Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புவி வெப்ப‍மடைவு – தொடர் (பகுதி -3)

உலகளவில் மனித சமுதாயம் உட்பட அனைத்து உயிரினங் களுக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள‍து. இப் புவி வெப்ப‍மடைவு

க‌டந்த அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவை சுட்டெரித்த‍ காட்டுத்தீயின் தாக்க‍ம், நவம்பர் மாதத்தில் ஆந்திர, ஓடிசா மாநி லங்களில் ஏற்பட்ட‍ பைலின் புயல் சேதம், பிலிப்பை ன்ஸ் நா ட்டைச் சூறையாடிய ஹயான் சூறாவளிப் புயலின் கொடு மை ஆகிய அனைத்து

இயற்கை சீற்ற‍ங்களுக்கும் மனிதன் ஏற்படுத்திய புவி வெப்ப‍மடைவே காரணம் என்று ஆய்வாள ர்கள் முடிவுக்கு வந்துள் ள‍னர்.

பிலிப்பைன்ஸ் சூறாவளி ப்புயலின் சேதம் புவி வெப்ப‍மடைவிற்கு பூட்டு ப் போடவில்லை எனில் இதுபோன்ற இயற்கை சீற்ற‍ங்கள் எதிர்காலத் தில் மென்மேலும் அதிகரித்து நம் அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும்.

புவிவெப்ப‍மடைவுக்குக் காரணம்

புவிவெப்ப‍மடைவுக்குக் காற்று மண்டலத்தில் கலந்துள்ள‍ பசுமையாக வாயுக்க‍ள் (கிரீன் ஹவு ஸ் கேஸஸ்) எனப்படும் கரியமில வாயு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு, சி. எஃப்.சி. மற்றும் இதர நச்சு வாயுக்க‍ளே காரணம் என்று ஏற்கெனவே பார்த்தோம்.

இவற்றில் கரியமிலவாயு மட்டுமே ஆபத்தானது. ஒரு முறை காற்று மண்டலத்தில் கலக்கும் கரியமிலவாயு மூலக்கூறு, நூறு  ஆண்டுகள் வரை சிதை யாமல் இருந்து புவி வெப்ப‍ம டைவிற்குப் புடம் போட்டுக் கொண்டிருக்கும்.

நாம் புதியதாகக் கார்பனையோ அல்ல‍து கரியமிலவாயுவையோ உண்டு பண்ணுவதில்லை.

உலகின் பல்வேறு பகுதி களில் நிலத்திற்குகடியி லும் கடல்நீருக்க‍டியிலு ம் ஹடிரோகார்பன் (நில க்கரி, பெட்ரோலியம் போன்ற பொருட்கள்) எனப்படும் எரிபொருள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குமேல் புதையுண்டு கிடக்கின்றது. இதைக் கண்டுபிடித்து வெளிகொ ணர்ந்து நமது அன்றாட உபயோகத்திற்காக இவற்றை அள வின்றி எரிப்ப‍தனால் கார்பனை கரியமில வாயு வாக்கி காற்று மண்டலத்தில் கலக் க‍ச்செய்கிறோம். இதனால் ஏற்பட க்கூடிய பின் விளைவுகளையும் அவற்றின் பாதிப் புக்களையும் சற்றும் உணர்ந்து பார்ப்ப‍தி ல்லை.

புவிவெப்ப‍மடைவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

எரிபொருள் சிக்க‍னம், மின் சிக்க‍னங்களைக் கடைபிடிப் போம்.

புவிவெப்ப‍மடைவைக் கட்டுப் படுத்த ஒரே வழி கரியமில வா யுவின் உற்ப த்தியைக் குறைப் பதுதான். நிலக்கரி போன்ற எரி பொருட்களை எரித்து அனல் மின்சக்தியை உற்பத்தி செய் கின்றோம். இவற்றை எரிக்கும்போது ஏராளமான அளவி ல் வெளியேறும் கரியமில வாயு, காற்று மண்டலத்தை மாசு படுத்துவது மட்டுமின்றி புவி வெப்ப‍மடை விற்கும் புண்ணி யம் கடிக்கொள்கின்றது. மின் சிக்க‍னத்தைக் கடைப்பிடிப்ப‍ தன் மூலம் எரிபொருட்களின் தேவை குறை ந்து கரியமில வாயு வெளியேறுவதும் கட்டுப் படுத்தப்படுகி றது.

வீடு, அலுவலகம், தொழிற்சாலை மற்றும் பொது இடங்களி ல் தேவைப்படும்போது, மட்டுமே மின் விளக்கு, மின் வசிறி, குளிர் சாத னங்கள் (ஏ.ஸி) ஆகியவற்றை உப யோகிக்க‍ வேண்டும். தேவையற்ற‍ போது இவற்றை நிறுத்தி விட வேண் டும். குளிர்ப்பிரதேச நாடுகளில் தே வைப்படும்போது மட்டுமே வெப்ப‍க் கருவிகளை இயக்க‍ வேண்டும். இவ் வ‍ழி முறைகளைப் பின்பற்றினால் மின் சக்தியைச் சிக்க‍னப்படுத்த‍லாம்.

குறைந்த சக்தியில் அதிக திறன் (எனர்ஜி எஃபிஷியண்ட்) அளிக்கும் மின்சாதனங்களை உப யோகிக்க‍ வேண்டும். உதாரணமாக 60வாட் , 100 வாட் குண்டு பல்புகளி ன் உபயோகத்தைக்கைவிட்டு 10 வாட், 15 வாட் சக்தி கொண்ட சி. எஃப்.எல் பல்பு கள், லெட் பல்புகளை உபயோகிக்க‍ வேண்டும். குளிர் சாத ன அறைகளில் போதிய வெப்ப‍த் தடுப்புக்களை (தெர்ம ல் இன்ஸுலேஷன்) அமைத்த‍ல் வேண்டும்.

சாலைகளில் வாகனங்கள் வெ ளியிடும் புகையினைக் கட்டு ப்படுத்த‍ வேண்டும். வாகனங்க ளைப் பழுது பார்த்து சரியான முறையில் பராமரித்தால் இவ ற்றிலிருந்து வெளியேறும் கரு ம்புகையின் அளவைக் குறைக் க‍ இயலும்.

அலுலவகம் செல்வோர் தனித்தனி வாகனம் (கார்) உபயோ கிப்ப‍தைத் தவிர்த்து ஒரே பகுதியில் வசிக்கும் அல்ல‍து ஒரே அலுவலகத்தில் பணி புரியும் மூன்று நான்கு பேர் சேர்ந்து ஒரே வாக னத்தை பயன்படுத்துவ தன் மூலம் எரிபொரு ளை மிச்ச‍ப்படுத்த‍லாம்.

சாலைகளில் வாகனத் தைச் சீராக ஓட்டுவதாலும் மைலேஜ் அதிகரித்து எரிபொரு ளும் பணமும் மிச்ச‍மாகும். வாய்ப்பு இருப்பின் அரசுப் பேரூ ந்தை (பப்ளிக்டி ரான்ஸ் போர்ட்) உபயோகிக்க‍லா ம். அலுவலகம் அருகில் இருந்தா ல் நடந்து செலவு நலம் பயக்கும்.

சமையல் எரி வா யுவைச் சிக்க‍னப் படுத்த‍வும், ஏரா ளமான வழிமு றைகள் உள்ள‍ன• சமைப்பதற்கு பிரஷர் குக்க‍ரைப் பயன்படு த்தினால் நேரமும் எரிபொருளும் மிச்ச‍மாகும். பாத்திரங்க ளை மூடிவைத்துச் சமையல் செய்தல் வேண்டும் கேஸ் அடுப்புக்களைப் பராமரித்து கசிவு இன்றி பார்த்துக் கொ ள்ள‍ வேண்டும்.

2. காடுகளைப்பாதுகாத்து மர ங்களை நடுவோம்.

வ‌ளர்ச்சி என்ற பெயரால் காடுகள் அழிக்க‍ப்படுவதைத் தடுத் து நிறுத்தி சுற்றுச் சூழ லைப் பேணிப் பாதுகாப்ப துடன் அதிக அளவில் மரங்களை நட்டு வளர்த் தால் புவி வெப்ப‍மடைவி ற்கும் பூட்டுப்போட இய லும். ஒவ்வொரு தனி நப ரும் மரம் நடும் பழக்க‍த் தை மரபாகக் கொண்டு பின்பற்ற‍ வேண்டும்.

ந‌மது பிறந்த நாட்களிலும் மற்ற‍ விழா நாட்களிலும் மரக் கன்றுகள் நடும் பழக்க‍த்தை அனைவரும் மேற்கொண்டு பின்பற்றினால் மரங் களின் உற்பத்தி அதிக ரிக்கும். மரங்கள் நடு வதால் மழை வளமு ம் பெருகும்.

தாவரங்கள் தமது உணவைத்தயாரிக்கு ம் ஒளிச்சேர்க்கை நிகழ்வின்போது காற்று மண்டலத்தி லுள்ள‍ கரியமில வாயு வை கிரகித்து எடுத்துக்கொண்டு பிராணவாயு எனப்ப டும் ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன• இதனால் காற்று ம ண்டல ம் சுத்திகரிப்பு அடைந்து உயிரினங் களின் சுவாசத்திற்கு வேண்டிய பிராண வாயு கிடைக்க‍ப்பெ றுகிறது.

வெட்டிவேர் எனப்படும் புல் இனதாவரம் கரியமில வாயு வைக் காற்று மண்டலத்திலிருந் து அதிகளவில் கிரகித்து எடுத்து இதைத் தமது வேர் பகுதிகளில் சேமித்து வைத்துக் கொள்கின்ற து. என்று சமீ பத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்ற ன• அதாவது வெளியில் திரியும் பாம் பைப்பிடித்து பூட்டிவைப்ப‍து போல பூமிக்கடியில் சுமார் 6அடி ஆழம் வரை பரவிச்செல் லும் வேர்ப்பகுதியைக் கொண்ட இத்தாவரத்தை மலைச் சரிவுப் பகுதிகளில் நட்டு வளர்த்தா ல் மழைக்காலங் களில் ஏற்படும் மண் அரிப்புத் தடுக்க‍ப்பட்டு நிலச் சரிவு போன்ற பேராபத்துக்களும் தவிர்க் க‍ப்படும். இதுதவிர மருத்து குணங்களையும் பெற்றுள்ள‍து. இ த்தாவரம் வெட்டி வேர் என்ற தமிழ் ப் பெயராலேயே இது உலகம் முழு வதும் அழை க்க‍ப்பட்டு வருகிறது. வெட்டிவேர் என்று கூளுள் தேடுத ளத்தில் டைப்செய்து இதுபற்றிய மேற்கொண்டு தகவல்களைத் தெரி ந்து கொள்ள‍லாம்.

3. காகிதத்தின் சிக்கனத்தை க் கடைப்பிடிப்போம்.

புவி வெப்ப‍மடைவைக் கட் டுப்படுத்துவதில் காகிதத்தி ன் உப யோகத்திற்கும் பங்கு உண்டு. மரங்களை வெட்டி மரக் கூழ் தயாரித்து அதிலி ருந்து காகிதம் தயாரிக்க‍ப்படுகிறது. ஒரு கிலோ காகிதம் தயாரிக்க‍ இரண்டு கிலோ மரப்பொருட்கள் தேவைப்படுகிற து.

தினமும் லட்சத்திற்கும் மே ற்பட்ட‍ கிலோ கணக்கில் செலவாகும் காகிதத் தயா ரிப்பிற்கு எவ்வ‍ளவு (லட்ச ம்) மரங்கள் வெட்டி வீழ்த்த‍ ப்பட வேண்டும் என்று நினைத்துப் பாருங் கள்.

கணிணி மயமாக்க‍ம் குறைக்க‍வும் அதிகரிக்க‍வும் அனேக வழிமுறைகள் உள்ள‍ன• கணிணி அச்சு உபயோகத் தை கு றைக்க‍ வேண்டும். அவசியமில்லாத காரண ங்களுக்கு அச்சு எடுப்ப தையும் நகல் (ஸெராக் ஸ்) எடுப்பதையும் தவிர் க்க‍ வேண்டும்.

வங்கி ஏ.டி.எம். களில் பணம் எடுத்த‍ பின்வரும் அச்சுச் சீட்டினைத் தவிர் த்தால் தின மும் லட்சக்கணக்கான துண்டுக் காகிதங்களை சேமிக்க‍லா ம்.

இணையதளத்தில் ரயில் பயண சீட் டு பதிவு செய்தால், இதனை அச்சு எடுக்க‍த் தேவையில்லை. கைப் பேசியில் பதிவா ன குறுந்தகவல் சான்று போதுமானது.

மின் ஆட்சி (இ. கவர்ன்மெண்ட்) முறையின் கீழ் கணிசமான அளவு காகிதத்தை மிச்ச‍ப்படு த்த‍லாம். இதேபோல் மற்ற‍ அலுவலகங்களிலும் கூட கா கிதம் இல்லா (பேப்ப‍ர் லெஸ்) நிர்வாக முறையைப் பின்பற் ற‍லாம்.

கழிவுக் காகிதங்களை மீண்டு ம் பயன்படும் வண்ண‍ம் மறு சுழற்சி முறையில் (ரீ சைக்கிள் ) உபயோகிக்க‍லாம்.

இதுபோல் பலவழிகளிலு ம் காகிதத்தின் சிக்க‍னத் தைக் கடை ப்பிடித்தால், இதற்காக மரங்கள் வெட்டி அழிக்க‍ப்படுவது முற்றி லும் குறையும்.

4. மாற்று சக்தி மூலங்களி ல் பனதைச் செலுத்து வோம்.

சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, கரியமில வாயுவை வெளியிடாத மாற்று சக்தி மூலங்களை நடைமுறை யில் உபயோகித்தாலும் கா ர்பன் (கரிமிலவாயு) தொல் லையிலிருந்து விடுபட்டு, புவி வெப்பமடைவைக் கட் டுப்படுத்த‍லாம். சூரிய ஆற் ற‍ல், நீர்மின் சக்தி காற்று சக்தி ஆகியவற்றின் உற்பத் தியில் கரியமில வாயு வெ ளியேறுவதில்லை. இதனால் இவை பசுமை ஆற்ற‍ல் (கி ரீன் எனர்ஜி) என்றும் அழைக்கப் படுகின்றன• இயற்கையாக தொடர்ந்து (தீர்ந்து போகாமல்) இந்த ஆற்ற‍ல் நமக்கு கிடைப்ப‍ தால், புதுப்பிக்க‍ப்படும் ஆற்ற‍ல் (ரெனியூவபுள் என ர்ஜி) என்றும் கூட இவை அழைக்க‍ப்படுகின் றன•

எதிர்காலத்தில் பெட்ரோலிய எரிபொருளுக்கு மாற்று சக்தியாக அணுமின் சக்தி அமையும் என்று கருதப்ப டுகிறது.

நம்நாட்டில் அணுமின் சக்தியைப்பற்றி அச்சுறுத்தும் தகவல் கள் மக்க‍ள் மத்தியில் திணிக்க‍ப்பட்டு ள்ள‍தால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க‍ப் பட்டு வருகின்றது. போதிய பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற்கொண்டு இ தைச் செயல்படுத்தினால், இதன்மூலம் நமக்கு நன்மையே கிடைக்கும் என்று உறுதியா கச் சொல்ல‍ முடியும்.

5. சுற்றுச் சூழலும் புவி வெப்ப‍மடைவும் (என்வயர்ன்மெண்ட் & குளோபல் வாமிங்)

உயிரினங்களைச் சூழ்ந்துள்ள‍ நிலம், நீர், காற்றுமண்டலம் ஆகிய மூன்றும் சேர்ந்த கூட் ட‍மைப்பு சுற்றுச்சூழல் எனப்ப டும். சுற்றுச்சூழல், புவி வெப்ப‍ மடைவு, பருவநிலை மாற்ற‍ம் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு கொ ண்டு பின்னிப்பிணைந்து ள்ள‍ன• ஏதாவது ஒன்றில் ஏற்படும் மாறுதல் மற்ற‍ இரண்டி லும் தாக்க‍த்தை ஏற்படுத்தும். மாசு பாட்டைக் குறைத்து சுற் றுச்சூழலைப் பாதுகாத்தால் புவி வெப்ப‍மடைவைக் கட்டுப்ப டுத்த‍லாம். சுற்றுச்சூழல் மா சுபாடு பற்றி பின்வரும் இதழ் களில் விரிவாகக் காண்போ ம்.

6. விழிப்புணர்வை ஏற்படுத் துவோம்.

புவி வெப்ப‍மடைவு, அதனா ல் ஏற்படும் பாதிப்புகள், அ தைக் கட்டுப்படுத்தும் வழிமு றைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொது மக்க‍ளிடை யே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த‍ வேண்டும். பள்ளி, கல்லூரி பாடத்திட்ட‍ங்களி ல் இது ஒரு தனிப்பாடமாகக் கற்பிக்க‍ப்பட வேண்டும். இதுகுறித்து போட் டிகள், கருத்த‍ரங்குகள் ஆகிய வற்றை ஏற்பாடு செய்தால், பொதுமக்க‍ளிடையே விழிப்பு ணர்வு ஏற்படும். தொலைக் கா ட்சிலும் இதுகுறித்து நிகழ்ச்சி களை ஒளிபரப்பினால் பயனு ள்ள‍தாக இருக்கும்.

முடிவாக, புவி வெப்ப‍த்தைக் கட்டுப்படுத்தும் பணியிலும் நாம் ஒவ்வொருவரும் பங்கே ற்று பொறுப்புள்ள‍ புவி மக்க‍ளாகப் பணியாற்றினால்தான் எதிர்காலத் தலைமுறைக்கு ஓர் இனிய வாழ்வை அமைத் துத் தரமுடியும்.

(புவி வெப்ப‍மடைவைக் கட்டுப்ப டுத்துவதில் ஐ.நா.சபை எடுத்து வரும் சீரிய முயற்சிகளைப் பற்றி அடுத்த இதழில் காணலாம்.)

(பூமி சுழலும்) 

Mr. S. RAJU

சையிண்டிஸ்ட்
நேஷனல் ஜியோகரஃபிகல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்
(நம் உரத்த‍ சிந்தனை மாத இதழிற்காக)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: