Thursday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுயதொழில் – சிப்ஸ் தயாரிப்பது எப்படி?

சாட் அயிட்டங்கள் ஆயிரம் வந்தாலும் இன்றைக்கும் மவுசு குறையாமல் சக்கை போடு போட் டுக்கொண்டிருக்கிறது நம்மூர் சிப்ஸ். கால மாறுதல்களில் புதிய சிப்ஸ் அயிட்டங்கள் பல ஃபிளே வர்களில் பல பேக்கிங்களில் வந் தாலும், வாழை யடி வாழையாக தயாரிக்கப்படும் நேந்திரங்காய் சிப்ஸுக்கு இருக்கும் மார்க்கெட் அலாதியான ஒன்று! இத்தொழிலை ஆரம்பிப்பதும், லாபம் பார்ப்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமான

விஷயமில்லை என் பதே இதன் பெரிய பிளஸ் பாயின்ட்.

சந்தை வாய்ப்பு!

எந்த இடத்திலும் இந்த தொழிலைத் தொடங்கலாம் என்பது இதற்கிருக்கும் தனிச்சிறப்பு. நல்ல வருமானம் தரக்கூடிய, பரவலான வியாபாரத்தைக் கொண்ட தொழில் என்பதால் உள்ளூர் அளவிலான தயாரிப் பாளர்கள் இதில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். சில்லறை வி யாபாரம் மட்டுமல்லாமல், பள் ளி மற்றும் கல்லூரி கேன்டீன்க ள், ஓட்டல்கள், மதுபான விடுதி கள், ரயில்வே மற்றும் விமான கேட்டரிங் ஒப்பந்தம் என பல இடங்களிலும் மொத்த விற்ப னைக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. பெரிய பிராண்டட் நிறுவனங்கள் இருந்தாலும் தரமாகவும், சுவை யாகவும் இருக்கும் பட்சத்தில் மக்கள் தே டிவந்து வாங்கிச்செல்கிற நி லை இருக்கிறது.

தயாரிக்கும் முறை!

உருளைக்கிழங்கு மற்றும் நேந் திரன், மொந்தன் வாழைக் காய் களில் செய்யப் படும் சிப்ஸ்களே அதிக அளவில் விற்பனை யாவதால், இந்த காய்களில் நல்ல தரமான காய்களாகப் பார்த்து வாங்க வேண்டும். சிப்ஸ் செய்வதற்குமுன் காய்க ளை நன்கு கழுவி தோ லை நீக்கி, இதற்கென பிர த்யேகமாக இருக்கும் இய ந்திரத்தைக் கொண்டு தகு ந்த அளவுகளில் நறுக்கி, மீண்டும் ஒருமுறை நன்கு கழுவி காய வைக்க வே ண்டும். தரமான எண்ணெ ய்யில் பக்குவமாக பொறி த்தால் சிப்ஸ்ரெடி. தேவை யான அளவு உப்பு மற்றும் காரம் சேர்த்து, சூடு ஆறியதும் பேக்கிங் செய்யவேண்டும்.

தரக்கட்டுப்பாடு!

எல்லாத் தொழிலுக்கும் தரம் முக்கியம் என்றாலும், சிப்ஸ் தயாரிப்பு என்பது உணவு சம்பந் தப்பட்ட தொழில் என்பதால் கூடுதல் அக்கறையோடு தரமா கவும், சுகாதாரமாகவும் செ ய்ய வேண்டும். இத் தொழிலைத் தொடங்கும்முன் உணவு பதப்ப டுத்தல் மற்றும் உணவுக் கலப்படத்தடுப்புத் துறைகளிலிருந் து அனுமதி பெற வேண்டும். ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழைப் பெறுவதுபோல, உங்கள் தயாரிப்புக்கு பி.ஐ.எஸ்(பீரோ ஆஃப் இந்தியன்ஸ் டாண்டர்ட்) தரச் சான்றிதழ் வாங்குவது அவசியம். அதன்மூலம் உங்கள் தயாரி ப்பு மீதான நம்பிக்கை மக்களிடம் அதி கரிக்கும்.

நிலம் மற்றும் கட்டடம்!

இத்தொழிலைத் தொட ங்க சுமார் 250 சதுர அடி இடம் வே ண்டும். இதில் 125 சதுர அடிக்கு கட்டட ம் கட்டவும், 75-80 சது ரடியில் குடோன் மற்று ம் பேக்கிங்அறைக்குஎன ஒதுக்கிக் கொள்ளலாம். நிலத்தின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாயாகவும், கட்டடம் கட்ட மதிப்பு 3.15 லட்சம் ரூபாயாகவும் திட்ட மிடலாம். இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொறுத் தது.

இயந்திரம்!

300 வேலை நாட்களில் இரண்டு ஷிப்ட்களாக வேலை பார்த்தால் ஆண்டுக்கு 50 டன் சிப்ஸ் தயாரி க்கமுடியும். இந்த இயந்திரங்கள் கவுஹாத்தி, கொல்கத்தா, கோய ம்புத்தூர், சென்னை போன்ற இட ங்களில் கிடைக்கிறது.

அத்தியாவசிய தேவைகள்!

தினசரி 10 ஹெச்.பி. மின்சாரம் மற்றும் 1500 லிட்டர் தண்ணீ ர் தேவைப்படும்.

மூலப்பொருட்கள்!

உருளைக்கிழங்கு தமிழ் நாட்டி ல் ஊட்டியில் கொள்முதல் செ ய்யலாம். நேந்திரன் வாழை கன்னியாகுமரி, திருச்சி, கேர ளாவில் கிடைக்கிறது. மற்ற பொருட்களான உப்பு, காரம், எண்ணெய் அனைத்தும் சுலப மாக கிடைப்பதுதான். நம து ஆண்டு உற்பத்தி 50 டன் எனில் உருளைக்கிழங்கு 44 டன், நேந்திரன் 25 டன் தேவைப்படும். உருளைக்கிழங்கில் சிப்ஸ் தயாரிக்கும்போது 30 சதவிகித மும், நேந்திரன் சிப்ஸில் 20 சதவிகிதமும் கழிவு ஏற்படலா ம்.

வேலையாட்கள்!

சிப்ஸ் தயாரிக்கத் தெரிந்தவர்கள்- 2

பேக்கிங் வேலையாட்கள்- 2

உதவியாளர்கள் – 2

விற்பனையாளர் – 1

செயல்பாட்டு மூலதனம்!

முதல் வருடத்தில் 60 சதவிகித உற்பத் தித் திறனுக்கு செயல் பாட்டு மூலதனம் 1.40 லட்சம் ரூபாய் தேவைப்படும்.

சிறிய அளவிலும், கொஞ் சம் பெரிய அளவிலும் இ த்தொழிலைச் செய்ய நி னைப்பவர்கள் தாராளமா க இறங்கலாம். தரம், சுவை, வாடிக்கையாளர் சேவை என ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தி னால் சிப்ஸ் தயா ரிப்புத் தொழில் உங்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுக்கும்.

-பானுமதி அருணாசலம்
படங்கள் : இரா. கலைச்செல்வன்

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

முகமது நிஷாத்,
கேரளா ஹாட் சிப்ஸ், சென்னை

”எல்லோரும் விரும்பி உண்ணும் பொருளாக இருக்கிறது. சுவையில் விட்டுக்கொடுக்காம ல் இருந்தால்தான் மார்க்கெட்டி ல் நிலைக்க முடியும். முழுக்க முழுக்க கைகளாலும் இத்தொ ழிலை செய்யலாம்; இயந்திரங் களின் உதவியோடும் செய்யலா ம். குறைந்த அளவிலான உற்பத் தி எனில் இய ந்திரங்கள் தேவை யில்லை. கொஞ்சம் பெரிய அளவில் இத் தொழிலை செய்ய நினைக்கிறவர்கள் இயந்திரங்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது.

குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் இருந்தால்கூட இத்தொழி லில் இறங்கி விடலாம். நல்ல தரமான எண்ணெ ய்யைப் பயன்படுத்தும் போதுதான் சிப்ஸ் சுவை யாக இருக்கும். பாம் ஆ யிலில் தயாரிக்கப்படும் சிப்ஸ்கள் மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கு ம். ரீஃபைன்ட் ஆயிலில் செய்தால், ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். எண்ணெய் கறுத்துவிட்டால் மேற்கொண்டு அந்த எண்ணெ ய்யைப் பயன்படுத்தக்கூடாது. புதிய எண்ணெய்யை பயன்ப டுத்தவேண்டு ம்.

எல்லா காலங்களிலும் உரு ளைக்கிழங்கு தாராளமாகக் கிடைக்கும். இதேபோல் நேந் திரம், மொந்தன், ரோபஸ்டா போன்ற வாழைக்காய்களும் எல்லாகாலங்களிலும் கிடைக் கிறது. இதில் வாடிக்கையாளர் கள் அதிகம் விரும்புவது நேந்தி ரம்தான். சரியான பதத்தில் பொரித்தெடுத்து, தேவை யான அளவு மசாலாக்களை சேர்த்து பேக்கிங் செய்தால் வியாபாரிக ளே நம்மைத் தேடி வருவர். பத்து, இருபது ரூபாய் அளவில் பேக்கிங் இருந்தால் நிறைய விற்பனையாகும்; நல்ல லாபமும்கிடைக்கும்.”

நன்றி விகடன்

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: