ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகைகள் அனுஷ்கா மற்றும் ப்ரணிதாவை ரசிகர்கள் நெருக் கியடித்ததால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். நடிகைகள் இப்போதெல் லாம் ஷூட்டிங்கை விட அதிகம் காணப் படுவது ஜவுளிக் கடை, நகைக்கடை, கா ர் ஷோரூம் திறப்பு விழாக்களில்தான். இதற்காக கணிசமான சம்பளம் மற்றும் பரிசுகளைப் பெறு கிறார்கள்.
ஆந்திராவில் ராஜமுந்திரி மற்றும் காக் கிநாடாவில் புதிய ஜவுளிக் கடைகளை திறக்க
அனுஷ்கா மற்றும் ப்ரணிதாவை அழைத்திருந்தனர். இருவரையும் காண அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடி நின் றார்கள். அனுஷ்கா, ப்ரணிதா காரில் வந்து இறங்கியதும் அவர்களை கா ண கூட்டத்தினர் முண்டிய டித்தனர். தடுப்பு வளைவை தாண்டி இரு நடி கைகளையும் தொட்டுப்பார்க்க மு னைந்தனர். விழா அமைப்பாளர் கள் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முயன் றும் முடியவில்லை. அனுஷ்கா, ப்ர ணிதாவை ரசிகர்கள் நெருக்கியடித்த னர். உட னடியாக போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் லே சான தடியடி நடத்தி ரசிகர்களை விர ட்டினார்கள். இதில் சில ரசிகர்களுக் கு லேசான காயமும் ஏற்பட்டது.