Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெற்றோர்களே! உங்கள் ஆண்குழந்தையின் ஆணுறுப்பு வளர்ச்சியில் அதீத கவனம் செலுத்துவது மிக அவசியம்!

பொதுவாக பெற்றோர் பெண்பிள்ளைகளின் உடல் நலனில் கவனம் செலுத்துவதை போல ஆண் பிள்ளைகளின் உடல் நலனில் கவனம் செலுத்துவது பெரும்பாலும் குறைவு. காரணம் அவன் ஆண் பிள்ளை தானே என சாதாரணமாக

இருந்துவிடுவர். 

ஆனால், குறிப்பிட்ட ஒரு வயது வரைக்கும் ஆண் பிள்ளைகளின் உடல் நல னிலும் சிரத்தையுடன் இ ருப்பது மிகவும் முக்கியம். அதிலும் அவர்களின் ஆ ணுறுப்பு தொடர்பில் கொ ஞ்சம் அதிக கவனம் செலு த்துவது அவர்களின் ஆ ரோக் கியமான எதிர்கால வாழ்க்கைக்கு பயன் தரக்கூடியதாக இருக்கும். 

ஆண் பிள்ளைகளின் ஆணுறுப்பை பொறுத்த வரைக்கும் அதில் முன் தோல் காணப்படுவது இயல்பான ஒன்றாகும். சிலருக்கு அது அதிகம் வளர்ந்திருக்கும். சிலருக்கு அது சரி யான அளவில் இருக்கும். எவ்வாறு காணப்பட்டாலும் குறித்த ஒரு வயதுக்குப் பின் னர் அதாவது, கிட்டத்தட்ட 5 வயதுக் குப் பின்னர் முன் தோலானது பின் நோக்கி செ ல்லும் தன்மை யைக் கொண் டிருக்க வேண்டும். 

சிலருக்கு அது இறுக்கமாக இருக்கும். ஆனாலும் கிட்டத்தட் ட 4 – 5 வயதுகளில் அது சரியாகிவிடும். அவ்வாறு குறிப்பிட் ட வயதை அடைந்தும் ஆணுறுப்பின் முன்தோலானது பின் நோக்கி செல்லாமல் இருக்குமாயின் அது அவர்களின் ஆணுறுப்பில் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும். ஏன், சிறு நீரகத்தையும் கூட அது பாதிக்கும். 

இவ்வாறு ஆணுறுப்பின் முன்தோலானது பின்னோக்கிச் செ ல்லாது இருக்குமாயின் சிலவேளைகளில் அது அவர்களின் சிறுநீரக துவாரத்தை சிறியதாக்கி விடும். இவ்வாறு சிறு நீரக துவாரம் சிறியதாக இருப்பதை மருத்துவர்கள் Phimosis எனச் சொல்கின்றா ர்கள். இதனால் சி றுநீரகம் வீக்கமடையு ம் வாய்ப்பு அதிகம். அத்துடன் சிறுநீரை கழிக்கும்போது அவ ர்களுக்குள் வலியும் ஏற்படும். இதனால் அவர்கள் கஷ்டப்ப ட்டு சிறுநீரைக் கழிப்பதுடன் இந்த வலிக்குப் பயந்துக் கொ ண்டு சிலர் சிறுநீரைக் கழிப்பதும் இல்லை.

இந்நிலைமை நீண்டகாலத்துக்கு நீடிக்குமாயின் அது சிறு நீரில் தொற்றை ஏற்படுத்துவதுடன் சிலவேளைகளில் சிறு நீரகத்திலும் பாதிப்புக்களை ஏற்படுத்தி விடுகின்றது. இது காலப்போக்கில் சிறுநீரகங்கள் செயலிழக்கும் அளவுக்கு ஆண் பிள்ளைகளை பாதிக் கின்றது.

எனவே பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமான ஒன் றாகும். ஆகக்கூடியது 5 வய துக்குட்பட்ட உங்களின் ஆண் பிள்ளைகள் சிறுநீர் கழிப்பதில் ஏதே னும் பிரச்சினைகளை எதிர்நோக்கினால் உடனே அவர்களி ன் ஆணுறுப்பை கொஞ் சம் அவதானித்துப் பாருங்கள். அதன் முன்தோல் இலகுவாக பின்னோக்கிச் செல்கின்ற தா? என நீங்களே சோதித் துப் பாருங்கள். காரணம் அவர்கள் உங்களி டம் சொல்லக் கூச்சப்படலாம்.

இதனை இரவு நேரங்களி ல் அவர்கள் சிறுநீர் கழிக் கச் செல்லும்போது உங்க ளால் தெளிவாக அவதானிக்க கூடியதாக இருக்கும். அவ் வாறு அவர்களின் ஆணுறுப்பின் முன்தோலானது பின் நோ க்கி செல்வதில் ஏதேனு ம் பிரச்சினைகள் இருந் தால் உடனே வைத்திய ரை நாடுங்கள். சில அறுவை சிகிச்சைக ளி னூடாக அதனை மிகவு ம் இலகுவாக குணப் படுத்தி க்கொள்ள முடி யும். வெறுமனே சாதாரணமாக எடைபோட் டுவிடாதீர்கள், அது உங்கள் ஆண் பிள்ளைகளின் எதிர்கால த்தில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். 

-தம்பி

3 Comments

  • Charles

    எனக்கு 28 வயது ஆகிறது…எனக்கும் இதே பிரச்சனை இருந்தது…..பின்னர் நான் அறுவை சிகிட்சை செய்து கொண்டேன்…20000 ரூபாய் தான் செலவு ஆனது….தற்போது நலமாக உள்ளேன்….

  • Charles

    sorry ஒரு சின்ன திருத்தம் 2000 ரூபாய் தான் செலவு ஆனது…..

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: