Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு: கிறிஸ்துமஸ் ஃபுரூட் கேக்

கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேட் தான் எப்போதுமே சிறந்தது. அதிலும் இங்கு கொடுக்க ப்பட்டுள்ள ஃபுரூட் கேக்கிற் கு பழங் களை ரம் மற்றும் பிராந்தியில் 1 மாதத்திற்கு முன்பு ஊற வைத்து செய் தால், அதன்சுவையே தனி. அதற்கு நேரம் இல்லாவிட் டால், குறைந்தது 1 வாரத் திற்காவது ஊற வைத்து செய்யுங்கள்.

அதிலும் இந்த கேக்கை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாகஇருக்கும்சரி, இப்போது அந்த ஃபுரூட் கேக்கை எப்படி செய்வதெ

ன்று பார்ப்போமா !!!

தேவையான பொருட்கள்:

ரம் மற்றும் பிராந்தியில் ஊற வைத்த பழங்கள் – 3 கப்

கேரமலுக்கு…

சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – 1 கப்

கேக்கிற்கு…

மைதா – 2 1/2 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள் – 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்
பட்டை தூள் – 1 டீஸ்பூன்
கிராம்பு தூள் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
உப்பில்லாத வெண்ணெய் – 1 கப்
நாட்டுச்சர்க்கரை – 1 1/2 கப்
முட்டை – 5
வென்னிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன்
கேரமல் – 1 கப்
ஊற வைத்த பழங்கள் – 3 கப்
ரம் – 2 டீஸ்பூன்

செய்முறை

கேரமல் செய்ய…

* முதலில் ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அடுப் பில் வைத்து சர்க்கரை கரைய வைக்க வேண்டும். குறிப்பாக இந்நிலையில் கரண்டியைப் பயன்படுத்த வேண்டாம்.

* சர்க்கரையானது நன்கு கரைந்து பொன்னிறமாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். முக்கியமாக சர்க்கரை அடிப் பிடிக்காமல் பார்த்து கவனமாக செய்ய வேண்டும்.

* சர்க்கரையானது கரைந்து பொ ன்னிறமான பின்னர், அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் தண்ணீர் ஊற்றி, பின் கரண்டி கொண்டு கிளறி, மீண்டும் அடுப் பில் வைத்து, ஒரு நிமிடம் கிளறிஇறக்கி கலவையை குளிர வைக்கவேண்டும்.

கேக் செய்ய…

* முதலில் ஓவனை 160 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள் ள வேண்டும்.

* பின்னர் 2, 8×2 இன்ச் பேனில் சிறிது வெண்ணெய் தடவிக் கொ ள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு பௌலில் மைதா, காபி பவுடர், பேக்கிங் பவு டர், ஏலக்காய் பொடி, பட்டை தூள், கிராம்பு தூள், ஜாதிக்கா ய் பொடி மற்றும் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின்பு மற்றொரு பௌலில் வெ ண்ணெய் மற்றும் சர்க்கரை சேர் த்த, எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு 5 நிமிடம் மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

*அடுத்து அதில் முட்டையை ஒ வ்வொன்றாக உடைத்துற்றி நன் கு அடிக்க வேண்டும்.

* பின் வென்னிலா எசன்ஸ் மற்று ம் குளிர வைத்துள்ள கேரமல் சே ர்த்து நன்கு கிளறிவிடவேண்டும்.

* பிறகு அதில் மைதா கலவையை கட்டி சேராதவாறு சேர்த்து கிளறி விட வேண்டும்.

* பின் ஊற வைத்துள்ள பழங்களை சேர்த்து கிளறி, பேக்கிங் செய்யக்கூடிய பேனில் ஊற்ற வேண்டும்.

* இறுதியில் அதனை ஓவனில் வைத்து, 1 மணிநேரம்பேக் செ ய்ய வேண்டும். இவ்வளவு நேர ம் பேக் செய்த பின்னர், அதனை திறந்து ஒரு டூத்பிக் கொண்டு குத்தி பார்க்கும்போது, அதில் மாவு ஒட்டியிருந்தால், மீண் டும் பேக் செய்ய வே ண்டும்.

* பின்னர் அதனை ஓவனில் இருந்து வெளியே எடுத்து குளிர வைத்து, பின் பேனில் இருந்து ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டு ம்.

* பின் கேக்கின் ஆங்காங்கு லேசா ன ஓட்டைகளைப் போட் டு, கேக் கின் மேல் ரம்மை தெளித்துவிட்டு, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து, 2-3 நாட்கள் கழி த்து சாப்பிட்டால் சூப்பராக இருக் கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: