Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு – பெண்மைக்குப் பெரிய சவாலான “இந்தப் பிரச்னை”க்கான நிரந்தர தீர்வு!

நடை, உடை, பாவனை, சிந்தனை, செயல் என எல்லாவற் றிலும் ஆண்களைப் போ ல இருக்க நினைக்கிற பெண்களும் ஒரு விஷய த்தில் அதைவெறுக்கவே செய்கிறார்கள். அது ஆண்களைப் போல சரு மத்தில் வளரும் தேவை யற்ற ரோம ங்கள்! பெ ண்மைக்குப் பெரிய சவா லான இந்தப் பிரச்னைக்கு, வாக்சிங், திரெடிங், இன்ஸ்டன்ட் கிரீம், லேசர் என எத்தனையோ

சிகிச்சைகள் உண்டு அழ குத் துறையில்.

அத்தனையும் பாதுகாப்பானவையா என்பதுதான் கேள்வி யே சருமத்தில் வளரும்தேவை யற்ற ரோமங்களை நீக்கவும், வளர்ச்சியைத் தடுக்கவும் இய ற்கை அழகு சிகிச்சையில் ஏக ப்பட்ட வழிகள் உள்ளன என் கிறார் அழகியல் நிபுணர்

பூப்பெய்தும் வயதில் பெரும் பாலான பெண்கள் சந்திக்கிற பிரச்னைதான் இது. ஹார் மோன்களின் இயக்கம் சீராக இல் லாமல் போவதே முக்கிய காரணம். உணவுப் பழக்கம், இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறை, பிசி ஓடி எனப்படுகிற மருத்து வப் பிரச்னை என வேறு காரணங்களும் இதன் பின்னணியில் உண்டு. இள வயதிலிருந்தே சற் று எச்சரிக்கையாக இரு ந்தால்,ஆரம்பத்திலேயே இந்தப்பிரச்னையிலிருந்து விடுபடலாம்’’ என்கிற ராஜம், அதற்கான வழிகளை யும் காட்டுகிறார்.

பியூமிஸ் ஸ்டோன் எனக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும். சந்தனக் கல் லில் சந்தனத்தை இழை த்து அந்த பியூமிஸ் ஸ் டோனில் தடவி வைக்க வும். ரோமங்களை நீக்க வேண்டிய பகுதியை முதலில் நன்கு கழுவித் துடைக்க வும். கடலை மாவு, பார்லி பவுடர், தே ன் மூன்றும் தலா 1 டீஸ்பூன் அளவு எடுத்து, சில துளிகள் தண் ணீர் விட்டுக் கெட்டியாகக் குழைத்து,

ரோமம் நீக்க வேண்டிய சருமப் பகுதியில் திக்காக தடவவும். அரை மணி நேரம் ஊறவிட்டு, அது காய ஆரம்பித்ததும், தண் ணீரைத் தெளித்து, சந்தனம் தடவி வைத்த பியூமிஸ் ஸ் டோனால், மிக மென்மையாக ரோமத்தின் எதிர் திசையி ல் தேய்க்கவும். பிறகு அந்த இடத் தைக் கழுவவும். ஒருநாள் விட் டு ஒரு நாள் செய்தால் முடிவ ளர்ச்சியின் வேகம் குறைந்து, வேர்க்கால்கள் பலவீனமடை யும்.

விரளி மஞ்சள், வசம்பு, கோரைக் கிழங்கு, குப்பைமேனியை நன்கு காய வைத்து, சம அளவு எடுத்துக் கலந்து, நீர்விட்டு பேஸ்ட் போல ச் செய்து, உடல் முழுக் கத் தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டு, எதிர் திசையில் தேய்த் துக் குளிக்கவும். எரிச்ச லாக உணர்ந்தால் குளிர் ந்த பாலோ, தயிரோ, தேங்காய் எண்ணெயோ தடவிக் குளி க்கலாம்.

பெண் குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே சருமத்தில் நிறை ய ரோமங்கள் இருப்பதைப் பார்க்கலாம். கோதுமை மாவில் 2 டீஸ்பூன் வெல்ல த் தண்ணீர் கலந்து, பேக் மாதிரி செய்து, குழந்தைக ளின் முதுகில் தடவி, காய் ந்ததும், மென்மையாக உரி த்தெடுத்து விடலாம். தொ டர்ந்து இப்படிச் செய்தால், பெண் குழந்தைகள் பருவமடை யும் போது, ரோமப் பிரச்னை தீவிரமாகாமலிருக்கும்.

சம்பா கோதுமை மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், வெட்டிவேர் தூள், நித்யமல்லிச் செடி யின் வேரைக்காயவைத் து அரைத்த தூள் எல் லாம் சம அளவு கலந்து கொள்ளவும். தினமும் குளிக்கும் போது, மஞ்ச ள் மாதிரி இந்தக் கல வையை உடலில் தேய்த் துக் குளித்தால் ரோம வள ர்ச்சி கட்டுப்படும்.

செய்யக்கூடாதவை…

சருமத்தில் தேவையற்ற ரோ ம வளர்ச்சி இருந்தால் முதலி ல் கவனிக்க வேண்டிய விஷ யம் மாதவிலக்கு சுழற்சிதான் . அது சரியில்லாம லிருப்பது உடலில் ஹார்மோன் கோளா று இருப்பதற்கான அறிகுறி. எனவே அதற்கே முதல் சிகி ச்சை.

கத்தரிக்கோல், ரேசர் போன்ற எந்தக் கருவியையும் உபயோ கித்து ரோமங்களை நீக்க முயற்சிக்க வேண்டாம். அப்படிச் செய்தால், ரோமங்களை நீக்கிய இடம், தடித்து, கருப்பதுட ன், ரோம வளர்ச்சியை மேலும் அதிகப் படுத்தும். கெமிக்கல் கலந்த ஹேர் ரிமூவிங் கிரீ ம்க ளை உபயோகிப்பதும் ரோம வளர்ச்சியை மேலு ம் அதிகரிக்கச் செய்யும்.

ஏற்கனவே கிரீம் மாதிரி யானவற்றைக் கொண்டு ரோமங்களை நீக்கியவர்க ளுக்கு சருமத்தின் சில இட ங்களில் கரும் புள்ளிகள் மாதிரி நின்றுவிடும். அந்த இடங்க ளை அப்படியே வறண்டு போகவிடாமல், வாரம் ஒரு முறை உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் வைத்து, ஊறிக் குளிப் பதுமூலம் ஓரளவு நிவாரணம் காணலாம்.

பிளீச்சிங் செய்வதால் சரும த்தின் மெல்லிய ரோமங்கள் சரும நிறத்துக்கே மாறும். அதனால் ரோம வளர்ச்சி அத்தனை அசிங்கமாகத் தெரியா மல் தற்காலிகமாக மறை க்கப்படும். ஆனால், பிளீச்சி ன் தீவிரம் குறையக் குறை ய, அதாவது, நான்கைந்து நாள்களில் மறுபடி ரோமங் கள்தம் பழைய நிறத்துக்குத் திரு ம்பும். கெமிக்கல் கலந்த கிரீம்கொண்டு அடிக்கடி பிளீச் செய்வது சருமத்துக்கு ம் கேடு.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply