Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண் பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்! (விரிவான அலசல்)

மலட்டுத்தன்மை என்பது ஆண்களிலோ, பெண்களிலோ அல்லது இருவரிலும் கூட்டாக வோ, குழந்தை ஒன்றைப் பெ ற்றுக்கொள்ளும் செயற்பாட் டில் பங்கு கொள்ளும் உயிரிய ல் ஆற்றலின்மையைக் குறிக் கும்.

இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் இருக் கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் கருத்தரி ப்பின்போதும், அல்லது வளர்ந்து வரும் சிசுவை முழுமை யான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை

பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலி ன்மையையு ம் குறிக்கும்.

இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற் றை பல மருத்துவ சிகிச்சை முறைகளால் மாற்றியமைத்து, குழந்தைப் பேற்றைப் பெறுவத ற்கான நவீன சிகிச்சை முறைக ள் கீழே விளக்கப்பெற்றுள்ளன. இச் சிகிச்சைகளில் தமக்கு உத வக்கூடிய சிகிச்சையை தகுதியான மருத்துவ நிபுணர் மூல ம் பெற்று; மலடி, மலடன் என்று வைகத்தார் ஏசாது, ஒதுக்கி வையாது மழலைச் செல்வங்களைப் பெற்று தாய், தந்தை என்ற பெருமையினைப் பெற்று மகிழ் வோடு வாழலாம்.

மலட்டு தன்மையினை இரு வகையாக வகுத்துள்ளனர்.

1. கருவே தரிக்காமல் இருப்பது அல்ல து கரு முட்டை விருத் தி அடையாதிரு ப்பதை முதல் நிலை மலட்டுத்தன்மை எனவும்; (சில பெண்களில் முட்டைகள் அடங்கிய சூலகமே இல்லாது பிறக்கின் றனர். அவர்கள் ஒரு போதும் பூப்பெய்த மாட்டார்கள். அவர் கள் பிறப்பிலேயே மலட்டுத் தன்மை உள்ளவர்களாகக் கருத ப்படுகின்றார்கள்.)

2. கருத்தரித்த பின்னர் கருச்சிதைவு ஏற்படுவது இரண்டாம் நிலை மல ட்டுத்தன்மை (அடிக்கடி கருச்சிதை வு) என வும் அழைக்கப்பெறும். இதற் கு கர்ப்பப்பை சிசுவை வளர் க்கும் தன்மை குன்றி இருப்பதனா லும் கரு பெலவீனமுற்று இருப்பத னாலும் உருவாகின்றது. இப் பிரச் சனைகளை தகுந்த வைத்திய சிகி ச்சை மூலம் தவித்துக் கொள்ளலா ம்.

மகப்பேற்றினை பெற்றிட முக்கிய மாக இருக்க வேண்டிய வை:

பெண்களில் கருக்கட்டும் தன்மை என்பது கர்ப்பமாகி குழந் தை பெறக்கூடிய தன்மை என்பதாகும். பூப்படைந்த ஒரு பெண் மாதவிடாய் நிற் கும் காலம் வரை மட்டுமே மகப்பேற்றை பெற்றுக்கொ ள்ள முடியும். பெண்ணின் இனப்பெருக்கக்காலம் பூப்ப டைதல் முதல் மாதவிடாய் நிறுத்தம் வரை அமைந்திருக்கு ம். ஆனால் செயற்கை முறையில் 50 – 60 வயதுகளைத் தாண் டியும் மகப்பேற்றைப் பெற்றோர் இருக்கின்றார் கள்.

ஒரு பெண்ணின் கர்பப்பைக ளுடன் இணைந்து பக்கத்திற் கு ஒன்றாக இரண்டு சூலகங் கள் அல்லது சினைப்பைகள் காணப்படுகின்றன. குழந்தை யாக பிறக்கும்போதே ஒரு பெ ண் 400,000 முட்டைகளை உருவாக்கக்கூடிய சூல்களுட ன் பிறக்கின்றாள். அவள் பூப் பெய்தியதுடன், மாதவிடாய் சக்கரங் கள் ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு சக்கரத்தின்போதும், ஒரு சூலகம் ஒரு முட்டை யை வெளிவிடும். இம்முட்டை பலோப்பியா குழாய் வழியா க கருப்பப்பையை நோக்கி வரும் போது, பலோப்பியா குழா யில் ஆணின் விந்துடன் இணைந்து கருக்கட்டியபின் கர்ப்ப ப்பையை அடைந்து கருப்பையின் சுவர்களி ல் பதிந்து சிசுவாக வளர ஆரம்பி க்கின்றது. முட்டைகள் கருக்கட் டக் கூடி யதாக விருத்தியடைந்து வெளியேறுவதும், அவை பலோப்பியா குழாயை சென்ற டைவதும் ஹோமோன் சுரப்புகளின் தன்மையில் தங்கியுள் ளது.

ஆண்களில் கருக்கட்டும் தன்மை என்பது, ஒரு பெண்ணில் முதிர்ச்சி யடைந்து வெளிவரும் கருவை சினைப்படுத்தக் கூடிய விந்தணு வைப் பெற்றிருத்தலாகும். இது ஆண் இனப்பெருக்கத் தொகுதியின் விதைகளளில் உற்பத்தியாகும் விந் திலும் அதன் சேமிப்பிலும் தங்கியுள்ளது. அத்துடன் விந்து வெளியேற்றமும், வீரியமுள்ள விந்தணுக்களின் எண்ணிக் கையும் முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றன. பெண்களை போலன்றி, ஆண்களில் தொ டர்ச்சியாக புதிய, புதிய விந் தணுக்கள் உருவாகலாம். (பெண்களில் பிறப்பின்போது உருவா கிய முட்டைகள் மாத்திரமே விருத்தியாகும்)

மகப்பேறின்மைக்கான பொதுவான காரணிகள்:

1. பெண்களில் கருப்பை உட்சுவரின் கட்டி வளர்ச்சி (என் டோமீற்றியோசிஸ்).

2. ஆண்களில் மாற்றமை ந்த விந்தணுக்கள் அல்ல து குறைந்த எண்ணிக்கை யில் விந்தணுக்கள் தோ ன்றுதல், விந்தணுக்களை பெண் குறியில் செலுத்து வதற்கு தேவையான ஆண் குறியின் விறைப்புத்தன்மை (சக்தி) இல்லாதிருத்தல் (இறக் ரையில் டிஸ்பங்சன்).

3. பெண்களில் பலோப்பியன் குழாயில் தடைகள் இருத்தல்.

4. பெண்களில் சூல் தோன்றாதி ருத்தல் அல்லது ஒழுங்கின்றி தோ ன்றுதல்.

5. தம்பதியினர் முழுமையான உடலுறவை செய்ய முடியாதிரு த்தல். அல்லது முழுவளர்ச்சிய டைந்த முட்டை வெளிவரும் காலங்களில் தாம்பத்திய உறவு கொள்ளும் சந்தற்பம் இல்லாதிருத்தல் என்பவாம். பொது வாக மகப்பேறின்மைக்கு ஒன்றிற்கு மேற்பட்ட காரணிகள் காரணங்களாகின்றன.

6. பெண்களில் கருப்பை வாயிலில் தோன்றும் சளி ப்படை ஆனின் விந்தணுக் களைக் கொன்றுவிடுதல்.

7. பெண்களில் முழுமை யான கர்ப்ப காலத்தைக் கொண்டு செல்வதற்கு தே வையான புறோஜெஸ்ரோ ன் எனப்படும் ஓமோன் போதியளவு சுரக்கப்படாமை.

8. பெண்களின் வயது முப்பதுநான்கிற்கு அதிகமாக இருத்த ல்.

ஆண்களின் மலட்டுத்தன்மையின் காரணங்கள்:

1. ஆணின் விந்தில் உயிர் அணு க்கள் இல்லா நிலை

2. உயிரணுக்களின் ஓட்டம் இல்லா நிலை

3. ஓட்ட உணர்வு குறைவாக இருந்து முன்னோக்கி ஊர்ந்து போகாத நிலை

4. விந்தனுவை பீச்சும் திறன் இல்லாமை

5. உயிரணுக்களை கொல்ல க் கூடிய எதிர்மறைப் புரதங் கள் விந்திலே கலந்திருத்தல்.

6. உயிர் அணுக்கள் வெளியேறும் பாதையில் அடைப்புகள் இருத்தல்

7.பிட்யூட்டரி சுரப்பியின் சரிவர செயலுறாத தன் மை.

8. விரைப்பையில் விதை இல்லாமல் இருத்தல்

9. விரைப் பைக்குள் விரை யானது திருகிக் கொண்டு இருத்தல் .

10. விரயில் காயம் ஏற்படுதல், வீக்கம், அடி படுதல் போ ன்றவற்றால் விரையில் ஏற்படும் பாதிப்பு .

11. விரைவீக்கம் எனப்படும் பாதிப்பு

12. முற்றிய காசநோய்

13. விதையானது வெப்பத்தை வெளியே ற்ற முடியாமல் பாதிப்படைவது, இதற்கு நாம் அணியும் மிகவும் இறுக்க மான உள்ளாடைகள் காரணமாகும் .

4. தொடர்ந்து தீய பழக்க வழக்க ங்கள் (மது, புகை மற்றவை )

விந்து பற்றிய சில தகவல்கள்

• ஒரு விந்து தள்ளலில் வெளி யேற்றப்படும் விந்துப் பாய்மத் தின் சராசரி அளவு: 2 முதல் 6 மில்லி லிட்டர்

• வாழ்நாளில் ஒரு மனிதன் விந்து பாய்சும் தடவைகளின் சராசரி எண்ணிக்கை: 5,000

• வாழ்நாளில் மொத்த விந்துப் பாய்மப் பாய்ச்சல்: 17 லிட்டர்

• ஒரு தேக்கரண்டி விந்துப் பாய்மத்தின் கலோரிப் பெறுமானம்: 7

• புணர்ச்சிப் பரவசநிலையின் சராசரி நேரம் : 4 நொடிகள்

ஓர் ஆரோக்கியமான ஆணின் விந்துதள்ளலில் வெளியே ற்றப்படும் விந்து க்கலங்களின் சராசரி எண் ணிக்கை: 40 முதல் 600 மில்லியன்

• ஒரு விந்து முட்டையுடன் கருக்கட்டப் பயணிக்கும் தூரம்: 7.5-10 செ.மீ.

• விந்து ஆயுட்காலம்: உருவாக்கத்திலிருந்து பாய்ச்சப்படும் வரை 2.5 மாதங்கள்

• பாய்ச்சப்பட்ட விந்தின் ஆயுட் காலம்:30 நொடிகளிலிருந்து ஆறு நாட்கள் வரை (கிடைக்கும் சூழலைப் பொறுத்தது)

பெண்ணின் முதல்நிலை மலட்டு த் தன்மைக்கான காரணங்கள்

1. முட்டை, மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் 14 – 15 நாட்க ளில் (சூலகம்) கருப்பை யிலிருந்து முதிர்ந்த கரு வாக வெளியேறவேண் டும். சில பெண்களிற்கு இது நிகழ்வதில்லை .

2. வெளியாகும் முட்டை இணைக்குழாயின் விரல் போன்ற அமைப்புகள் வழியாக கருப்பைக்கு வருவதில் தடை ஏற்பட்டிருக்கலாம். அல்லது உறுஞ்சி எடுக் கும் தன்மைய இழந்திருக்கலாம்.

3 இணைக்குழாயில் அடைப்புகள் இருக்கலாம்

4. கர்ப்பப்பை சுவர் கருவை பதிய வைத்து காக்கும் பக்குவம் பெறாத தன்மையை உடையதாயிருத்தல்

5. சினைப்பட்ட கருவானது தனது பிரயாணத்தின் முடிவில் கர்ப்பப்பையில் சேரும்பொழுது தன் இயல்பு கெடுதல்.

6. கர்பப்பை வாயில் தொற்று நோய், பிறநோய்களின் பாதி ப்புகள் காணப்படுதல் என்ப னவாம்.

பிறக்கப்போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தீர்னாப்பது ஆண்களில் காணப்பெறும் “X”, “Y” என்னும் குரோமோசோம்கள்:

உடலின் ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி வடிவில் 46 குரோமோசோம்கள் உள்ள ன. ஒவ்வொரு குரோமோ சோம் ஜோடியிலும் உங்க ள் தந்தையிடம் இருந்து பெறப்பட்ட ஒரு குரோ மோசோமும், உங்கள் தா யிடம் இருந்து பெறப்பட்ட ஒரு குரோமோசோமும் உள்ளன. இதனாலே, நீங் கள் உங்கள் பெற்றோர்கள் இருவரையும் போல இருக்கலாம்.

கருத்தரித்தல் நிகழும்போது, தந்தையிடம் இருந்து 23 குரோ மோசோம்களும் தாயிடம் இருந்து 23 குரோமோசோம் களும் ஒன்று சேரும். 23 ஆம் ஜோடியை தவிர மற்ற அணைத்து குரோமோசோம் ஜோடிகளும் பார்பதற்கு அச லாக இருக்கும். செக்ஸ் குரோமோசோம்கள் என்று இந்த கடைசி ஜோடி யை அழைப்பார்கள் ஏனென்றால், அவை ஒருவரின் பாலின த்தை நிரூபிப்பனர்.

ஆண்களிடமும் பெண்களிடமும் X குரோமோசோம் மற்றும் Y குரோமோசோம் என்று இரண்டு செக்ஸ் குரோமோசோ ம்கள் உள்ளன. பெண்களிடம் இரண்டு X குரோமோசோம்க ளின் பிரதி கள் இருக்கும். ஆண்களிடம் ஒரு X குரோமோசோமின் பிரதியும் ,ஒரு Y குரோமோசோமின் பிரதியும் இரு க்கும்.

ஒரு தாயிடமிருந்து அவளது X குரோமோசோம்களில் ஒன்று தனது குழந்தைக்கு செல்லும். தந்தையிடமிருந்து, X அல்லது Y குரோமோசோம் செல்லும்.தந்தையிடமிருந்து Y குரோமோசோம் குழந் தைக்குச் சென்றால், அது ஆண் குழந்தையாய் பிற க்கும். X குரோமோசோம் சென்றால், அது பெண் குழந்தையாய் பிறக்கும். இந்த சீரற்ற செயல்பாட் டில், குழந்தையின் பாலி னத்தை தீர்மானிப்பது தந்தையின் X அல்லது Y குரோமோ சோம்களே.

சினைமுட்டைப்பை(ovary – சூலகம்) மாற்று சிகிச்சை

சில வேளைகளில் குறை பாடுடைய குழந்தைகள் பிறந்து பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இது பெண்களிடம் உள்ள ஒரு குரோமோசோம் குறைபா டு இருப்பதனால் ஏற்படுவ தாக மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. சில பெண்களின் சூலகங்களில் இருந்து வெளி வரும் முட்டைகளில் ஒரே ஒரு “X” குரோமோசோம் மட்டு மே இருப்பதனால் பிள்ளைக ள் குள்ளமாகப்பிறத்தல், இத யம் சம்மந்தப்பட்ட நோய்க ள் மற்றும் குறைபாடுள்ள, அறிவு குறைந்த, அல்லது அளவு குறைந்த வளர்ச்சியு டைய பாலு றுப்புக்களுடன் பிள்ளைகள் பிறக்கும் என வைத்திய நிபுணர்கள் கூறு கின்றனர்.

இவ்வாறான ஒரு “X” குரோமோசோம் மட்டுமே வெளி விடும் சினைமுட்டை பை என அழைக்கப்பெறும் சூலகத்தை நீக்கி மாற்றுறுப்பு சத்திர சிகிச்சை செய்வதன் மூல ம் இக்குறையை நிவர்த்தி செய்யலாம். அதற்கு 35 வயதிற்கு குறைந்த பிள் ளைகள் பெற்ற தாய் ஒரு வரின் சூலகங்களில் ஒரு சூலகம் பெற்றப்பெற்று சத்திர சிகிச்சை மூலம் மாற்றீடு செய்யப் பெறுகின்றது. இச் சிகிச்சை முறை இந்தியாவில் 2002 முதல் வெற்றிகரமாக செய்யப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆண்களின் மலட்டுத் தன்மையை அறிவது எப்படி?

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மலட்டுத்தன் மை ஏற்படலாம். பெண்க ளோடு ஒப்பிடும் போது ஆண்களிலே மலட்டுத் தன்மை ஏற்படும் சந்தர்ப்பம் குறைவு. ஆனாலும் மருத்துவ ரீதியாக மலட்டுத்தன்மைக் குரியவர் கணவனா அல்லது மனைவியா என அறிந்துகொ ள்ள இப்போது ஏராளமான வசதிகள் உள்ளன. குழந்தை உரு வாகாமல் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி மட்டு மல்ல கணவனும் தங்களை மருத்துவச் சோத னைக்கு உட் படுத்திக் கொள்வது கட்டாயமாகும். ஏனென்றால் இன்றைய மருத்துவ வளர்ச்சியில் அந்தக் குறைபாடுகளை போக்கிக் கொள்ள நிறைய வசதிகள் வந்துவிட்டன .

ஒரு குழந்தையின் உருவாக்கத்திற்கு ஆணிலே இருந்து வெளிவரும் விந்து (sperm) எனப்படும் உயிரணு பெண்ணின் முட்டையை (ova) அடைந்து கருக்கட்டப் பட வேண்டும். பெண்க ளிலே முட்டையானது மாதவிடாய்க் காலத்தி ன் நடுப்பகுதியிலே சூல கம்(ovary) எனப்படும் உறுப்பில் இருந்து வெளிவரும் , இது வெளி வந்து மூன்று நாட்களுக்குள் அந்த பெண் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு அவளின் பெண் உறுப்பின் உள்ளே ஆணி ன் விந்தணு செலு த்தப்பட்டால் அது அந்த முட்டை யை கருக்கட்ட சந்தர்ப்பம் உள்ளது.

பெண்களிலே சாதாரண மாக ஒரு நேரத்தில் ஒரு முட்டையே (ova) வெளிவரும். ஆனால் ஆண்களில் அப்படியல்ல ஒரு நேர த்தில் மில்லியன் கணக்கான விந்தணுக்கள் வெளிவரும், ஆனாலும் இதில் ஒன்றே முட்டையை சென்றடைந்து கருக்கட்டி குழந் தையாகும்.

இந்த விந்தணுவா னது ஆணின் உறு ப்பிலே இருந்துவெ ளி வரும் சுக்கிலப் பாயம் (seminal fluid) எனப்படும் திரவத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கு ம். அதாவது ஆண் உடலுறவின்போது வெளியிடும் திரவமா னது சுக்கிலப் பாயம்(seminal fluid) எனப்படுகிறது .

இந்த சுக்கிலப் பாயத்திலே விந்து களோடு அவை உயிர் வாழ்வத ற்கான அத்தியாவசியமான பதா ர்த்தங்களும் நிரம் பி இருக்கும். ஆணின் குழந்தை உருவாக்குவத ற்குரிய தன் மையை அறிய இந்த சுக்கிலப் பாயம் பயன் படுத்தப் படுகிறது.

சுக்கிலப் பாயத்தில் இருக்கும் விந்துகளின் எண்ணிக்கை (sperm count) , அந்த விந்துகளின் அசையும் தன்மை (motility), அந்த விந்துகளின் உருவ அமைப்பு (morphology) என்பவையே முக்கிய மாக சோதிக்கப் படுகின் றன. இவை அனைத்தும் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக இருக்கும் போ தே அந்த ஆணால் ஒரு குழந்தையை உருவாக்க முடியும்.

(விந்துகள் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகும். பெண் இன ப்பெருக்கத்தொகுதியில் 24-72 மணி நேரம் உயிர் வாழும். யோனி கால்வாயினுள் இட ப்பட்ட விந்து கருப்பையினு ள் நுளைந்து கருவைத் தேடிச் செல்ல்லக்கூடியதாக இருத்தல் வேண்டும்).

அதாவது விந்துகளின் எண் ணிக்கை மட்டும் தேவையா ன அளவு இருந்தால் போதா து அவை உருவ ரீதியாக உ கந்ததாகவும், அசையும் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

தைராய்டு பிரச்சனையால் மலட்  டுத் தன்மை ஏற்படுமா?

தைராய்டு சுரப்பிக் குறைபாட் டை பரிசோதனைகள் மூலம் கண்டறிய இயலும். இச்சுரப்பி மிகுதியாகச் சுரந்தாலோ, மிகவும் குறைவாகச் சுரந்தா லோ மலட்டுத் தன்மை ஏற்படு ம்.

தைராய்டு சுரப்பிக் கோளாறினால் ஏற்படக் கூடிய விளை வுகள்:

முப்பத்தாறு நாட்கள் இடை வெளியில் மாதவிலக்குத் தோன்றினால், சில வேளை களில் மாத விலக்கே ஏற்ப டாமல் இருந்தால் அல்லது அடுத்தடுத்து மாதவிலக்கா கி, குறைந்த உதிரப்போக்கு ம், அதுவும் துர்நாற்றத்துடன் இருந்தால் முட்டை வெளிப் படாது. இயல்பான மாதப்போக்கு இருந்தா லும் முட்டை வெளி வருவதில் சிக்கல் ஏற்படும்.

உடல் எடை அதிகரிப்பு, அதிகமான கொழுப்பு, முட்டை வெளிப்படாத நிலை சேர்ந்ரு இருக்கும். இத்தகை ய பிரச்சனையால் முட்டை வெளி யிடப்படாத குறைபாடுள்ளவர்கள் உணவு முறை மாற்றம் செய்து கொ ழுப்பைக் குறைக்கலாம். அதிகமாக கொழுப்பைக் குறைத்தாலும் மலட் டுத் தன்மை வரும்.

அதிக உடற்பயிற்சி செய்தாலும் முட் டை வெளிப்படுவது தடைபடும். நீண் ட தூரம் ஓட்டம் ஆபத்தானது. மாதவிலக்கு ஒழுங்காக வராத நிலையிருந்தால் ஓட்டம் மற்றும் உடற்பயிற்சியைக் குறைத்துக் கொள்ளலாம்.

பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம் இருந்தால் முகம் மற் றும் உடலில் அதிகப்படியாக முடி முளைக்கும். முட்டை வெளி ப்படுவதில் சிக்கல் ஏற்படும்.

விந்து அணுப் பரிசோதனை:

தம்பதினர்க்கு குறிப்பிட்ட காலத்திற்கு மேலாக குழ ந்தைப் பாக்கியம் இல்லா திருந்தால் ஆணின் விந் தைப் பரிசோதித்து கருத்த ரிப்பதற்கு தகுதியான விந் தணுஇருக்கின்றனவா என அறிகின்றனர். கருத்தரிப்பு என்பது கணவன் – மனை வி இருவருடனும் தொடர் புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கு காரண ம் ஆணா அல்லது பெண்ணா என அறிய, முதலில் ஆணின் விந்தணுவை பரிசோத னை செய்கின்றனர்.

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரி யான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன அழு த்தம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண் களுக்கு விந்தணு உற்பத் தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும். இந்தப் பரிசோதனை யின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.

பரிசோதிக்கப்படுபவை:

* ஆய்வகத்தில் எடுத்துச் செ ல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.

* விந்தணுக்களின் எண்ணி க்கை.

* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.

* இயல்பான உயிரணுக்கள்.

* பாக்டீரியா போன்றவை.

* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.

2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவி ல், ஒவ்வொரு மில்லியி லும் 4 கோடி உயிரணுக் கள் இருக்க வேண் டும். இரண்டு கோடி அணுக்க ளுக்கும் குறைவாக இரு ந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார் கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது குறைந்த பட்சம் -நாற்பது மில்லியன் அணு க்கலாவது இருக்கணும் . அதற்க்கு குறைந்தால் நல் லதில்லை. .நூற்று இருபது மில்லியன் அணுக்கள் இருந்தால் மிக நல் லது. இந்த இடைவேளைக்கு உள் இருப்பது சிறந்தது

விந்தணுவில் 70 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபா டான அணுக்களாக கருதப்படும்.

விந்துவில் உள்ள அணுக்க ளில் சுமார் 80 சதவிகித அள வு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.

விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தா ல், நோய்த் தொற்று ஏற்பட் டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக் களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.

நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிர ணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக் கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சிய மாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்பு டன் மேற்கொள்ள வேண்டும்.

சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப் படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள் ளவையாக உருவாகின்றன.

அடுத்த முறை நல்ல விந்தணுக் கள் உற்பத்தியாக வாய்ப்பு கள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.

(புதிய ஆராச்சிகளின்படி மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்ப தே இன்றைக்கு குழந்தையின் மைப் பிரச்சனை எங்கும் தழை த்து வளர்வதன் முக்கிய கார ணம் என்கின்றனர் ஆராய்ச்சி யாளர்கள்.

விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் D குறை வது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும். தேவையான அளவு வைட்ட மின் D உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமைய டைகின்றன

தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகி றது. அதற்கு அவர்கள் செ ய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓர மாய் வைத்து விட்டு கொ ஞ்சநேரம் வெயிலில் கால்களுக்கு இதமாக நடந்து வருவது தான்!

இந்த ஆய்வை நடத்திய போது இந்த ஆய்வில் கலந்து கொ ண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்க ளின் வலிமையும், எண்ணிக்கை யும், உருவமும் பல மடங்கு மேம்ப ட்டதாகச் சொல்கிறார் இந்த ஆராய் ச்சியை நடத்திய மருத்துவர் கிளார் க்.

இந்த சோதனையில் மூலம் 35 விழு க்காடு பேர் குழந்தை யின்மைச் சிக் கலையும் தீர்த்திருக்கின்றனர் என்ப து வியப் பூட்டுகிறது. அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைப ட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர டீ கடை க்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் D யும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந் தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

புகை, மது, காபி போன்றவ ற்றை உட்கொள்ளாமலும் அள வான உடற்பயிற்சி மேற்கொள் வதும் என உடலை ஆரோக் யமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாகவும் அமையும்.)

காரணங்கள்

கருச்சிதைவானது பல காரணங்களால் ஏற்படலாம். அவை யாவும் முற்றிலுமாக அறியப்படவில்லை. தெரிந்த காரணங்களில் சில மரபியல்; கருப்பை; வளரூக்கி சார்ந்த அசாதாரண நிலமைகள், இனப்பெருக்கத் தொகுதியில் ஏற்படும் தொற்றுக்கள், இழைய நிராகரிப்பு போன்றனவாகும்.

முதல் மூன்று மாத காலம்

அனேகமான மருத்துவத்தில் தோ ன்றும் மூன்றில் இரு பங்கு தொட க்கம் நான்கில் மூன்று பங்கு கருச்சிதைவானது முதல் மூன்று காலத்திலேயே நிகழ்கின்றது. முத ல் 13 கிழமைக்குள் நிகழும் கருச்சிதைவில் அரைவாசியான வற்றில் நிறப்புரி அல்லது

நிறமூர்த்தத்தில் ஏற்படும் அசாதா ரணமே காரணமாக உள்ளது.

இது தவிர புரோகெஸ்தரோன் (progesterone) வளரூக்கியின் குறைபாடும் கருச்சிதைவுக்கு காரணமாகின்றது. இந்த வளரூக்கியானது மாத விடாய் வட்டத்தின் பின் அரைவாசிக் காலத்தில் குறைவாக இருப்பின், அந் தப் பெண்களுக்கு புரோகெ ஸ்தரோன் குறைநிரப்பு பொருளாக முதல் மூன்று மாத காலத்துக்கு வழங்கப் படும். ஆனாலும் புரோகெஸ்தரோன் குறைநிரப்பு பொருளா க வழங்கப்படும்போது, கருச்சிதைவுக்கான இடர் குறைக்க ப்படுவதாக ஆய்வுகள்மூலம் சரிவர நிரூபிக்கப்படவில்லை.

மூன்று தொடக்கம் ஆறு மாத காலம்

இக்காலத்தில் நிகழும் 15% மான கருச்சிதைவு கருப்பையில் ஏற்படும் இயல்பற்ற மாற்றங்கள், கருப்பையில் ஏற்படும் நார் த்திசுக் கட்டிகள், கருப்பை வாய் செயல்திறனற்ற தன் மை போன்றவற்றால் ஏற்படும். இவை குறைப்பி ரசவத்துக்கும் காரணமாய் அமைவதுண்டு.

ஒரு ஆய்வு இந்தக் காலத்தில் நிகழும் 19% கருச்சிதைவுக்கு தொப்புட்கொடியில் ஏற்ப டும் பிரச்சனைகள் காரண மா வதாகக் கூறுகின்றது. நஞ்சுக்கொடியில் ஏற்படு ம் பிரச்சனைகளும் இக்கா லத்தில் நிகழும் கருச்சி தைவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொதுவான இடர் காரணி கள்

ஒன்றுக்கு மேற்பட்ட முதிர்கரு இருக்கும் நிலையில் இவ்வகை கருச்சிதைவுக்கான நிகழ்தகவு அதிகரிக்கிறது.

ருத்தரிப்பின் போது சில பெண்களில் நீரிழிவு நோய் ஏற் படுவதுண்டு. இது கருவளர்ச்சிக்கால நீரிழிவு நோயாகும். கருத்தரிப்பின்போது போதிய கவனமெடுத்தலால் இது கட்டு ப்படுத்தப்படக் கூடிய ஒரு நிலையாக இருக்கும். அவ்வாறி ன்றி, கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயைக் கொண்டிரு ப்பவர்களிலும் கருச்சிதைவுக்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும்.

சூலகத்தில் பல நீர்க்கட்டி கள் இருக்கும் நிலையும் கருச்சிதைவிற்கான இடரை அதிகரிக்கும். இந்த நோய்க்குறியை உடைய பெண்களில் 30-50% மானோரில் முதல் மூன்று மாதத்தில் கருச் சிதைவு ஏற்படுவதாக அறியப்படுகிறது. கருத்த ரிப்புக் காலத்தில் Metformin மருந்து சிகிச்சை பெற்றுக் கொண்டவர்களில் கருச்சிதைவு குறைந்திருப்பதாக இரு ஆய்வுகள் கூறின. ஆனாலும் 2006 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு மீளாய்வு இதனை மறுத் ததுடன், வழக்க மான Metfor min சிகிச்சை பெறுவதையும் பரிந்துரை செய்யவில்லை.

கருத்தரிப்பு காலத்தில் உயர் இரத்த அழுத்தம் (Pre-eclam psia) ஏற்படுவதும் ஏற்படுத்தும் வாய்ப்புண்டு. அதேபோல் மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களில் (Pre-eclampsia) ஏற்படும் சந்தர்ப்பமும் அதிகமாகும்.

தீவிரமான தைராய்டு சுரப்பு க் குறை இருப்பவர்களிலும் கருச்சிதைவு அதிகம் நிகழ லாம். இநோயின் தாக்கம் குறை வாக உள்ளவர்களில் கருச்சிதைவுடன் தொடர்பு காட்டப்பட வில்லை. மேலு ம் இக்குறிப்பிட்ட நோயால் தன்னுடல் எதிர்ப்புக் குறை பாடு போன்ற, நோய் எதிர் ப்பாற்றல் முறைமையில் ஏற்படும் சில நிலைகள், கருச்சி தைவைக் கூட்டுகின்றன.

உருபெல்லா (Rubella) என்றழைக்கப்படும் தீ நுண்மம் ஒன் றினால் ஏற்படும் உருபெல்லா தட்டம்மை (Rubella measles) அல் லது ஜேர்மனி தட்டம் மை, கிளமிடியா நோய் போன்ற நோய்களாலும் கருச்சிதைவுக்கான இடர் அதிகரிக்கும்.

புகைபிடிக்கும் அல்லது புகைக்கும் பழக்கமுள்ள பெண்க ளுக்கும், புகைக்கும் பழக்கமுள்ள தகப்பனைக் கொண்ட கருவிலும் இவ்வகை கருச்சிதவு ஏற்படும் சந்தர்ப்பம் கூடுவதாக அறியப்பட்டுள்ளது. கொக்கெயின் பாவ னையும் கருச் சிதை வுக்கு காரணமாக லாம்.

குழந்தை வெளியேற ஆயத்தமாகும் நிலையில் திறக்க வேண்டிய கருப்பை வாய்ப்பகுதி முதலிலேயே திறந்து கொள்ளல்.

உடல் அதிர்ச்சி, நச்சு பொருட்கள் நிறைந்த சூழலில் போதல், IUD] போன்ற கருத்தடை உபகரணத்தை கருக் கட்டல் நேரத்தில் கருப் பையினுள் கொண்டிருந் தமை போன்ற நிலமைக ளும் கருச்சிதைவுடன் தொ டர்பு கொண்டிருக் கலாம்.

Paroxetine, Venlafaxine போன்ற மன அழுத்தத்திற்கு எதிரான சில மருந்துகள் பாவனை போன்றனவும் கருச்சிதைவுக்குக் காரணமாகலாம்

கருத்தரிக்கும் பெண்ணின் வயதும் கருச்சிதைவுடன் நெருங்கிய தொட ர்புள்ளதாகக் கருதப்படுகிறது. வயது அதிகரிக்கும்போது கருச்சிதை வுக்கான சந்தர்ப்பமும் அதிகரிக்கும்.

பெற்றோரின் வயது அதிகரிக்கை யில் கருச்சிதைவின் அளவும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். 25-29 வயதுடைய ஆண்களைக் காட்டிலும், 25 வயதுக்குட்பட்ட ஆண்களில் கருச்சிதைவு நிகழ்வதற்கான தன்மை 40% ஆல் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அதே ஆய்வு 25-29 வயதின ரைவிட, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் கருச்சிதை நிகழ்வதற்கான வாய்ப்பு 60% ஆல் அதிகரிப்பதாகக் கூறுகின்றது. வேறொரு ஆய்வு, இவ்வாறான கருச்சிதைவுகள் வயது கூடிய ஆண்களில் நிகழ்வது பொதுவாக முதல் மூன்று மாதங்களிலாகும். இன்னுமொரு ஆய்வு பெண்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75% கருத்தரிப்பு கருச்சிதைவில் முடிவதாகக் கூறுகின்றது.

சிகிச்சை குறைகள்:

செயற்கை கருத்தரிப்பு முறை – பரிசோதனைக்குழாய் குழந்தை

சில காரணங்களால் கலப்பின் போது ஆணின் விந்தும், பெண்ணின் முட்டையும் இணைந்து கருவணு உருவாக்கத் தை ஏற்படுத்தாத போது விந்தையும், முட்டையையும் Petridish எனப்படும் கண்ணாடி கிண்ண த்தில் வளர்ப்பூ டகத்தில் இணைத்து கருவ ணுவை உருவாக்கி பெண் ணின் கருப் பைக்குள் வைத்து வளர்க்கும் முறை  பரீட்சிக்கப்பட்டு என்ப துகளில் இச்சோதனை வெற்றி பெற்று பரிசோதனைக் குழாய்  குழந்தைகள் உருவாக்கத்திற்கு வழி அமைத்தது.

படியெடுப்பு (Cloning)

ருவணு உருவாக்கத்திற்கு ஆணினது விந்து தேவை யென்ற நிலையை தகர்த்த புரட்சியே அடுத்த முக்கிய கட்டமான படியெடுப்பு இனப் பெருக்கமாகும். இதன்படி பெண்ணினது முட்டையிலு ள்ள கரு நீக்கப்பட்டு சாதாரண உயிரணுவிலுள்ள கரு செ லுத்தப்பட்டு கருவணுவை உருவாக்கி முளையமாக்கி பின் னர் கருவறையினுள் வளரச்செய்து பிரசவிக்கும் முறை யாகும். இதுவே படியெடுப்பு (Cloning) எனப்படுகிறது.

ஒத்த குழந்தைகள்

பரிசோதனைக்குழாய் குழந்தைக ளுக்கான முறையிலோ அல்லது படியெடுப்பு முறையிலோ கரு வணுவை உருவாக் கி அதனை வளர்பூடகத்தில் வளர்க்கும் போது முதல் ஓரிரு நாட்களில் 2, 4, 8, 16, 32 என உருவாகும்.

முளையத்திலுள்ள குருத்தணுக்கள் எனப்படும் உயிரணுக் களை மீண்டும் தனித்தனியாக பிரி த்தெடுத்து வெவ்வேறாக வளர்த்து பரீட்சிக்கப்பட்ட போது அவைகள் ஒவ்வொன்றும் தனித்தனி கருவணு வாக செயற்பட்டு தனித்தனி முளை யங்களை தோற்றுவித்தது. அவை களை வெவ்வேறு பெ ண்கள் மூல மாக கருத்தரிக்கச்செய்ய வைக்க முடியும் என்பது உறுதிசெய்யப்பட் டது. இதன் மூலம் ஒரே நேரத்தில் இயல்பிலும் தோற்றத்திலும் ஒத்த பலரை வெவ்வேறு பெண்கள் மூல மாக பிரசவிக்கச்செய்ய முடியும் என்ற புரட்சியை விஞ்ஞானம் கொள்கையளவில் நிரூபி த்தது.

இதனால் இக்குருத்தணுக்களை முளைய குருத்தணுக்கள் (Embryonic Stem Cells) என அறியப்படுத்தப்பட்டன. இக்கண்டு பிடிப்பு தாவரவி யலிலேயே இன்று வரையும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனது.

இரட்டைக் குழந்தைகள் – சாதாரண இரட்டை (Identical twins)

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு சூல் பையிலிருந்து ஒரு சூல் முட்டை வெளிப்படும். அபூர்வமாக சில சமயங்க ளில் இரண்டு முட்டைகள் வெ ளிப்படும். அல்லது ஏதாவது காரணங்களால் ஒரு முட்டை இரண்டாகப் பிளவுபட்டு விடு ம். இந்தச் சமயங்களில் ஆண், பெண் சேரும் போது இரண்டு முட்டைகளும் இரு வேரு விந்துக்களால் கருவுயிர்க்க ப்பட்டு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இங்கு எப்போ துமே விந்துக்களும் முட்டைக ளும் வெவ்வேறாக இருப்பதால் பிறக்கும் குழந்தைகளின் மரபுக் கூறும் வெவ்வேறாக இருக்கும். எனவே குழந்தைக ளுக்கிடையில் உருவ ஒற்றுமையோ பிற பண்புகளில் ஒற்று மையோ குறிப்பிடத்தக்கதாய் இருப்பதில்லை.

ஒன்று போலிருக்கும் இரட்டை (Non Identical Twins)

கருவுயிர்க்கப்பட்ட முட்டை, பிளவின் பொது (Clevage) சில சமயங்களில் இயல்புக்கு மாறாக இரண்டாகப் பிரிந்து விடும். இவ்வாறு இரண்டாகப் பிரிந்த கருவுயிர்க்கப்பட்ட முட்டை இரு குழந்தைகளாக உருவாகின்றன. ஒரு வேளை கருவுயிர்க்கப்பட்ட முட்டை சரியாக இரண்டாகப் பிரியவில்லையெனில் பிறக்கும் குழந்தைகள் ஒட்டிப் பிறக்கின்றன. இங்கு ஒரு சூல் முட்டையும், ஒரு விந்துமே காரணமாக இருப்பதால் குழந்தைகளின் மரபுக் கூறும் ஒன்றேயாகும். எனவே இக் குழந்தைகள் எல்லாப் பண்புக ளிலும் ஒன்று போலவே இருக் கின்றன. ஆனால் குழந் தையின் வளர்ச்சியில் சூழ் நிலையும் முக்கியப் பங்கு வகிப்பதால் சூழ் நிலை வேறுபாட்டால் இத்தகைய குழந்தைகளுக்கிடையே சிறிய வேறுபாடுகள் காணப்படலாம்.

பதிலித்தாய்

பதிலித்தாய் (Surrogate mother) என்பவர் வேறொரு தம்பதிக்கா கவோ, அல்லது ஒரு தனியான மனிதருக்காகவோ கரு த்தரிப்பு க்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெ டுத்து கொடுப்ப வர் ஆவார். இவர் அதனை பண ம் பெற்றுக்கொண்டு செய்வாரா யின், வாடகைத்தாய் என அழைக்கப் படுவார். பதிலித்தா யின் கருமுட்டையே கருவுருவாக்கத்தில் உதவியிருப்பின், பதிலித்தாயே குழந்தையின் மரபியல் தாய் ஆவார்.

சில சமயங்களில் வேறொ ரு பெண்ணின் முட்டையா னது, ஒரு ஆணிடமிருந்து பெறப்படும் விந்துடன் கரு க்கட்டலுக்கு உட்பட்ட பின்னர், அந்த முளையமா னது பதிலித்தாயின் கருப் பையினுள் வைக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படுமாயின், பதிலித்தாயானவர் குழந்தை யுடன் மரபியல் தொடர்பெதுவும் அற்றவராக இருப்பார். அந்நிலையில் கருசுமக்கும் தாய் ஆக மட்டுமே இருப்பார்.

பதிலித்தாய் ஒரு குழந்தையின் கருக்காலம் மட்டுமே அக் குழந்தைக்குத் தாயாக இருப்பார். சிலசமயம் தாய்ப் பாலூட் டலுக்காக தொடர்ந்து சில மாதங்கள் வரை தாயாக இருக்க அனுமதிக்கப்படுவார்.

பதிலித்தாயானவர் மரபியல் தாயாகவும் இருப்பாராயின், அவர் பொதுவாக செயற் கை விந்தூட்டல் மூலம் கரு த்தரிப்புக்கு ஆட்பட்டிருப்பா ர். அவருக்குச் செலுத்தப் படும் விந்தானது குறிப்பி ட்டதம்பதிகளில் ஆணின் விந்தாகவோ அல்ல து வே றொரு ஆணிடமிருந்து பெ றப்பட்டு குளிர்நிலை யில் பாதுகாக்கப்பட்டு வரும் விந்தாகவோ இருக்கலாம். வெளிச் சோதனை முறை கருக்கட்டலிலும் இவ்வாறாக பதிலித்தா யைப் பயன்படுத்தவும் முடியும். அந்நிலையில் குழந்தைக் குத் தாயாகப் போகும் பெண் ணின் முட்டையும், தகப்பனா கப் போகும் ஆணின் விந்தும் கருக் கட்டலுக்கு உட்படுத்தப்பட்டு, பின் னர் கருமுட்டை பதிலித்தாயின் கருப்பையினுள் வைக்கப்படும். சிலசமயம் முட்டை அல்லது விந்து அல்லது இரண்டுமே கூட வழங்கி/வழங்கிகளிடம் இருந்து பெறப்பட்டவையாகவும் இருக்கக் கூடும்.

குழந்தையைச் சொந்தமாக்கிக்கொள்ளப் போகும் பெற் றோரில் ஒருவரோ, அல்லது இருவருமோ மலட்டுத்தன்மை உள்ளவராக இருப்பின், அ ல்லது பெற்றோர் தற்பால் சேர்க்கை உள்ளவராக இருப்பின், அல்லது பெண் கருத்தரிப்பதிலோ, அல்ல து குழந்தைப் பேறிலோ விருப்பமற்றவராக இருப் பின், அல்லது பெண் கருத் தரிக்கவோ, குழந்தை பெற்றுக்கொள்ளவோ முடியாத நிலை அல்லது மருத்துவ ரீதியான பிரச்சனைக ளை எதிர்நோக்க வேண்டியிருப்பின் இவ்வாறான பதிலித்தா ய் ஏற்பாட்டைச் செய்வார்கள்.

சிலசமயம் ஒரு தனி பெண் அல்லது ஆண், வாழ்க்கைத் து ணையை தேடிக்கொள்ளாம ல், தனக்குரிய மரபியல் குழ ந்தையைப் பெற்றுக் கொள் ளும் நோக்கில், முறையே தனது கருமுட்டையை அல் லது விந்தைக் கொண்டு உரு வாக்கப் படும் முளையத்தை பதிலித்தாய் மூலம் பெற்றெ டுத்துக் கொள்வதற்காய் இத் தகைய ஏற்பாட்டை செய்வதும் உண்டு.

குழந்தையை சுமக்கும்காலத்தில் குழந்தைக்கும், பதிலித்தா யானவருக்கும் ஏற்படக்கூடிய பிணைப்பானது, குழந்தை பிற ந்து குறிப்பிட்டவர்களிடம் வழ ங்கப்பட்ட பின்னர், பதிலி த்தாய்க் கு உளவியல் ரீதியான ஒரு பிர ச்சனையாக உருவா வதும் உண்டு. இத்தகைய உணர்வுபூர்வ மான பல சிக்கல்கள் ஏற்பட சாத்தியங்கள் இருப்பதனால், ஒவ் வொரு நாட்டிலும் இவ்வகையான பதிலித்தாய் நடைமு றைக்கு பல சட்ட திட் டங்கள், விதிமுறைகள் உள்ளன.

மலட்டுத்தன்மை சிகிச்சை

முட்டை உருவாக்கத்தை அதிகரித் தல் (Ovulation Induction)

முட்டை உருவாக்கத்தை அதிகரிக் கச் செய்யும் மருந்துகள் பயன்படு த்தும் முறை. இது பொதுவாக ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்களுக்கு சிகிச்சை யளிக்க வல்லது. இங்கு கொடுக்கப் படும் பல வகையான மருந்துக ளும் பெண்களின் இனப்பெருக்கும் தொகுதியைத் தூண்டி, அதன் மூல ம் கருக்கட்டல் ஏற்படுவதற்கான நிகழ்தகவை அதிகரிக்கச் செய்யும். இந்த மருந்துகளில் பெரு ம்பாலானவை வளரூக்கிகளாகும். இயற்கையாக இருக்கும் வளரூக்கியின் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற் காக இவை வழ ங்கப்படலாம். புரோ ஜெஸ்தரோன் வளரூக் கியே பொதுவாக சிகிச் சையில் பயன்படுத்தப்படு கின்றது.

செயற்கை விந்தூட்டல் (Artificial Insemination – AI)

இந்த செயற்கை விந்தூட்டல் முறையில், கருக்கட்டலுக்கு உதவும் முகமாக, ஆணிடம் இருந்து பெறப்படும் விந்தானது சில சுத்தப்படுத்தலின் பின்னர், நேரடியாக பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியினுள் செலுத்தப்படும். விந்து சுத்தப்படுத்தப்படுவதன் மூலம், விந்துப் பாய்மத்தில் இருக்கும் தேவையற்ற, ஆபத்தான வேதிப்பொருட்கள் அகற்றப்படுவதனால் கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கச் செய்யலாம். இந்த முறைக்கு உதவுவதற்காக மலட்டுத் தன்மையைப் போக்க உத வும் மருந்துகளும் பயன்ப டுத்தப்படலாம்.

விந்தானது பெண்ணின் ஆண் துணையிடம் இருந் தோ, ஆண் துணை இல் லாதவிடத்து, அல்லது ஆண் துணையிடமிருந்து வளமான விந்தை பெற முடியாத நிலை இருக்குமிடத்து, வேறொரு விந்து வழங்கியிடம் இருந்து விந்து பெறப்படும். அந்த விந்து கருப்பை வாய்ப் பகுதியிலோ (Intracervical Insemination – ICI), அல்லது கருப்பையின் உள்ளேயோ (Intrauterine insemination) செலுத்தப்படும். சில அனுகூல ங்கள் காரணமாக கருப்பையி னுள் செலுத்தும் முறையே தற்போது பரவலாக செய்யப் பட்டு வருகின்றது.

இம்முறை பயன்படுத்தப்படும்போது, வெற்றிகரமான கருக் கட்டலுக்காக, முட்டை வெளியேறுதலை சரியாக அறிந்து கொள்ள, குருதிப் பரிசோதனைகள், மீயொலி சோதனை போன்றவற்றினால் பெண்ணின் மாதவிடாய் சுழற்சி மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்ப டும்.

துணையான இனப்பெருக்கத் தொழில்நுட்பம் (Assisted Reproductive Technology – ART)

கருக்கட்டலுக்கான சந்தர்ப்பத் தை அதிகரிக்கச் செய்யும் முக மாக முட்டையானது பெண்ணி ன் சூலகத்தில் இருந்து எடுக்க ப்பெற்று, மீண்டும் பெண்ணின் உடலினுள் வைக்கப்படும். இது நான்கு முறைகளால் மேற்கொள்ளப்படும்.

வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (In Vitro Fertilization – IVF)

இந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டல் மிகவும் பரவலாக அறியப்படும் தொ ழில்நுட்பமாகும். முதிர்ச்சி அடைந்த முட்டையானது பெ ண்ணின் சூலகத்தில் இருந்து அகற்றப்பட்டு, வெளியே சோதனை அறையில் வைத்து, ஆண் துணையிடமிருந்து பெறப்படும் விந்துடன் கருக்கட்டச் செய்யப்பட்டு, கருக் கட்டலின் பின்னர் முளையம் மீண்டும் கருப்பையினுள் வைக் கப்படும்.

பாலோப்பியன் குழாய் உள்ளான புணரி இட மாற்றம் (Gamete Intrafallopian Transfer – GIFT)

இம்முறையில் முட்டை கள் சூலகத்தில் இருந்து அகற் றப்பட்டு, பின்னர் முட்டையும், விந்தும் கருக்கட்டச் செய்யப்படும் நோக்குடன் பலோப்பிய ன் குழாயினுள் செலுத்தப்படும். சோதனை அறியில் வைத்து கருக்கட்டலைத் தவிர் ப்பதால் இது வெளிச் சோ தனை முறை கருக்கட்டலி ல் இருந்து வேறுபடு கின் றது.

பலோப்பியன் குழாய் உள் ளான இருபாலணு இ ணைவுக்கரு இடமாற்றம் (Zygote Intrafallopian Transfer – ZIFT)

இங்கு முட்டை அகற்றப்பட்டு, சோதனை அறையில் வைத்து விந்துடன் கருக்கட்டச் செய்யப்பட்டு, முளைய விருத்திக்கு முன்னராகவே, அதாவது புணரிக்கலமாகவே (zygote) பலோப்பியன் குழாயினுள் செலுத்தப்படும்.

குழியமுதலுரு உள்ளான விந்து உட்செலுத்தல் (Intracytoplasmic Sperm Injection – ICSI)

விந்து குழியமுதலுருவினுள் ஊசி மூலம் ஏற்றப்படல். இந்த முறையும் தற்போது பிரபல மடைந்து வருகின்றது. இங்கே முதிர்ந்த முட்டையானது பெறப்பட்டு, அதனுள் வளமான ஒரு விந்து சேரடியாகச் செலுத்தப்பட்டு, கருக்கட்டச் செய் து, பின்னர் முளையமானது கருப்பையினுள் வைக்கப்படும்.

மேலதிக மலட்டுத்தன்மை சிகிச் சை

சில உடற்கூற்றியல் தொடர் பான மலட்டுத்தன்மை இருப்பி ன், அவற்றை நேரடியாக அறுவைச் சிகிச்சை மூலமாகவோ, அல்லது தேவைப்படாதவிடத்து, வேறு அறுவைச் சிகிச்சை யல்லாத முறைகளாலோ சிகிச்சை அளித்து மலட்டு த்தன்மையை நீக்கலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍!