Thursday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நெல்சன் மண்டேலாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்…

‘ஆப்ரிக்க காந்தி’ எனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலா, சமீபத்தில் இந்த உலகைவிட்டு விடைபெற்றாலும், நம் நெஞ்ச த்தில் நிலைத்துவிட்டார். அந்த அமைதிப் புறாவுக்கு நமது அஞ் சலி. சிறுவயதில் கழுதைமீது ச வாரி செய்துகொண்டு இருந்தா ர் மண்டேலா. அப்போது கழு தை அவரைக் கீழே தள்ளிவிட் டது. மண்டேலாவின் உடலில் முட்கள் குத்தி, ரத்தம் கசிந்த து. சுற்றி இருந்தவர்கள் கிண்டல்செய்து

சிரித்தார்கள். ஒருவர் தோற்றா ல், மற்றவர்கள் எப்படிக் காயப் படுத்துவார்கள் என்பதை அப் போது உணர்ந்தார். நாம் அப்ப டி யாரையும் வருத்த ப்படுத்தக் கூடாது என்று உறுதி எடுத்தார். அவரிடம் இருந்து நாம் கற்று க்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்…

வாழ்க்கையைக் கொண்டாடு!

சிறுவயதில் தேனடை சேகரித்தல், மாடு மேய்க்கும்போது… சகநண்பர்களுடன் குத்துச்சண் டை விளையாட்டு எனவாழ்க்கை யின் ஒவ்வொரு நாளையும் மகி ழ்ச்சியுடன் எதிர்கொள்வார் மண் டேலா. அவரது 70-வது வய தில் நடைபெற்ற தேர்தலில் வென்ற போது, ஜாலியாக ஒரு டான்ஸ் போட்டார்.

தோல்விக்குத் துவளாதே!

மூன்று முறை வழக்கறிஞர் ஆக நடந்த தேர்வில் தோற்றார். பெரிதும் முயன்று, அட்டர்னி ஆனார். தோல்விகள் துரத்திய போதும் ஆப்ரிக்க பூர்வக் குடி களுக்கு இலவச சட்ட உதவி வழங்கி, புகழ்பெற்றார்.

கற்றுக்கொண்டே இரு!

தனிமைச் சிறையில் 27 ஆண்டுகள் இருந்த காலத்தில், அவ ரைப் பார்க்க வரும் மனைவி வின்னிமூலம் உலகநடப்புகளை க் கேட்டுத் தெரிந்துகொள்வார். ஷேக்ஸ்பியரின் எல்லா நூல்க ளையும், சர்ச்சிலின் உலகப் போர் நினைவலைகளை யும் சி றையில் இருந்த சமயம் படித்து முடித்தார்.

ஊருக்கு உழைத்திடு!

மேற்படிப்புப் படிக்க, தென் ஆப்ரிக்காவின் நகர்ப்புறம் நோக் கி வந்தார் மண்டேலா. அர சரின் மகனான அவர் மீதே எச்சில் துப்பினார்கள். கடை க்காரர்கள் பொருட்களைத் தர மறுத் தார்கள். நன்கு படித்திருந்தும் ஒருமுட்டா ளைப்போல அவரை வெள் ளையர்கள் பார்த்தார்கள். இவற்றைத் ‘தன்னுடை ய சிக்கல்’ என்று எண்ணாமல், ‘தன் சக மக்களின் சிக்கல்’ என்று எல்லாருக்காகவும் போராடி னார்.

அன்பே அழகானது!

ஜனாதிபதியாக இருந்தபோது மண்டேலா, உலகக் கோப்பை ரக் பி கால்பந்து இறுதிப் போட்டியை ப் பார்வையிட வந்தார். பெரும் பான்மையினர் வெள்ளையின வீரர்கள். உற்சாகமாக தன் நாட்டி ன் அணியை ஊக்கப்படுத்தினார். கறுப்பின மக்கள் என்றால், வெள்ளையர்கள் இல்லாத அணியையே ஆதரி ப்பார்கள் என்ற எண்ணத்தைத் தனது அன்பால் உடைத்தார். போட்டி யைக் காண வந்திருந்த 60 ஆயிரம் மக்களும் எ ழுந்துநின்று  அவரின்பெ யரை உச்சரித்தார்கள்.

தன்னலத்தைத் தவிர்!

வாய்ப்பு இருந்தும் ஜனா திபதி பதவியை இன் னொருமுறை ஏற்காமல் கம்பீரமாக விலகினார். அவரது சொந்த மகன் எய்ட்ஸ் நோ யால் இறந்துவிட, அந்த வலியைத் தாங்கிக்கொண்டு, எய்ட் ஸ் விழிப்புணர்வுக்காக பல் வேறு முயற்சிகளை முன் னெடுத்தார் மண்டேலா.

வலிகளை வெல்!

50 வயதுக்கு மேலே வந்த காசநோய், இறுதி வரை மண்டே லாவுக்கு இருந்தது. சிறை யில் இருந்தபோது, சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் வே லை பார்த்தது, கண்பார்வை யைப் பாதி த்தது. புற்றுநோயும் வாட்டியது. ‘நான், கேன்சரால் வெல்லப்பட் டாலும் சொர்க்கம் சென்று, அங்கே நம் கட்சி அலு வலகத்தில் என் உறுப்பினர் அட் டையைப் புதுப்பித்துக்கொள் வேன்!’ என்று சிரிப்புடன் சொன்னார்.

வெறுப்பை விடு!

”எதிரிகளை வெல்ல ,அவர்களு டன் இணைந்து பணியாற்றுங்க ள்” என்பார் மண்டேலா. அவர் விடுதலையானதும், நாடு முழுவ தும் கலவரங்கள் வெடித்தன. தொலைக்காட்சியில் தோன்றி, மக்களை அமைதிகாக்கச்செய் தா ர். அமைதியாகத் தேர்தலை நட த்தி, எல்லாருக்குமான அரசை அமைத்தார்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

கறுப்பின மக்கள் அதிகமாக இரு ந்தபோதும் தனது அமைச்சரவை யில் வெள்ளையர்கள், இஸ்லா மியர்கள், இந்தியர்கள், லிபரல்க ள் என்று எல்லாரையும் இணைத் துக் கொண்டார். ‘நான் ஆங்கி லேயரின் ஆதிக்கத்தையும் எதிர்க் கிறேன்; கறுப்பின ஆதிக்கத்தை யும் நிராகரிக்கிறேன்’ என்று உறுதி யாகச் சொன்னார்.

இன்று புதிதாகப் பிறந்தோம்!

27 வருட சிறை வாழ்க்கைக்குப் பின் வெளியே வந்ததை எப் படிப் பார்த்தார் தெரியுமா அவர்? ‘நான் சிறைக் கதவுகளைக் கடந்து, இறுதி முறையாக நடந்தேன். 70 வயதில் எல்லாம் புதிதாக தொட ங்குவதாக உணர்கிறேன். என்னு டைய 10,000 நாட்கள் சிறைவாச ம் முடிந்தது. இன்று புதிதாகப் பிற ந்திருக் கிறேன்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: