Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களின் மலட்டுத் தன்மையைப்போக்கும் பச்சை உணவுகள்

நகரங்களில் வசிக்கும் ஆண்களிடம் மலட்டுத் தன்மை அதிக ரித்து வருகிறது. இதற்கு அறி யாமையும், நெருக்கடியான வா ழ்க்கை முறையையும் பின்பற் றி வருவதே காரணம் என்பதை மறுக்க முடியாது. இதுபோன்ற நெருக்கடியான வாழ்க்கை மு றையால் ஆண்களிடம் மலட்டு த் தன்மை உருவாகி அவர்களுடைய துன்பங்கள் அதிகரிக்கி ன்றன. முறையற்ற உணவுமுறை மற்றும் மோசமான

வேலை நேரங்கள் ஆகிய வை ஆண்களுக்கு பெறும ளவு மன அழுத்தம் கொடு ப்பதுடன், அதன் தொடர்ச் சியாக அவர்களுடைய ஆ ரோக்கியத்திற்கு உலை வைக்கவும் செய்கின்றன. இந்த போட்டி நிறைந்த உலகத் தின் வேகத்தில், ஆண்கள் பலரும் தங்களு டைய அடிப்படை சுகாதாரத்தையும், அதன் காரணமாக வரு ம் மலட் டுத் தன்மையையும் பாதி ப்பதை உணருவதில்லை.

ஆரோக்கியமான வாழ்வுமுறை யையும், ஊட்டச்சத்து மிக்க உண வுகளை உட்கொள்ளுவதன் மூல மும் ஆண்கள் மலட்டுத் தன்மை யை தவிர்க்க முடியும். உடற்பயி ற்சியை தொடர்ந்துசெய்து வருவதால் உடலை உறுதிப்ப டுத்தி வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தையும், சுகா தாரத்தையும் நிலை நாட்டமுடியும். புகைப்பழக்கமும் மலட் டுத்தன்மை வர முக்கியமா ன காரணமாக உள்ளது. புகைப்பழக்கத்தினால் மலட்டுத் தன்மையும், செய ல்பாட்டில் பயமும் ஏற்படு ம். மேலும், அதீதமான அள விற்கு ஆல்கஹால் குடிப்ப தும் மலட்டுத் தன்மையை உருவாக்கும். சில நேரங்களில் சுகாதார மற்ற உணவு, உயிரணுக்க ளின் தரம் மற்றும் அவற்றின் எண்ணி க்கை ஆகிய வற்றாலும் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.

வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறை ந்திருக்கும் உணவை உட்கொள்வ தன் மூலம் மலட்டுத் தன்மையை குறைக்கவும், செயல்பாட் டை உத்வேகப்படுத்தவும் முடியும். வைட்டமின்களான ஏ, சி, ஈ மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை தரமா ன உயிரணுக்கள் அதிக எண்ணிக் கையில் உற்பத்தியாக உதவிசெய்கி ன்றன. இந்த வைட்டமின்களில் பெ ரும்பாலானவை பச்சைக் காய்கறிக ள், ஆரஞ்சு, தக்காளி, பீன்ஸ் போன் றவற்றில் கிடைக்கின்றன. இந்த காய்கறிகளை அதிகளவில் தொடர் ந்து உட்கொண்டு வருவதன் மூலம், உங்களுக்கு மலட்டுத் தன்மை வரு வதை பெருமளவு குறைக்கமுடியும்.

கீரைகள்

உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் கள் மற்றும் தாதுக்கள் பசுந் தழைகளில் பெருமளவு குவிந் துள்ளன. தாதுக்கள் நிரம்பிய தாகஉள்ள கேல், பசலைக்கீரை, ஸ்விஸ்சார்ட், கடுகு இலைகள் ஆகியவற்றில் உள்ள அவசியமான ஊட்டச்சத் துக்கள் மல ட்டுத் தன்மை யை குறைக்கவும் மற்றும் உயிரணுக்களின் திறனை அதிகரி க்கவும் செய்கின்றன.

கேரட்

கேரட் சாப்பிடுவது பார்வையை தெளிவுபடுத்த உதவுவது மட்டுமல்லாமல், ஆண்களின் மலட் டுத் தன்மையை குறை க்கவும் உதவு கின்றன. கருமுட்டையை நோக்கி உயிரணுக் களை எடுத்துச் செல்லும் சத்துக்கள் கேரட்டில் மிகவும் அதி களவு உள்ளதாக ஹார்வார்டு பல் கலைக் கழகத்தின் பொது சுகாதார துறையினரின் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

ஆரஞ்சு

ஆண்களின் கருத்தரிக்கும் திறனை அதிகப்படுத்துவதில் அடர் வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் பெரும் பங்கு வகிக்கின்ற ன. ஒவ்வொரு நிறகாய்கறி அல்ல து பழத்திற்கும் குறிப்பிட்ட வகை யான சுகாதார பலன்களும், கருத்த ரிக்கும் திறனை ஊக்கப்படுத்தும் சத்துக்களும் உள்ளன. ஆக்ஸி ஜன் எதிர்பொருட்களும், வைட்டமின் C-யும் நிரம்பியிருக் கும் ஆரஞ்சுகள் செயல்பாட்டு உத்வேகத்தையும், கருத்தரிக் கும் திறனையும் மேம்படுத்த பெருமளவு பயன்படுகின்றன.

தானியங்கள்

வெள்ளை ரொட்டிகள் அல்லது வெள்ளை அரிசிகளை தேர் ந்தெடுப்பதற்குப் பதிலாக முழு தானியங்களை உணவாக எடுத் துக் கொள்ளும்போது, அது இர த்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தச்செய்கின்றது. உங்களுடைய இன் சுலின் முறையாக செயல்படும் போது, ஹார்மோன் அளவு கள் மிகவும் சமநிலையுடன் காணப்படு ம். இதன்மூலம் உங்களுடைய கருத்தரி க்கும் தன்மை அதிகரிக்கும்.

வெண்ணெய் பழம் மற்றும் பாதாம்

உங்களுடையஉணவுடன் வெண்ணெய்பழம் மற்றும் பாதா ம் கொட்டைகளை சேர்த்துக் கொள்வது நீண்ட கால அளவி ல் உங்களுக்கு மிகவும் உதவும். இந்த உணவுகளில் காணப்படு ம் கொழுப்புகள் உடலுக்கு மிக வும் ஏற்றவையாகும். இவை உங்கள் உடலில் உள்ள இன்சு லின் முறையாக செயல்படவும், அதன் மூலமாக ஹார்மோ ன்கள் சமநிலைப்படவும் உதவி செய்து, உங்களுடைய கருத்தரிக்கும் திறனை அதிகப்படுத்துகின்றன.

பீன்ஸ் மற்றும் பசலைக் கீரை

இயற்கையாகவே கருத்திரிக்கு ம் திறனை அதிகரிக்கும் போ லிக் அமிலம் நிறைந்திருக்கும் உணவுளாக பீன்ஸ் மற்றும் பச லைக் கீரை ஆகியவை உள்ள ன. ஆண்கள் தங்களுடைய உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் அடர்த்தியை அதிகரிக்க போலிக் அமிலம் தேவைப் படுகிறது. போலேட் நிரம் பியுள்ள உணவுகளை அதி கம் உட்கொள்வதன் மூல மாக கருத்தரிக்கும் தன் மையை அதிகரிக்கும் போ லிக் அமிலம் இயற்கையா கவே கிடைக்கும்.

முளை கட்டிய தானியங்க ள் மற்றும் நாற்றுகள்

சமைக்காத காய்கறிகள் அல்லது நாற்றுகளில் உள்ளதை விட 100 மடங்கு அதிகளவிலான என் ஸைம்களை முளை கட்டிய தானியங் கள் கொண்டிருக்கின்றன. ஆண்களின் கருத்தரிக்கும் தன்மையை அதிகப்படு த்த ஆக்ஸிஜன் எதிர்பொருட்களும், புரதங்களும் அதிகளவில் தேவைப்படு கின் றன.

ஸ்ட்ராபெர்ரி

சுவை மிக்க ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி மட் டுமல்லாமல், ஆண்களின் மலட்டுத் தன்மையை நீக்கும் சத்துக்களும் உள்ளன. தங்க ளுடைய கருத்தரிக்கும் தன் மையை அதிகப்படுத்தநினை க்கும் ஆண்கள் தினமும் 90 கிராம் அளவிற்கு இந்த சத்து க்களை உட்கொள்ளவேண் டும்.

– பூபதி லஷ்மண்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: