Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிக வருவாய்க்கு ‘சந்தன மர’ வளர்ப்பு

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சந்தன மரங்களை சுதந்திரமாக வளர்க்க அரசி ன் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவ டை செய்திட மாவட்ட வனத் துறையிடமே அனுமதி பெற வேண்டும். அறுவடை செய்த சந்தன மரக்கட்டைகளை வனத்து றையினர் நடத்தும் ஏலத்தின்மூலம் நல்லவிலை க்கு விற்பனை செய்யலாம். தனியாருக்கும் விற்பனை செய் யலாம். 20% தொகையை

அரசுக்கு வரியாக செலுத்த வேண் டும்.

எனவே விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவன ங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்க முன்வந் துள்ளனர். சந்தன மரங்கள் வேலிகளிலும் தரிசுநிலங்களி லும் தானாகவே வளர்ந்து வற ட்சியிலும் பசுமையாக காட்சி தரும் அழகிய தெய்வீக மரமா கும். இந்தியாவின் அனைத்து நிலப் பகுதிகளிலும் தட்ப வெ ப்ப நிலைகளிலும் வளம்குன்றிய பாறைப்பகுதிகளிலும் வள ரக்கூடியது. சந்தன மரங்களை வீடுகளிலும் பூங்காக்களிலு ம் விவசாயநிலங்களிலு ம் பள்ளி,கல்லூரி தொழி ற்சாலை வளாகங்களி லும் வளர்ப்பதன்மூலம் 12 ஆண்டுகளுக்குப் பின் பல கோடி ரூபாய் அன் னியச் செலாவணியை ஈட்டமுடி யும். விவசாய மாகச் செய்வதெனில் 3 மீட்டர் இடைவெளியில் சிறு குழிகள் அமைத்து ஏக்கருக்கு 450 மரங்களை வளர்க்க முடியும். சந்தன மரங்கள் மற்ற மர ங்களுடன் இணைந்து வளரு ம் தன்மைகொண்டது. என வே தென்னை, நெல்லி, சப் போட்டா, சவுக்கு, முருங் கை, முந்தி ரி, குமிழ் மலை வேம்பு, மகோகனி மற்றும் பல வகையான வன மரங்க ளுக்கு இடையில் ஊடுபயி ராக வளர்க்கலாம். விதைக ளை நேரடியாக குழிகளில் ஊன்றி குறைந்த செலவில் வள ர்க்கலாம். கன்றுகளும் நடவு செய்யலாம். ஒருகிலோ சந் தன மரக்கட்டை 6000 ரூபாய் வரை ஏலத்தின் மூலம் விற்ப னைசெய்யப்படுகிறது. 12 ஆண்டுகள் வளர்ந்த மரத்தி லிருந்து மூன்று முதல் ஐந்து கிலோ கட்டை (வாசனை மிகுந்த வைரப்பகுதி) கிடைக் கும். 20 ஆண்டுகள் வளர்ந்த மரத்தின்மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெற லாம். எனவே இனிசந்திலும் பொ ந்திலும் சந்தனம் வளர்ப்போம். சந்தனம், குமிழ், மலை வேம்பு, ம கோகனி, ஈட்டி, சில்வர் ஓக் மற்று ம் அனைத்துவகை வனமரவிதை கள், கன்றுகள் வளர்ப்பு குறித்த ஆலோசனைகள் ஆய்வக முகவ ரியில் தொடர்பு கொண்டு பெறலாம். 98429 30674.

ஏ.சந்தனமோகன்,
சந்தன வளர்ச்சி ஆய்வு பண்ணை
கந்தன்பாளையம், காமநாயக்கன்பாளையம்,
பல்லடம், கோயம்புத்தூர்-641 658.

 98429 30674.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: