Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டீன்ஏஜ் பருவமங்கையரே! நீங்கள் அழகாக, சிவப்பாக‌, பிரகாசமாக இருக்க சில குறிப்புக்கள்

பதிமூன்று வயது முதல் பத்தொன்ப து வயது வரையிலான டீன் ஏஜ் பருவம் மிகவும் அழகாகவும், வண் ண மையமாகவும், பிரகாச மாகவும் இருக்கும் பருவமாகும். ஒரு பெண் ணின் வாழ்வில் வரும் டீன் ஏஜ் அவளுக்கு பல புது அனுபவங்களை கொடுக்கின்றது. அவர்களது உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களா ல் இது சாத்திய மாகிறது. டீன் ஏஜ் பருவத்தில்தான் உடல் மற்றும் மனதில்

அதிக மாற்றங்களை நாம் பார்க்கின் றோம். இந்த வயதில் ஏற்படும் சுரப்பி களின் மாற்றங்களால் பெண்களின் தோலில் பல்வேறு மாற்றங்களை கா ணமுடிகிறது. சருமம் சம்மந்தமான எந்தவித பிரச்சனைகளையும் பெண் களால் தாங்கிக் கொள்ள முடிவதில் லை. வயதிற்கு வரும்போதும் சருமத் தில் இத்தகைய மாற்றங்களை காண முடியும். பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவை வரவும் வாய்ப்புகள் அதிக ம். ஆகையால் இந்த பருவத்தில் சரும பராமரிப்பு மிகவும் அவசியமானதாக இருக்கின்றது.

குளிர் காலத்தில் நமது தோலின் தன்மை மேலும் கடினமாகி விடும். இந்த காலத்தில் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளு ம் வெளிப்படையாக தெரி யும். ஆகையால் குளிர் கா லத்தில் சருமத்தை மிக முக்கியமாக பராமரிப்பது அவசியமாகும். அழகான, பருக்கள் இல்லாத, மென் மையாக சருமத்தை பாது காக்க முயற்சி செய்யுங்க ள். குளிர் காலத்திற்கென் று இருக்கும் தனிப்பட்ட சரும பாதுகாப்பு பொருட்களை பய ன்படுத்துங்கள். இவை உங்கள் தோலில் அற்புதம் செய்யும். டீன் ஏஜ் பெண்கள் தங்களு டைய சருமத்தை பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ் கள் இதோ:

தோலைதூய்மைப்படுத்துதல்

இந்த செயல்தான் மிகவும் முக்கியானதாகும். சரும பராமரிப்பில் இது முதல் படியாகு ம். டீன் ஏஜ் பெண்களின் சுரப்பி களின் மாற்றங்கள் காரண மாக சருமத்தில் துளைகளும் அடைப்புகளும் ஏற்படக் கூடு ம். ஆகையால் இதை பயன்படு த்தினால் துளைகளில் உள்ள அழுக்குகளை எடுத்துவிடலாம்.

அழகு சாதனங்கள்

நல்ல நிறுவனங்களில் தயார் செய்யப்பட்ட தரம் நிறைந்த அழ கு சாதனப் பொருட்களை பயன் படுத்துங்கள். குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகும் வாய்ப் புகள் அதிகம். ஆகையால் இவற் றை பயன்படுத்துவது நமது சரு மத்திற்கு ஈரப்பதமூட்டி வெடிப்பு க்கள் வரமல் தடுக்கும்.

ஒப்பனை செய்யும் பொருட்க ளை தவிர்க்கவும்

அதிக அளவு ஒப்பனை செய்யாமல் இருப்பது நல்லது. அ வை சருமத்திற்கு கேடு விளைவிப்பவையாகும். சருமத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் ஆகியவற் றை அவை வரவழைத்து விடும். கடுமையான ரசாயன பொருட்களை இவை கொ ண்டிருப்பதால் டீன் ஏஜ் பெண்களுக்கு பெருத்த பாதிப்பை இந்த ஒப்பனை பொருட்கள் தரும்.

இறந்த திசுக்களை நீக்குதல்

நல்ல ஒரு ஸ்கரப் அல்லது கடலை மாவு பயன்படுத்தி சரு மத்தின் மேல் பகுதியில் உள்ள இறந்த திசுக்களை யும் உரிந்த தோல்களையும் நீக்கி விட முடியும். இவை உங்கள் சருமத் தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைக்திருக்க உதவும். அதிக அளவில் பருக்கள் இருக்கும் பெண்கள் இதை குறை வாக பயன்படுத்த வேண்டும்.

மாய்ஸ்சுரைசர் பயன்படுத் துங்கள்

குளிர்காலத்தில் ஏற்படும் வறணன்ட சருமப் பிரச்சனை களையும், அது தொடர்பான பிற பிரச்சனைகளையும் உடனடியாக நீக்க முயற்சி எடுங்க ள். குளித்த உடன் நல்ல மாய் ஸ்சுரைசரை உடலில் தடவிக் கொள்ளுங்கள். இது உங்கள் சரு மம் வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும். குளிர் காலத்தில் டீன் ஏஜ் பெண்க ள் சரும பாது காப்பிற்கு மாய்ஸ்சு ரைசர்கள் மிகவும் உகந்ததாகும்

குளிர் கால ஆடைகள்

குளிர்கால ஆடைகளை பயன்படுத் துங்கள். இது காலத்திற் கேற்ப அணிவது மட்டுமல்லாமல் உங்க ளது சருமத்தையும் பாதுகாப்பாக வைக்கும். உங்கள் உடம்பை முழு வதும் மூடும் ஆடைகளை விரும்புங்கள். மிகுந்த குளிரில் நாம் வெளி ப்படும் போது சருமம் பாதிக்கப்படும்.

வறண்ட உதடுகளை கவனிக்கவும்

பனி அல்லது குளிர் காலத் தில்உதடுகள் வறண்டு போவது இயற்கை. இந்த காலத் தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டி யது உகந்ததாகும். நல்ல தரமுள்ள லிப் பாமை எப்போதும் கையோடு வைத்துக் கொள்வது நல்லது. அவ்வப்போது இவற் றை அணிந்து கொள்ள முடியு ம்.

தண்ணீர் அளவு

எப்போதும் நிறைய தண்ணீர் குடியு ங்கள். இவை உங்கள் சருமத்தை இயற்கையாகவே ஈரப்பதமூட்டும். அது மட்டுமல்லாமல் தோலின் நீட்சி த் தன்மையையும் இது அதிகரிக்கும். டீன் ஏஜ் பெண்களுக்கு தண்ணீரின் அளவு அதிகமாக இருக்க வேண்டிய து அவசியமாகும்.

-பூபதி லஷ்மணன்

Leave a Reply