Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காமராஜரிடம் கக்கன் சொன்ன‍து: “என்னுடைய ஆதரவு உங்களைப்போன்ற ஊழியருத்தான்!

”மதுரையில் ராணி மங்கம்மாள் சத்திரத்தின் முன்பாகத் தான் நான் முதன்முதலில் பெரியவ ரைப் பார்த்தேன்.

திரு.வெங்கடாசலபதி என்பவ ரைப் பார்ப்பதற்காக, நானும் எனது நண்பரும் அந்தப் பக்க மாக நடந்து போய்க்கொண்டு இருந்த போது, எதிரில் சற்றுத் தள்ளி, பெ ரியவரும் அவ ரோடு இரண்டு மூன்று பேரும் வந்து கொண்டு இருந்தார்கள்  ”இவர் தான் காமராஜ்” என்று கூறினார் என் நண்ப ர். காங்கிரஸ் ஊழியர்கள் எல் லாம், பெரியவரைப்பற்றி மிகவும் உணர்ச்சி வயப்பட்டு புகழ் ந்து பேசுவார்கள். ஊழியர்களுக்கு எல்லாம் அவர் ஒரு முன் மாதிரியாக

இருப்பதாகச் சொல்வார்க ள். ஆகையால், அவ ரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையோடு இருந் தேன். ஆனால், அதற்கு வாய்ப்பு கிட்டா மல் இருந்தது.

இப்போது பெரியவரே எதிரில் நடந்து வந்துகொண்டு இருக் கிறார். அவரிடம் வலியச் சென்று பேச எனக்குத் தயக்கமாக இருந் தது. மேலும் அவரோ, தன் சகாக் களுடன் எதையோ, தீவிரமாக விவாதித்துக்கொண்டு வந்தார். ‘ அறிமுகத்துக்கு இது ஏற்ற தருண ம் அல்ல’ என்று எண்ணி, பெரிய வரை வைத்த கண்வாங்காமல் பார்த்தபடியே நடந்துசென்று விட் டேன்.

இது நடந்தபோது எனக்கு 27 வய து இருக்கும். 1936 என்று நினைக்கிறேன்… மதுரையில், சே வாலயம் ஹாஸ்டலில் அப்போது நான் வார்டனாக இருக்கி றேன். ஹரிஜன மாண வர்களுக்காக, ஹரிஜன சேவா சங்க ம் இந்த ஹாஸ்டலை நடத்தி வருகிறது.

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே நான் காங்கிரஸ் கட்சியி ல் நாலணா மெம்பர். ஆனால், கட்சி வேலைகளில் ஈடுபட்ட து இல்லை. எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படித்தே ன். இங்கி லீஷில் ஒரே ஒரு மார்க் குறைந்ததால், ஃபெயில் ஆகிவிட்டே ன். மேற்கொண்டு படிக்க வசதி இல் லாததால், இந்த ஹா ஸ்டலுக்கு வார் டனாக வந்து சேர்ந்தேன்.

சிலஆண்டுகளுக்குப்பிறகு, மேலூரி ல் இருந்த ஹாஸ்டலை பார்த்துக்கொள்ளச் சொல்லி என் னை அனுப்பினார்கள். அங் கே ஹாஸ்டல் வார்டனாக இரு ந்துகொண்டு, கட்சி வேலை களிலும் ஈடுபட்டேன். அந்த தா லுக்கா காங்கிரஸ் கமிட்டி க்கு நான்தான் தலைவர்.

படிப்படியாக எனது கட்சி வேலைகள் அதிகரித்தன. பெரிய வரும் அரசியலில் மிகவும் தீவிரமா க இருந்தார். என்னைப்ப ற்றி அவ ரிடம் பலரும் கூறிஇருக்கிறார்கள். இருப்பினும், பெரி யவரைச் சந்திக் கும் வாய்ப்பு கிட்டாமலேயே இருந் தது.

1942 போராட்டத்தில் கலந்துகொண் டு, சிறைக்குப் போய், ஒன்றரை வரு ஷம் ஜெயில்வாசம் முடித்துவிட்டு, மறுபடியு ம் மேலூருக்கு வந்து ஹா ஸ்டல் பொறுப்பை ஏற்றுக்கொண் டேன்.

இந்தச் சமயத்தில்தான் பெரியவருக்கும் – உயர்திரு ராஜாஜி அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தன. பெரியவரோ ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற ஊழி யராக இருந்தார்.

காங்கிரஸ் கட்சியி ல் நானும் ஓர் ஊழி யன். அதனால், ஓர் ஊழியரின் ஆதரவு, மற்றோர் ஊழியருக் குத்தான் இருக்க வே ண்டும் என்ற எண் ணம் எனக்கு அசை க்க முடியாமல் ஏற் பட்டுவிட்டது.

1945-ல் திருப்பரங்கு ன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாடு நடந்தது. அந்தச் சமயத்தில்எல்லாம் நான் தமிழ்நாடு காங்கி ரஸ் கமிட்டி மெம்பராகிவிட்டேன். அந்த மகாநாட்டில்தான், நான் முதன் முதலில் பெரியவரைச் சந்தித்துப் பேசினேன். நண்பர் ஒரு வர் என்னை பெரியவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

‘உங்களைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன்!’ என்றார் பெரியவர்.

‘உங்களை நெடு நாட்களாகவே சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆவல். இப்போது தான் வாய்ப்பு கிட்டியது!’ என்று கூறி ய நான், ‘என்னுடையஆதரவு உங்களைப் போ ன்ற ஊழியருத்தான் கிடைக்கும்!’ என்றேன்.

‘ஊழியர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையில் வேற்று மை பாராட்டிப் பேச வேண்டாம். நியாய உணர்ச்சியுடன் கட் சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, உறுதியுடன் பணிபுரியுங்கள்!’ என்று பெரியவர் ரத்தினச் சுருக்க மாகக் கூறினார்.

அந்த வார்த்தைகள் இன்னும் என் மனத்தில் பசுமையாக இருக்கின் றன. காரசாரமான விவாதங்களு க்கு மத்தியிலும் அவர் பொறுமை யோடும் – நிதானத்தோடும் நடந் துகொண்டது இப்போதும்கூட என் மனக் கண்களில் தெளி வாகத் தெரி கிறது.

இதெல்லாம் நடந்து இன்று ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆகி விட்டன. முதல் சந்திப்பில் பெரியவர் எனக்கு ஓர் ஊழி ய ராகத்தான் தோன்றினார். ஆனால், இன்று பாரதம் போற் றும் உயர்ந்த தலைவர்களில் ஒருவராக நான் அவரை மதித் துப் போற்றுகிறேன். ஆனால் பெ ரியவரோ, அன்றும் சரி – இ ன்றும் சரி, என்னைத் தமது சகாவாகவே நினைத்துக் கொண்டு இருக்கிறார்.

எங்களிடையே ஏற்பட்ட முத ல் சந்திப்பு, சாதாரணமான தாக இருந்தாலும், எங்கள் இ ருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பாசமும், மன நெருக்க மும் அசாதாரணமானதாகும். இனி, எத்தனை பிறவி எடுத் தாலும் இது தொடர்ந்து வர வேண்டும் என்றுதான் நான் பிரா ர்த்திக்கிறேன்!”

(25-01-1970 ஆனந்த விகடனில் வெளிவந்த, நாற்பது ஆண் டுகளுக்கு முன்பு வந்த கட்டுரை. கக்கன் மற்றும் காமராஜ் அவர்களின் முதல் சந்திப்பு பற்றியது, கக்கன் அவர்களால் எழுதப்பட்டது.)

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: