Thursday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க தாத்தாவும் பாட்டியும் என்னென்ன‌ சாப்பிடலாம்? – தெரிஞ்சுக்கோங்க !

முதுமை காரணமாக உடல் கட்டமைப்பு மாறுகிறது. புரதச் சத்து குறைந்து, அதற்குப் பதி லாக கொழுப்புச்சத்து அதிகமா கிறது. தசைகள் பலவீனம் அடையத் தொடங்குகின்றன. ஜீரணத்துக்கு உரிய சுரப்புகள் செயல்படும் தன்மை குறைய த் தொடங்குகின்றன. பார்வை மங்குதல், காதுபோதியளவு கேட்காமை, சுவைமாறுதல், எ ரிச்சல் ஏற்படுதல், அஜீரணக் கோளாறுகள் ஏற்படத்

தொடங் குகின்றன.

முதுமையில் அதிகம் சாப்பிட முடியாது. பசியின்மை என்று தாங்களாகவே முதியோர் இந் நிலையை நினைத்துக் கொள் வார்கள்.பற்கள் இல்லாமை காரணமாக காய்கறிகள், கீரை கள் ஆகியவற்றைச்சாப்பிட முடியாது என்பதால் பெரும் பாலானோருக்கு மலச்சிக்கல் பிரச்னை இருக்கும்.ஒரு சிலருக்கு வயிற்றுப் போக்கு பிரச் னை தொடரும். ஊட்டச் சத்தை கிரகிக்கும் தன்மை உடலில் குறையும்.

முதுமை காரணமாக இதய நோய், சர்க்கரை நோய், சிறு நீரக பாதிப்பு உள்ளிட்டவை இருக்க வாய்ப்பு உண் டு.உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு காரணமாக, நோய்த் தொற் று ஏற்படவும் வாய்ப்பு உண்டு. என வே இத்தகையோருக்கு சமச்சீரான ஊட்டச்சத்து உணவு அவசியம்.

மிருதுவான கஞ்சி, நன்கு வேக வைக்கப்பட்ட மிருதுவான சாதம் ஆகியவை நல்லது. மசாலா நிறைந்த உணவுகளைத் தவிர்பப து நல்லது. உணவில் உப்பு, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த நெய், எண்ணெய் ஆகியவற்றைக் குறை வாகச் சாப்பிடுவது அல்லது. காய் கறிகளை நன்றாகவேக வைத்து, மிக்சியில் அரைத்து மசிய வைத்து கூடச்சாப்பிடலாம் .காய்கறிகளை மசித்துச் சாப்பிட்டாலும் நார்ச்சத் து கிடைக்கும். மசிக்கும் நிலையில் வடிகட்டாமல் திரவத்து டன் சேர்த்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். முதுமை யில் இனிப்புக ளைத் தவிர்க்க வேண்டும்.

முதுமையின் மிகப்பெரிய பிரச் னை எலும்பு வலுவிழத்தல். குறி ப்பாக பெண்கள் முதுமையை எட்டியவுடன் எலும்பு வலுவிழத் தல் நோய் (ஆஸ்டி யோஸ் போ ரோசிஸ்) நோய் ஏற்பட வாய்ப்பு ண்டு. இதேபோன்று 65 வயதுக் குப்பிறகு ஆண்களுக்கு இதே நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இத்தகை யோர் கால்ஷியம் சத் து நிறைந்த சமச்சீரான உணவு சாப்பிடுவது நல்லது. ஆடை நீக்கிய பால், பச்சைக் காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட வே ண்டும்.

ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரிக்காது. மலச்சிக்கல் ஏற் படாமல் இருக்க தினமும் குடிநீர் போதுமான அளவு குடிப் பது அவசியம். முதுமையில் தாகம் எடுக் கும் உணர்வு பெரு மளவு குறைந்து விடு ம். எனவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படாவிட்டாலும் நாள் முழுவதுக்கும் குறைந்தபட்சம் 2 லிட்டர் குடிநீர் குடிக்க வேண்டும். சாப்பிட்ட பிற கு ஒரு டம்ளர் குடிநீர் குடிப்பதை வழக்க மாகக்கொள்ள வேண்டும். அதோடு, பால் -மோர்-காய்கறி சூப்பிலும் குடிநீர் உள்ள து.

மூன்று வேளை சாப்பிடாமல், இடைவெளி விட்டு அதிக வே ளைகள் சாப்பிட வேண்டும். உதாரணமாக, காலை எழுந்த வுடன் சர்க்கரை இல்லாமல் ஆடை நீக்கிய பால், காலை 8.30 மணிக்கு 2 இட்லியுட ன் சாம்பார்-புதினா சட்னி, காலை 10 மணிக்கு மோர் (ஒரு சிறிய டம்ளர்) அல்ல து காய்கறி சூப் அல்லது சத் துமாவு கஞ்சி, பருப்பு-கீரை சேர்ந்த மதிய உண வு, மாலை சிற்றுண்டியாக பழம், இரவு 8 மணிக்கு இட்லி அல்லது இடியாப்பம் அல்லது சப்பாத்தி அல்லது எண்ணெய் குறைவாக தயாரிக்கப்பட்ட தோசை ஆகியவற்றை கூட்டு-பொ ரியலுடன் சாப்பிடலாம். இரவு படு க்கச் செல்லும் முன் பால் சாப்பிட லாம். இதுபோன்று சாப்பிட்டால் சமச்சீரான உணவுத்திட்டமாக அது அமையு ம்.

அவர்களுக்குத் தேவையான வே லைகளைச் செவ்வனே செய்வதற்கு குறைவான கலோரிச் சத்து கிடைக்கும். உடலில் ஏற்கெனவே உள்ள சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளு ம் தீவிரமடையாது.

முதுமையை அடைந்து விட் டால் தம்மை கவனிக்க யாரு ம் இல்லை என விரக்தி உண ர்வு வேண்டாம். கண் குறை பாடு, காது கேளாமை உள்ளிட்ட பாதிப்புகளைச் சரி செய்து கொ ள்வது அவசியம.

– சாதிக் அலி

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: