Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திரௌபதியின் காலணி (செருப்பு)களை தனது கைகளில் ஏந்திய ஸ்ரீ கிருஷ்ணர் – அபூர்வ கதை!

குருஷேத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பாரதப்போர் அதி பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடை ந்துவரவே, பெரிதும் கலக்க முற்ற துரியோதனன், மறு நாள் பீஷ்மர் எப்படியாவது அர்ச்சுன னைக் கொன்று விடவேண்டுமென்ற வாக்கு றுதியைப் பெற்றுக் கொண் டான். பீஷ்மரும் அவ்வாறே சபதம் எடுத்துக் கொண்டார். பீஷ்மரின் சபதத்தையறிந்த கிருஷ்ணர், அவர் அதை நிறை வேற்ற முடியாமல் தடுக்க ஒரு

திட்டம் போட்டார். கிருஷ்ண ர், தனது திட்டத்தைப்பற்றி விரிவாக தி ரௌபதியிடம் விளக்கினார். நீ எப்படியா வது பீஷ்மர் தங்கியிருக்கும் பாசறைக்குச் சென்று அவர் பாதங்களைத் தொட்டு நம ஸ்கரித்து அவர் ஆசியைப் பெற்றுவிடு. நீ அங்கு செல்லும்போது காலணிகளை அணிந்து கொள்ளாதே. அப்படிச் சென்றா ல் வந்திருப்பது நீதான் என்பதை அவர் அ றிந்து கொண்டுவிடுவார். என் திட்டமும் நிறைவேறாமல் போய்விடும் என்று கூறி, திரௌபதியின் காலணிகளை வாங்கி வைத்துக் கொண்டார்.

கும்மிருட்டான இரவு நேரத்தில் பாச றையில், கட்டிலில் படுத்துக்கொண் டிருந்த பீஷ்மரின் பாதங்களைத் துழாவிக் கண்டுபிடித்த திரௌபதி, அவரது பாதங்களைத் தொட்டு கண் களில் ஒற்றிக்கொண்டு நமஸ்கரித் து எழுந்தாள். இருட்டில் உருவம் தெரியாவிட்டாலும் தன் பாதங்க ளைத் தொ ட்டு வணங்கியவள் ஒரு பெண்மணி என்பதை அறிந்து திடு க்கிட்டு எழுந்தார் பீஷ்மர். பின்னர் திரௌபதி மீண்டுமொரு முறை அவரது பாதங்களை கண்களில் ஒத் திக்கொண்டு வணங்கினாள். உடனே பீஷ்மர், திரௌபதியை ஆசிர்வதித்து, தீர்க்க சுமங்கலி பவ! என்றுசொல்லிவிட்டார். பிறகுதான் பீஷ்மர், விளக்கின் ஒளி யைத் தூண்டிவிட்டு, தன்னிடம் ஆசிர்வாதம் வாங்கியவள் திரௌப தி என்பதை அறிந்தார். திரௌபதி தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண் டுமென்று பீஷ் மாச்சாரியரே ஆசிர் வதித்த பிறகு, இனி அவர் அர்ச்சுன னை எவ்வாறு கொல்ல முடியும்? முடியாதே!

இவ்வாறு, தன் சபதத்தை நிறைவே ற்ற முடியாமல் ஸ்ரீ கிருஷ்ணர்தான் செய்திருப்பாரென்றுஊகித் து தி ரௌ பதியுடன் வெளியே வந்த பீஷ்மர், கிருஷ்ணரை வண ங்கினார். அவரது திருக்கரத்திலிருந்த திரௌபதியின் கால ணிகளைக் கண் டு திடுக்கிட்டு பகவானே! இவ்வுலகமே தங் கள் திருவடிகளை வணங்கு ம்போது தாங்கள் திரௌபதி யின் காலணிகளை ஏந்தி நிற்பதா? என்று வினவ பீஷ்ம ரே! திரௌபதியும் அர்ச்சுன னும் என் பக்தர்கள். என் பக் தர்களுக்காக நான் எதையும் செய்வேன்! என்று பதிலளித் தார். ஆம்! அது உண்மை தான் ! கிருஷ்ணர் தம்மையே சரணடையும் பக்தர்கள் யா ராயிருந்தாலும் கைவிடாமல் தக்க சமயத்தில் துணையிரு ந்து காப் பாற்றுவார்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply