Friday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனிதர்களைத் தேடிக் கொல்லும் அதி பயங்கர மர்ம தீவு! – ஒரு திகிலூட்டும் உண்மை! – (ப‌டங்கள் இணைப்பு)

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலை கள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற் றுலா பயணிகளை கவ ரும் சுவாரஸ்யம் ஏரா ளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீ ரென மாயமாகி விடுகிறார்கள். இந்த மர்ம தீவு பற்றிய விஷ யங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பா லைவனக்கடல் என்று பெயர் பெற்ற

“துர்கானா ஏரி” கென் யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழை க்கப்ப ட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இரு ந்து நீர் வருகிறது. இங் கு நிலவும் கடும் வெப்ப த்தால், ஒருபகுதி ஆவி யாகிறது. மீதமுள்ள நீர் , அதிக உப்புத் தன்மையு டன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணி களை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவ னக் கடல் திகழ்கி றது.

குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறா த பழங்குடியின மக்க ளின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக் ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன. இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று “எ ன்வைட்டினெட்”. இங்கு வாழும் பழ ங்குடியின மக்கள் பேசும் மொழிசொ ல். இதன் அர்த்தம் “திரும்ப வராது” என்பதாகும். என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரு ம் திரும்பி வருவது கிடையாதாம்.

அறிவியல் ஆராய்ச்சிகளுக் கே சவால் விடும் வகையி ல் இந்த தீவு உள்ளது. முன் பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்ட மாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையா டுவது அவர்களின் தொழி லாக இருந்தது என்றும் பக் கத்து தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத் துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக் கத்து தீவுகளில் இருந்த வர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர் ம தீவாக மாறியது என் வைட்டினெட்.

கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந் த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார்.

என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வை த்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிக ள் திரும்பியபாடில்லை. இத னால் அதிர்ச்சி யடைந்த ஆ ராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்த னர். ஹெலிகாப்டரில் பறந்த படியே வேவு பார்த்தனர். எந் த தடயமும் கிடைக்கவில் லை. பழங்குடியினர் குடிசை கள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.

இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்க ள் சேகரித்தார். ‘அந்த தீவி ல் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணா மல் போய் விடுவார்கள். அப் படித்தான் அங்கிருந்த வர்கள் காணாமல் போயிரு ப்பார்கள்’ என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர். பிர மாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக் கு விடை கிடைக்கவில்லை.

இந்த தீவுக்கும், வேற்றுக் கிர கவாசிகளுக்கும் தொடர்பு உ ண்டா என்ற கோணத் திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள் ளது. இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண் ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக் கள் காற்றில் கரைகின்ற னர் என்றும் கூறப்படுகிறது. ஆ னால் மர்ம முடிச்சுகள் எதுவு ம் இன்னும் அவிழவில்லை.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply