Friday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு (சீமந்தம்) நடத்துகிறார்களே! அது ஏன்?

வளைகாப்பு விழா இந்தியா போன்ற கலாச்சார மிக்க நாடுக ளில் இன்னும் கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டாட ப்பட்டு தான் வருகின்றது. கர்ப் ப காலத்தில் நிறைய சம்பிர தாய ங்களும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் இருந் து கொண்டு தான் உள்ளன. இவை நமக்குள் உற்சாகத்தை யும் கொண்டாடடத்தையும் கொண்டு வரும். கலாச்சாரங்க ளும் கொண்டாட்டங்களும் நம்முடைய மற்றும் நமது

சமூதாயத்தின் நலன் கருதிதான் இருக்கும். இத்தகைய காரி யங்கள் கர்ப்பிணி பெண் ணை தனித்துவமாகவும் சந்தோஷமாகவும் வை க்கும். எல்லாவித கொ ண் டாட்டங்களின் மத்தி யில் வளையல் அணிவி க்கும் விழா மிகவும் சிற ப்பு மிக்கதாக இருக்கும். நீங்கள் முன்பே காப்ப மாகி குழந்தையை பெற்றவர்களானாலும் நான் கூறும் செ ய்தி உங்களுக்கு பிரம்மிப்பாக தான் இருக்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் போடுவதன் மூலம் எளிதாக பிரசவம் ஆகும் என் று ஆராய்சிசியாளர்கள் தெரி வித்துள்ளனர். இதை நாம் வளைகாப்பு மற்றும் சீமந்த ம் என்றும் அழைப்போம். கர் ப்பமான பெண்ணின் வீட்டா ர் பல ரையும் இந்த விழாவி ற்கு அழைப்பார்கள். அவர்க ள் அப்பெண்ணுக்கு ஆளுக்கு இரண்டு வளையல்களை போட்டு விடுவார்கள். இதை தவிர வேறு பல கொண்டாட்டங்களும் கர்ப்பிணி பெண்களுக் காக நடத்தப்படும். இத்தகைய விழாக்களை கொண்டாடுவதி ல் ஏதேனும் அறிவியல் ரீதியா ன அர்த்தம் இருக்கும் என்று பலர் கூறியுள்ளனர். ஆனால் சிலர் இவற்றை போலியான வை என்றும் கூறுகின்றனர்.

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதால் பிரசவம் எளிதாக அமையுமா…?

நீங்கள் கர்ப்பமான பின்பு உங் களது அடுத்த தேடல் எவ்வாறு எளிதான முறையில் குழந்தை யை பெற்றெடுப்பது என்பது தான். கீழ்காணும் பகுதியில் அறிவியல் காரணத்துடன் செ ய்யப்படும் சம்பிரதாயங்க ளை பற்றி பார்ப்போம்: இவை எளி ய முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவுகின்றது.

வளையல் விழா:

பிரசாந்த் மருத்துவமனையை சேர்ந்த மகப்பேறு இயல் மரு த்துவரான கீதா பிரியா ‘வளையல்க ளை கர்ப்பிணிகளுக்கு பரிசளிக்கும்போது அந்த வளையலின் சத்தம் குழந்தை யை சென்றடைகின்றது. செவியைமட்டும் பயன்படுத்தி வெளியுலகை உணரமுடியும் தன்மையை கொண்ட சிசு இத் தகைய சத்தங்கள் கேட்பதற்கு ஏங்கிக் கொண்டிருக்கும்’ என் று கூறுகிறார். இதுதான் நமக் கு பிரசவத்தை எளிதாக்குகின்ற து.

பிரசவ இடம்:

வளையல் போடுவது பிரசவத்தை எளிதாக்கு ம் என்று நாம் நம்புவ தை போல முதல் பிரச வத்தை தாய் வீட்டில் வைத்தால் அப் பெண் ணுக்கு பயங்கள் நீங்கி அவளின் எளிய பிரச த்திற்கு உதவியாக இருக்கும் என்ற கருத்தும் உண்டு. இது பிரசவத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கிய குறிப்பாகும்.

பயணம்:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்கு ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் செல்வார்கள். கரு கலைவ தற்கு வாய்ப்பு இருப்பதால் கடைசி மாதங்களில் செல்கின்றனர். அது மட் டுமல்லாமல் பிள்ளையை பெற்ற பின் கணவர் வீட்டிற்கு மூன்று மாதத்திற்கு பின் தான் வரமுடியும். இது உடலுற வை தவிர்பதற்காக செய்யப்படும் முயற்சியாகும்.

இசையின் அற்புதங்கள்:

காப்ப காலத்தில் பெண்களுக்கு பொதுவாக மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் நல்ல மெல்லிய இசையை கேட்டுக் கொ ண்டிருந்தால் இந்த மன அழுத்தத்தி லிருந்து அற்புதமாக தப்பிக்க முடியு ம். இது சிசு கேட்கும்திறனை அதிகரி க்கும். மிகவும் அதிகமான மன அழு த்தம் உள்ள பெண்ணிற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே குறைந் த எடை கொண்ட குழந்தைகள் பிற க்க வாய்ப்பு அதிகம்.

உணவு முறை:

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனிப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டும். வளை யல் போடுவது பிரசவத்தை எளிதாக்கும் என்று நாம் நம்புகிறோம் அல்லவா, அப் போது நல்ல சத்தான உணவு ம் இதற்கு உதவும் என்று நம் புவோம். இந்த ஒரு காரியத் தை எந்த ஒரு பெண்ணும் நிச்சயம் பின்பற்ற வேண்டு ம். இவை எந்த ஒரு விழாவில் இல்லாவிட்டாலும் இதை பின்பற்ற வேண்டும்.

நெய் சாப்பாடு:

இந்திய கலாச்சாரப்படி கர்ப்ப கால பெண்கள் கணவன் வீட்டி லிருந்து தனது வீட்டிற்கு செல் லும்போது நெய் டப்பாவை கொடுத்தனுப்புவார்கள். ஏனெ னில் நெய் சாப்பிட்டால் தசை களை தளர வைத்து பிரசவத் தை சுலபமாக்கும் என்று அறி வியல் ரீதியாக நிருபிக்கப்படட விஷயமாகும்.

விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்:

எந்த ஒரு பெண்ணின் கர்ப்பகாலத்திலும், அவளது பெற் றோராலும் நண்பர்க ளாலும் அவள் மிகவும் தனித்துவமாக உபசரிக் கப்படுவாள். இவை அந் த பெண்ணை சந்தோ ஷமாகவும், மனதை அமைதியாகவும் வைக் கும். இது ஒரு முக்கிய மான ஆலோசனையா கும். இந்த சமயத்தில் மனதை அமைதியாக வைத்து உட லையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைப்பது பிரசவத் திற்கு மிகவும் அவசியமானதாகும்.

– பூபதி லஷ்மணன்

2 Comments

Leave a Reply