Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

11/12/13அன்று, 14:15-க்கு பிறந்த “அதிசய‌ குழந்தை!”

ஒரு தாய்க்கு குழந்தை பிறப்பதென்பதே அதிசயம்தான். அதிலும், சிலருக்கு அதிர்ஷ்ட வசமான தினங்களில் குழந் தை கிடைப்பதென்பதும் அபூர்வமா னதுதான். அந்தவகையில், கடந் த 11ஆம்தேதி, மாலை 2.15 இதற்கு ஒரு குழந்தை இங்கிலா ந்தின் தென் ஜோக்ஸியர் பகுதி யில் பிறந்திருக்கிறது. இதிலெ ன்ன அதிசயம் என்று எண்ணுகிறீர்களா? அந்த குழந்தை பிற ந்த நேரத்தைப் பார்த்தீர்களேயானால் அசந்து போய் விடுவீர் கள். அதாவது 11ஆம் தேதி, 12ஆம் மாதம், 13ஆம் ஆ ண்டு, 14 மணி, 15 நிமிடத்திற்கு

குழந்தை பிறந்திருக்கிற து. 11.12.13.14.15 என்ற அதிசயமே அதுவாகும்.

இங்கிலாந்தின் தென் ஜோக்ஸியர் பகுதியில் றொதெஹாம் பகுதி தொலைத்தொடர்பு நிலை யமொன்றில் பணிபுரியும் செல் ஸியா என்றதாயே, இந்த அபூர்வ குழந்தையினை ஈன்றெடுத்துள் ளார். இந்த அபூர்வ சிசுவிற்கு லா ண்டன் ஜொனா என பெயர் சூட் டியிருக்கிறார்கள். தனக்கு பிரசவ வலி எடுத்தபோது தனது கணவ ரான பென் பிறவுணும் தனது தாயாராரும் உடனிருந்ததாக குறிப்பிட்டார். இப்படியான அதிசய நிகழ்வு இடம்பெறுவதெ ன்பது 52 மில்லியனில் ஒரு தடவைதான் சாத்தியம் என்று குறி ப்பிடுகிறார்கள்.

படித்த செய்தி

Leave a Reply