Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரஜினிக்கு 10 ரூபாய் பிச்சைப்போட்ட‍ குஜராத்திய பெண்! – அதிரவைக்கும் செய்தி!

ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கையி ல் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல கண்டாக்டர் காயத் ரி ஸ்ரீகாந்த் ஓர் புத்தகத்தை வெளியிட் டுள்ளார். அந்த புத்தகத்தில் ரஜினிகா ந்த சந்தித்த ஒரு சுவாரஸ்ய மான அனுபவத்தை அவர் பதிவு செய்துள் ளார். பெங்களூ ரில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கு குஜராத்தை சேர் ந்த ஒரு பெண்மணி தரிசனத்துக்காக வந்திருந்தார்.

கோயில் தூணின் ஓரமாக சாய்ந்து அமர்ந்திருந்த ஒருவரின் தோற்றத் தை கண்டு இரக்கப்பட்ட அந்த பெண் தனது கை ப்பையில் இருந்து 10 ரூபா யை எடுத்து அவருக்கு தர்மமாக போட்டார். எப்போதும் போ ல் எளிமையான உடையில் தரிசனத்துக்காக வந்து தூணின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்த ரஜினிகாந்துக்கு அந்த பெண் ணின் செயல் அதிர்ச்சியை

அளித்தது. இருப்பினும், அதை வெளிப்படுத்திக்கொள்ளாத ரஜினிகாந்த் அந்த 10 ரூபாயை வாங்கிக்கொண்டு அமை தியாக கோயிலுக்குள் சென்றார்.

சிறுது நேரம் கழித்து தரிசனம் முடிந்த தும் தனது காரை நோக்கி தனக்கே உரித் தான மிடுக்கான நடையில் அவர் சென் றபோது அவரை அடையாளம் கண்டு கொண்ட அந்த பெண் நடந்த தவறுக்காக ரஜினிகாந்திடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். அந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறிய ரஜினி காந்த், சற்று ம் அலட்டிக்கொள்ளாமல் அந்த பெண் ணிடம் சாவகாசமாக சொன்னார்.. ‘அ ம்மா, என்னுடைய நிரந்தரமான இடம் எதுன்னு அப்பப்போ..

கடவுள் எனக்கு நினைவுப்படுத்திக்கிட் டே இருப்பாரு. இப்ப.. உங்க மூலமா எனக்கு 10 ரூபாய் பிச்சை போட்டு மறு படியும் நான் சூப்பர் ஸ்டார் இல்லைன் னுற உண்மையை எனக்கு அவர் உண ர்த்தி இருக்காரு’ என்று ரஜினிகாந்த் சாந்தமாக பதில் அளித்ததாக டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் அந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

படித்த‍ செய்தி

Leave a Reply