இன்றைக்கு கோடம்பாக்கத்தில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இர ண்டு இளவட்ட குதிரைகள் லட்சுமி மே னன்-ஸ்ரீதிவ்யா. இதில் லட்சுமிமேனன் நடித்த சில படங்கள் ஹிட் என்பதால், விஷால், சித்தார்த், விமல் போன்ற நடி கர்களின் படங்கள் மட்டுமின்றி, அடுத்து தனுஷ் நடிக்கவிருக்கும் ஒரு படத்திற்கு ம் அவரிடம்கால்சீட் கேட்டுள்ளார்களா ம்.
மேலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த
ஸ்ரீ திவ்யாவுக்கு அந்த ஒரு படத்தின் ஹிட்டே வரிசையாக படங்கள் புக்காகி விட்டன. அதனால் அடுத்தபடியாக மேல் தட்டு ஹீரோக்க ளுடன் நடிக்கும் வாய்ப்புகளுக்காக திரைக்குப் பின்னால் தீவிரமான முயற் சிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது இவ்விரு நடிகைகளுக்குமே மார்க்கெட் இருப்பதால் படாதிபதிகளும், இயக்குன ர்களும் போட்டி போட்டு இவர்களை கமிட் பண்ணிவருகின்றனர். அதில் சில டைரக்டர்கள் நயன்தாராவிடம் கால் சீட் பேசி வந்தவர்களாம்.
நயனின் மார்க்கெட் ஒன்றும் பெரிய அளவில் இல்லாததால் 20 லட்சத்தில் நடிப்பதற்கே இந் நடிகைகள் தயராக இருக்கிற போது, நயன்தாராவை எதற்கா க 2கோடி கொடுத்து புக் பண்ண வேண்டும் என்று பின்வாங்கி கொண்டிருக்கிறார்களாம். இத னால், அரை டஜன் படங்களில் நடிக்க வேண்டிய நயன்தாரா தற்போது இரண்டு படங்களில் மட்டுமே நடித்து க்கொண்டிருக்கிறார். அதனால் தனது வள ர்ச்சிக்கு இந்த புதிய வரவு நடிகைகள் பெரிய இடையூறாக இருப்பதால் கலக்கத்திலும் பீதியிலும் இருக்கிறார். இதை அப்படியே தனது அபிமான ஹீரோக்களிடம் சொல்லி புலம்புகிறாராம் நயன் தாரா.