Sunday, May 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ் சினிமா 2013 – ஓர் அலசல்!

2013ல் ஏறக்குறைய 150 திரைப்படங்கள் தமிழில் வெளிவந் துள்ளன. இதில் கடந்த பத்துப் பதினைந்து வருடமரபுப்படியே இந்த வருடமும் வழக்கம் போல 10% தயாரிப்பாளர்களின் முகம் மலர்ந்துள்ளது…

அலெக்ஸா, 7D, ரெட் எபிக் போன்ற டிஜிட்டல் கேமராக்க ளி ன் பயன்பாடு இந்த வருடம் வெளிவந்த படங்களில் அதிக ம்.

இந்தியத் திரையுலகில் டிஜிட்டல் தொழில்நுட்ப படமாக்கலி ல் மிகச்சிறப்பான ஒளிப்பதிவுத் திறனுக்கான

பாராட்டு ‘ஹரிதாஸ்’ படத்துக்காக நம் ஒளிப்பதிவாளர் ரத்தின வேலுவுக்குக் கிடைத்த விஷயம் வழக்கம்போலவே யாரும் கண்டுகொள்ளவில் லை. அதேபோலத்தான் ‘பரதே சி ’ படத்துக்காக சர்வதேச விரு து பெற்ற ஒளிப்பதிவாளர் செழி யனும் அதிகம் கவனிக்கப்படவி ல்லை.

‘சூது கவ்வும்’, ‘நேரம்’, ‘மூடர் கூடம்’, ‘விடியும் முன்’ போன்ற படங்கள் இந்த வருட ‘அட’ தெறிப்புகள் வரிசையில் இடம் பெற்றன..

மூடர் கூடம்’ இயக்குனர் நவீன், இய க்குனர் பாண்டிராஜின் உதவியாளர். ஆனால் இது அவரின் சொந்தத்தயா ரிப்பு. அந்தத் தைரியத்தைப் பாராட்டி யாக வேண்டும். அதோடு தம் மாண வன் வளர்வதை ஊக்கப்படுத்தும் விதமாக அந்தப் படத்தை விநியோ கம் செய்தார் இயக்குனர் பாண்டிரா ஜ்.

யாரிடமும் பணிபுரியாமல் தம் முதல் படத்தை எடுத்து வெற் றி பெறும் இயக்குனர்களின் எண்ணிக்கை சமீபமாக அதிக மாகி வருகிறது . அதில் ‘சூது கவ்வும்’, ‘நேரம்’ பட இயக்குன ர்களும் சேர்த்தி… இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சி என்பது ஒரு கைபேசி கேமரா வில் குறும்படம் எடுக்கும் அள வுக்கு வளர்ந்துள்ளதால் திரை த் துறையிலும் இத்தகைய வர வுகள் தவிர்க்க இயலாத ஒன் று. கதைப் பின்னல்” பாட்டுகள்” சண்டைக்காட் சிகள்” போன் ற வழக்கமான விஷயங்களை விடுத்து, எந்த விதப் புத்தி சிர மமும் இல்லாத எளிய வகை கதை சொல்லிகளாகவே இவர் கள் வந்திருக்கிறார்கள். கதாபாத் திரங்களின் அசை வுகளும் வசன யதார்த்தமுமே இவர்களின் பல ம். இது வழக்கமான சினிமா பா ணியிலிருந்து வேறுபடுவதால், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

வர்த்தகரீதியான நம்பிக்கை!

‘ராஜா ராணி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தேசிங்கு ராஜா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்கள் நம் கமர்ஷியல் மர பில் நின்று விளையாடி, பல உலக சினிமா ஆதங்க தமிழ ர்களின் வயிற்றெரிச்சலுடன் வசூலை வாரிக் குவித்தது.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரும் வர்த்தக ரீதி யான நம்பிக்கையைப் பெற்ற நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளனர். இதில் ஒரு ஓரமாக விமலும் சித்தார்த் தும் நிதானமாக வளர்ந்து வருவது தெரிகிறது.

‘மரியான்’, ‘நையாண்டி’ போன்ற படங்கள் தனுஷுக் குக்குகைகொடுக்கவில்லை . ஆனால் ‘எதிர் நீச்சல்’ வெற்றி, ஒரு தயாரிப்பாளராக அவர ளவில் வெற்றியே. சிம்பு இதில் எந்த ச் சிரமத்தையும் நம க்குக் கொடுக்கவில்லை.

மணிரத்னம், அமீர், செல்வராக வன் போன்ற இயக்குநர்களி ன் படங்கள் பெரும் எதிர்பார்ப்போ டு வெளிவந்தபோது, இவங்க ளுக்கு என்ன ஆச்சு” என்ற முன கலுடன் பார்வையாளர்கள் தி யேட்டரை விட்டு வெளியே வருவதிலிருந்தே, இவர்கள் எத் தகைய திறமைசாலிகளாகத் தம்மை நிரூபித்தார்கள் என்று தெரியும். அத் தகைய இயக் குநர்களின் படங்கள் ஏன் எதுவும் சொல்லுமள வுக்கு இல் லை என்னும் கேள்வி நம் மில் எழாமல் இல்லை. இப் படங்கள் சரியாக அமை யாததற்குக் காரணங்கள் பல இருக்கும். ஆனால் அது பார்வையாளனுக்கு த் தேவையில் லை. இவர்கள் தானே முன்பு பெரும் வெற்றியைத் தந்தவர்க ள்.

இதை எந்த வகையில் எடுத்துக் கொள்வது? கற்பனை வறட் சி என்றா? காலமாற்றம் என்றா?

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’,‘தங்க மீன்க ள்’,‘பரதேசி’ போன்ற படங்கள் பத்திரிகை களாலும் விமர்சகர்களாலும் இரண்டு வேறுவேறு எல்லைகளில் விமர்சனத்துக் குள்ளானது. ஆஹா  ஓஹோ” என்றுஒரு புறம், ஐயோ அய்யயோ” என்று மற்றொ ரு புறம்.. ஆனால் விமர்சனங்களையும் தாண்டி ‘போட்ட முதலுக்கு’ நியாயம் செய்தது பாலாவின் பரதேசி…

சமீப காலமாக தமிழ்த் திரையுலகில் நில வும் இன்னொரு முக்கிய சர்ச்சையான ‘தியேட்டர் அரசியல்’ இந்த வருடமும் இல்லாமல் இல்லை. படங்களை சரியான நேரத்தில் வெளியிட முடியாமை, தியேட்டர் ஒதுக்கீடுசெய்வதில் சிக் கல் என்று படம் எடுப்பதையும் தா ண்டி, படம் எடுப்பதைவிட அதிக சி க்கலும் சிரமமும் படம் வெளியிடு வதில் இருந்ததைக் கண்கூடாக இந்த வருடம் காணமுடிந்தது. பல படங்கள் வெளியிடப்படாமல் தள் ளிப்போடப்பட்ட சம்பவங்கள் இந்த வருடமும் நடந்தது. கடைசி நேரத் தில் டிசம்பரில் மட்டும் 22 படங்கள் வெளியிட தியேட்டருக்காக அலை ந்தன.

சர்ச்சைக் குள்ளான ‘விஸ்வரூபம்’,‘தலைவா’ போன்ற படங் கள் இந்த வருடத்தின் சினிமா அரசியல்” பகுதியில் இடம் பிடித்தன. இதுவும் நம் கலாசார மரபுகளில் ஒன்றே…

ஹிட்டான ரிங்டோன்!

பேருந்துகளிலும், ரயில்களி லும், ரிங்டோனிலும் கேட்கு ம் சத்தங்களின் அடிப்படை யில் வைத்துப் பார்க்கும்போ து இந்த வருடம் ஊதா கலரு ரிப்பன்”, காசு பணம் துட்டு மணி மணி” சுமாக்கிற சோமாரி ஜமாயக்கிராடா” “FY FY FY கலா ய்ச்சி FY” போன்ற பாடல் வரிகளே மக்கள் மனத்தில் அதிகம் இடம்பிடித்தன எ ன்று அறுதியிட்டுச் சொல் லலாம்.

கலைஞர்கள் இறப்பு அதிக ம்!

டி.எம்.எஸ், பி.பி.எஸ், வாலி போன்ற மாபெரும் சகாப்தங்களின் மறைவும், மணிவண்ணன் என்னும் தமிழ் உணர்வு மிக்க கலைஞனின் இழப்பும் மஞ்சுளா விஜ யகுமார், திடீர் கண்ணையா, மாஸ்டர் ஸ்ரீதர் போன்ற நடிகர் கள் இழப்பும் இந்த வருடசோகங்கள். ‘பாசவலை’, ‘நல்ல வன் வாழ்வான்’ போன்ற படங்க ளில் நீங்கா இடம் பிடித்த பல பாடல் வரிகளுக்குச் சொந்தக்கார ரான கவிஞர் ஆத்மநாதன் மறை வு பெரும்பான் மையான தமிழர் களுக்குத் தெரி யாமல் போனது

அதனினும் சோகம்.

பெரும்பாலும் ‘நான் என்ன நினைக்கிறேன்னா’ என்னும் அளவிலேயே இந்த வருட சினி மா விமர்சனங்கள் பத்திரிகைக ளிலும் இணையத்திலும் தெரி ந்தன. இதில் பாதிப்படம் பார்த் துவிட்டு ‘திரைக்கதைச் சிக்க ல்கள்’ பற்றியெல்லாம் விரிவா க விளக்கிய காமெடிகளும் உண்டு… அவற்றை ‘சுய கருத் துக்கள்’ என்ற தலைப்பில் செய்வது உத்தமம். அதில் இந்தக் கட்டுரையையும் (பாயிண்ட்டுகள்) சேர்த்துக் கொள் வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.

— அரவிந்த் யுவராஜ் (ப‌டங்கள் கூகுள்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: