்காடு மண்ணாக போகட்டும், காவிரி கரையில் இருக்கும் மலங்கி நீர்ச் சுழிகளால் சூழட்டும், மைசூரின் உடையார்களுக்கு வா ரிசு இல்லாமல் போ கட்டும் என்று சாபமிட்டார்.
அலமேலம்மாவுக்கு சிலை
அலமேலம்மா தற்கொலை செய்துகொண்ட செய்தி அறி ந்த உடையார் மைசூர் அரண் மனையில் அவரது சிலையை வைத்து தெய்வமாக வண ங்கினார். அந்த பழக்கம் இன்றும் தொட ர்கிறது.
சாபம் பலித்தது
அவர் சாபமிட்டதுபோன்றே தலக்காடு மண்ணாக போ னது. மலங்கியில் காவிரி யில் உயிரைக் குடிக்கும் நீர் சுழிகளாக உள்ளது. உடை யார் மன்னர்களுக்கு ஒரு த லைமுறை விட்டு மறு தலைமுறையில் தான் வாரிசுகள் பிறந்தார்கள்.
கடைசி வாரிசு மரணம்
ஒரு மன்னருக்கு வாரிசு இல்லை என்றால் அவர் தன து தம்பியின் மகனை வாரி சாக அறிவித்தார். உடையார் மன்னர்களில் கொண்டாடப் பட்டவரான நல்வாடி கிருஷ் ணராஜ உடையார் வாரிசு இல்லாததால் தனது உடன் பிறப்பின் மகனான ஜெயசாம்ராஜாவை வாரிசாக அறிவி த்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இறந்த ஸ்ரீகண்டதத்தா உடையார் ஜெய சாம்ராஜாவின் மகன் ஆவார். ஸ்ரீகண்ட
தத்தா வாரிசுஇன்றி இறந்தா ர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாரிசு?
ஸ்ரீகண்டதத்தாவுக்கு அவரது அக்கா ராணி காயத்ரி தேவி யின் மகன் கந்தராஜே அர்ஸ் இறுதிச் சடங்குகளை செய்தார். கந்தராஜே அடுத்த வாரி சாக அறிவிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.
நன்றி சிவா, தமிழ் ஒன்இந்தியா