Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் கதற கதற என் ஆடைகளை களைந்து அந்தரங்க பகுதியில் சோதனை செய்தனர்!”-கண்ணீருடன் தேவ்யானி

அமெரிக்காவில் தாம் கதறி அழுத போதும் ஆடைகளைக் களைந்து அந்தரங்க பகுதியிலு ம் சோதனை நடத்தப்பட்டதாக தமக்கு நேர்ந்த கொடுமை குறி த்து துணைத் தூதர் தேவ்யானி கடிதம் எழுதியுள்ளார். அமெரிக் காவின் நியூயார்க் நகரில் பணி யாற்றும் இந்திய தூதர் தேவ் யானியை அமெரி க்க போலீசார் கைது செய்ததும், அத்துமீறி நடந்து கொண்ட விதமும் இந்தியாவில் பெரும்

கொந்தளிப்பை ஏற்படுத்தியு ள்ளது.

அமெரிக்க போலீஸ் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த பின்பு தேவ்யானி ஜாமீனில் விடுதலை செய்யப்ப ட்டார். அவர் நடந்த சம்பவம் பற்றி டெல்லியில் உள்ள வெளி யுறவுத்துறை அலுவலகத்துக்கு இமெயிலில் உருக்கமான கடி தம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;

அமெரிக்க போலீசார் என்னை கைது செய்த போது தூதர் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவி ல்லை. துணைத் தூதர் என்ற அடிப்ப டையில் எனக்கு தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளதை கைது செய்த அதிகாரிகளிடம் நான் பல முறை எடுத் துக் கூறினேன். ஆனால் அவர்கள் தொ டர்ந்து என்னை பல்வேறு சோதனைக ளுக்கு உட்படுத்தினார்கள். மீண்டும் மீண்டும் கை விலங்கு மாட்டினார்கள்.

என் ஆடைகளை களைந்து சோதனை யிட்டனர். அத்துடன் உடலின் அந்தரங் க பகுதிகளிலும் சோதனை நடத்தினர். டி. என்.ஏ., சோதனைக்காக மாதிரிக ளையும் என்னிடம் இருந்து எடுத்தனர். கிரிமினல் குற்றவாளிகளுடனும், போதை பொருள் கடத்தல் காரர்க ளுடனும் என்னை அடைத்து வைத் தனர். நான் மனம் உடைந்து பல முறை கதறி அழுதும் என்னை விட வில்லை. இப்போது நாடு எனக்கு ஆதரவாக இருப்பது புதிய பலத்தை தருகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Reply