Friday, March 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பணத்திற்காக திருமணமா? அல்லது காதலுக்காக திருமணமா ?

திருமணம் என்பது இரண்டுள்ளங்களுக்கு இடையே ஏற்படு ம் சமயப்பற்றான உறவா கும். திருமணம் என்பது பொதுவாக பெரியோர்க ளால்நிச்சயக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது கா தல் திருமணமாக இருக்க லாம். தங்களை நேசிப்பத ற்கும், காதலிப்பதற்கும், கவனிப்பதற் கும் வாழ்கை முழுவதும் உடனிருப்பத ற்கும் ஒருவர்வேண்டும் என்பதால் தான் ஆண்களும் பெண் களும் திரு மணம் செய்துகொள்கின்றனர். ஆனால் சில பேர் அதனை

லாபம் ஈட்டுதரும் ஒரு வியாபாரமாக பார்க்கின்றனர். அத னால் அவர்கள் அதிக சொத்து சுகம் உடைய ஆண்களையோ பெண்க ளையோ தான் வாழ்க்கை துணை யாக தேர்ந்தெடுக்கின்றனர். கேட்பத ற்கு வித்தியாசமாக இருந்தாலும்கூ ட அது தான் உண்மை. பணம் கறப்ப தற்காகவே சிலபேர் திருமணம்செய் து கொள் கின்றனர்.

ஆனால் வியாபார நோக்கோடு நடக் கும் திருமணங்களும் வெற்றிகர மாக வே முடிகிறது. அதனால் தான் என்னவோ பணத்திற்காக திருமண மா அல்லது காதலுக்காக திருமண மா என்ற கேள்வி எப்போதும் உலா வந்து கொண் டே இருக் கிறது. காதல் என்பது வாழ்க்கையில் ரொம்பவும் முக்கியம் தான். ஆனால் அதற்காக பணத்தை ஒதுக்கிட முடியுமா? அதிகரித்து கொண்டே இருக்கு ம் இன்றைய பொருளாதாரத் தோடு போராடா ஒருவர் நடை முறைக்கு ஒத்துவரும் படியும் யோசிக்க வேண்டும் அல்லவா? நம் வாழ்க்கையை நடத்திட வெறும் காதல் மட்டும் போதா து அல்லவா? நம்மிடம் சுத்தமாக பணம் இல்லாமல் நம்மை சுற்றில் ஒரே பிரச்ச னைகளாக நிலவும் போது காதல் வந்து உதவி புரிந்தி ட முடியுமா என்ன?

திருமணம் என்பது சொத்துக்காகவா அ ல்லது காதலுக்காக வா…?

காதலுக்காக திரும ணம் செய்வதைவிட பணத்திற்காக செய் யப்படும் திருமணங்கள் சிறந்ததாக விளங்குவதற்கு பல கா ரணங்களும் உதாரனங்களும் உள்ளது. பணத்துடைய மதி ப்பையும் முக்கியத்து வத்தையும் இப்போ தெல்லாம் மக்கள் ந ன்றாக புரிந்து வைத் துள்ளார்கள். பணம் அல்லது காதலுக்கா க திருமணம் செய்வ தற்கு சிலஉறவுமு றை சார்ந்த டிப் ஸ் இருக்கிறது. அவைகளை கொஞ்சம் பார் க்கலாமா?

பாதுகாப்பு:

பணத்திற்காக திருமணமோ அ ல்லது காதலுக்காக திருமண மோ, இரண்டிலுமே வருங்கால த்திற்கான பாதுகாப்பு தே வை. இங்கே பாதுகாப்பு என்று நாம் சொல்வதை நிதிநிலைப்புத்த ன்மையை. அதனால் அதிகசொத்துக்கள் வைத்து நல்ல நிதி நிலைப்புத்தன்மையுடன் விளங்குபவர்களை பார்த்து திரும ணம் செய்து கொள்ள லாம். காதல் என்பது மு க்கியம்தான், ஆனால் பாதுகாப்பு என்பதும் மு க்கியம் தானே. உங்கள் வருங்காலம் நல்லபடி யாக அமைய ஒரு உறு தி வேண்டாமா? அதற் காக தங்கத்தை கொள் ளையடிப்பவர்களைபோல் நடக்காதீர்கள். உங்கள் வருங்கா லம் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி பார்த்துக் கொண்டு திருமணம் செய்யுங்கள்.

வசதி வாய்ப்புகள்:

வசதி வாய்ப்புகள் என்று இங்கே நாங்கள் சொல்வ துஆடம்பரவாழ்க்கையை பற்றிஅல்ல. திருமணத்தி ற்கு பின் அடிப்படை தே வைகளும் வசதிகளும் பூர்த்தியாக வேண்டாமா? வெறும் காதலுக்காகதிரு மணம் செய்தால் இந்த வசதிகள் எல்லாம் உங்கள் கிட்டிவி டும் என்று சொல்ல முடியாதல்லவா? நீங்கள் யாரையாவது காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கூட அவர்களுடன் சந் தோஷமாக குடும்பம் நடத்த இந்த அடிப்படை வசதிகள் வேண்டும்தா னே.

மன நிறைவு:

ஒரு உறவு நிலைத்திட காதல் என்பது அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு குடும்பம் நிலைத்திட பணமு ம் சொத்து சுகமும் காதலை போலவே தேவைப்படுகிறது. சொத்து சுகமோ அல்லது காத லோ, இரண்டையுமே குறை வாக எடை போட முடியாது. ஒரு குடும்பத்திற்கு மனதுக்கு நிறைவான வாழ்க்கை வே ண்டுமானால் அதற்கு பணம் தேவை. ஒரு பெண்ணுக்கு வே ண்டியது எல்லாம் அவளின் குடும்ப பந்தம் நீண்ட ஆயுளோ டு விளங்கி அவளின் தேவைக ள் பூர்த்தியாவதே. இதுவே ஒரு ஆண் என்றால், அவன் குடும்ப த்தை அன்பாக கவனித்துக் கொ ள்ளவும் அவனை திருப்தியாக வைத்துக் கொள்ளும் ஒரு ம னைவியை எதிர்பார்க்கின்றான் . பணம் அல்லது காதலை அடிப்படையாக கொண்டதோ; எதுவாக இருந்தாலும் அந்த திருமண பந்தத்தில் மன நிறை வு கிடைக்கவேண்டும். காதலைவிட பணத்திற்காக திருமண ம் செய்தவர்களுக்குதான் அதிக மனநிறைவு கிடைக்கிறதா ம் .

குடும்ப பந்தம்:

பழங்காலத்தில் இருந்து நம் சமுதாயத்தில் பெரியோர்களா ல் நடத்தப்படும் திருமணங்கள் சொத்து சுகத்தை அடிப்படை யாக வைத்தே செய்யப்படுகின் றன. தங்களுக்கு நிகரான சாதி, சமுதாயம், ஆஸ்தி மற்றும் அந்தஸ்தை கொண்ட குடு ம்பத்தில் தான் சம்பந்தம் செய்து கொள்கின்ற னர். பணத்திற்காக திருமணம் என்ப து ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டி யது அல்ல; நம் பெற்றோரும் அவர்க ளின் பெற்றோரும் அந்த அடிப்படை யில் தானே திருமணம் செய்து கொ ண்டிருப்பார்கள். திருமணத்திற்கு பின் அவர்களுக்கிடையே காதல் ம லர்ந்துள்ளது. தங்கள் சாதி சனத்தி லிருந்து தங்களுக்கு நிகரான அந்த ஸ்தை உடைய சம்பந்தத்தை பெற வே பணத்தை அடிப்படையாக கொ ண்ட திருமணங்கள் நடைபெறுகின் றன . சமுதாய கோட்பாடுகளை சில நேரம் காதல் திருமண ங்கள் உடைத்தெறியும்.

நீடித்து நிலைத்திட:

காதலுக்காக செய்யப்படும் திரு மணங்களைவிட பணத்திற்காக செய்யப்படும் திருமணம்தான் அதிக நாட்களுக்கு நீடித்து நிற் கும்;கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் அதுதான்உண் மை. அதற்கு காரணம் உங்களின் காதலும் ஈர்ப்பும் காலப் போக்கில் மறைந்து விடும். தின சரி பிரச்சனைகள், குடும்ப தே வைகள் மற்றும் வேலைபளு ஆகியவைகள் உங்கள் காத லை தேயச் செய்யும். இதனால் அடிக்கடி சண்டையும் சச்சரவு ம் உண்டாகும். பணத்திற்காக செய்யப்படும் திருமணத்திலும் இந்த பிரச் சனைகள் ஏற்படலாம். ஆனால் அழுவதெ ன்று வந்துவிட்டபோது ஒரு பி.எம்.டபிள்யூ காரில் உட்கார்ந்து அழலாமே; எதற்கு சைக் கிளில் உட்கார்ந்து அழ வேண்டும்?

– அசோக். சி.ஆர்.

Leave a Reply

%d bloggers like this: