Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உயிருக்கு உலை வைக்கும் (அதீத) உடற்பயிற்சி

ஐம்பது வருடங்களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்ப ம், குத்துச்சண்டை, ஆகி யவற்றை வாலிபர்கள் கற்றுக்கொண்டு உடல மைப்பை பராமரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சிகள் வந்தன. தற் போது ஜிம்மில் 5 முதல் 10 மணிவரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உட லமைப்பை உருவாக்குவதில்

இளைஞர்கள் ஆர்வம் காட்டு கின்றனர்.

சமீப காலமாக படங்களில் பாலிவுட் டில் அமீர்கான், சல்மா ன்கான், கோ லிவுட்டில் சூர்யா, பரத் போன்ற நடிக ர்கள் சிக் ஸ்பேக் உடலமைப்பை கா ட்டும் வகையில் நடித்தனர். இந்த சிக் ஸ்பேக் ஆசை, இன்றைய இளைஞர் களிடம் தீயாக பரவியுள்ளது. அழகி ன் முகவரி எது என்று கேட்டால் சிக் ஸ் பேக் என்பார்கள். அந்த அளவுக்கு சிக்ஸ்பேக்மீது பைத்தியமாக இருக்கி றார்கள். அதற்காக ஸ்டீராய்டு என் கிற ஊக்க மருந்தைப் பயன்படுத்துகி றார்கள். இது உயிருக்கே ஆபத்தானது என்கிறார்கள் மருத்து வர்கள்.

பொதுவாக உடலில்சேரும் கொ ழுப்பு உடலியக்கத்தின் மூல ம் இயல்பாக கரைந்து போகும். சில சமயங்களில் கரையா மல் ஆங்காங்கே சேர்ந்து போ கும். இப்படிசேரும் கொழுப்பைக்க ரைத்து தசைகளாக வயிற்று பகுதியில் உருமாற்றுவதுதான் சிக்ஸ்பேக். ஒரு முறை சிக்ஸ்பேக் கொண்டு வந்து விட்டா லும் அதை தொடர்ச்சியாக பராம ரிப்பது கஷ்டம்.

அதனால் தான் உடற் பயிற்சி மூலம் இதை பெற வேண்டும். அதற்காக ஒரு சிலர் ஸ்டீராய்டு மருந்து கள் எடுத்துக்கொள்கிறார் கள். அதனால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற் படும் ஆபத்து உண்டு.

ஆண்மைக்கு காரணமாக இருக்கும் ஹார்மோன் டெஸ்டோடீரோன் இயல்பாக சுரக் கும் இந்த ஹர்மோனை அதிக அளவில் சுரக்க செய்வது ஸ்டீராய்டு. இந்த ஹார் மோன் அதிகம் சுரந்தால் உடல் எடை கூடும். தசைகள் அள வில்பெரிதாகும். அதன்மூலம் ஏற்படக் கூடிய பக்கவிளைவு கள் பயங்கரமானவை.. முதலில் ஏற்ப டுவது ஆண்மைக் குறைவு தான். மலட்டுத் தன்மை,

குரல் மாற்றம், கல்லீரல் கேன்சர், மார்பில் அதீத ரோம வளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி, பார்வைக்குறை பாடு, போன்றவை ஏற்பட வும் வாய்ப்புள்ளது. அழ கான ஆரோக்கியமான உடலுக்கு அன்றாடம் எளிதான உணவுவகைகளும் இயல்பா ன உடற்பயிற்சியுமே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் சொல்லுவது.

சிக்ஸ் பேக் உடலுக்கு தயாராகுபவர்கள், உட லில் உள்ள கொழுப்பை ஒன்பது சதவிகிதம் ஆக வும், நீரின் அளவி னை 40சதவீகிதம் அளவுக்கு குறைத்தே  ஆகவேண்டு ம். மேலும் புரதச்சத்தை மட்டும் அதிகம் எடுத்து கொள்வதால் கல்லீர ல், சிறுநீரகம், இரண்டும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் முற்றி செயலிழந்து விடக்கூடிய அபாயமும் இரு க்கிறது. அதிக அளவு உடற்பயிற்சி செய்யும்போ து உடலின் வெப்பம் அதிகரிக்கும் இவ்வாறு கூறுகிறார்கள்.

எலும்பு சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறியது.

சர்க்கரை, தண்ணீர், உப்பு ஆகிய மூன்றையும்நீக்கிவிட்டால் உயிர் வாழ்வது கடினம்தான். அதிலும் புரதம், மாவுச்சத் து, இல்லாமல் கடும் உடற்பயிற்சி செய்யும்போ து உடலின் தசை நார்கள் வெளி யே தெரிய ஆரம்பிக்கும். மனித னுக்கு வலிமையான தசைநார்களே தே வை. உடல் வலி, காயம், ஏற்படுவ தைத்தடுக்கவும் முதுகுவலி வராம ல் காக்க வும் தசை நார்கள் பயன்படுகின்றன.

ஆனால் சிக்ஸ் பேக் வைப்பதால் தேவை இல்லாத வலிகள், பிரச்ச னைகள்தான் அதிகம். அழகுக்கு ஆசைப்பட்டு தான் சிக்ஸ்பேக் மாயையில் இளைஞர்கள் படை யெடுக்கின்றனர். ஆனால் நிரந்த ர அழகுக்கு ஒருவர் முறையாக உடற்பயிற்சி செய்து உடலைக் க ட்டுக்குள் வைத்திருத்தலே முக்கியம். சிக்ஸ்பேக் அழகு என் பது தற்காலிகமானதே, நீடித்ததல்ல.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: