Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாரதி கண்ட பாஞ்சாலியும் துச்சாதனனும்! – (இறப்பிற்கு முன் பாரதியின் கடைசி ஒளி படம் இணைப்பு)

தம்பி துச்சாதனா….இழுத்துவா திரௌபதியை…..

அண்ணனின் கர்ஜிக்கும் குரல் கேட்டு அதிர்ந்து எழுந்தான் துச் சாதனன்.தான் கேட்டதை நம்ப முடியாதவனாக, திகைத்தது அவ னது குழம்பிய முகத்தில் தெளி வாகத் தெரிந்தது.

தன் கட்டளையைக் கேட்டபிறகும் அசைவற்று நிற்கும் துச் சாதனனைப் பார்த்து மீண்டுமொருமுறை சொன்னான்…

இழுத்துவா பாஞ்சாலியை….மண்ணாளும் மன்னவர் பலர் கொலு வீற்றிருக்கும் இந்த

மணி மண்டபத்தில் அந்த பாண் டவர் பத்தினியை கொண்டு வந்து நிறுத்து……

கொக்கரித்தான் கொடுமதி துரியோதனன்.

இந்த முறை செவி வலிக் க செப்பியவனின் மொழி கேட்டு மனமடக்கி மண்ட பம் நீங்கினான் துச்சாத னன்.

போனவன் நின்றான் பொ ன்மகள் எதிரில். கைகள் நடுங்க கைகள் பற்றி இழு த்தான். காரனம் கேட்டவ ளுக்கு தோற்ற பொருள் நீ என்றான்.

தோற்க வேறெதுவும் தர்மரிடமில்லையா……

சீற்றத்தோடு கேட்டவளுக்கு மறு மொழி ஏதும் கூறாமல் மனதுக்கு ள் சொல்லிக்கொண்டான்…நான் கேட்க நினைத்த கேள்வியல்லவா இதுவென்று.

சற்று நேரத்திலேயே அண்ணியை அந்நியள் போல் அழைத்து வந்து மண்டபத் தின் மத்தியில் நிறுத்தினா ன். இதற்குள் துச்சாதனனி ன் மனம் பட்ட பாடு…..

அய்யகோ…. அன்னையை ப் போன்றவள், மூத்த அண்ணன் மார்களின் பத்தினி, ராஜ வம்ச த்தின் மரியாதை … .இ வளை தொட்டு இழுத்து வந்த இந்த கைகள் வெட்டுண்டு விழுந்தி ருக்கக்கூடாதோ…..கடத்தி வந்த கால்கள் கத்திக்கு இரை யாகி யிருக்கக்கூடாதோ……

அன்னையாகிய அண்ணியே…மன்னித்துவிடம்மா….ஒரு குரு தி ஓடும் இரு உடல்களாய் வாழும் சகோதர்களில் ஒரு வனாய் ஆகிப்போனதால், அண்ணனின் கட்டளையை தட்ட முடியவில்லை தாயே.. ….

பழிவருமே என்றென்னா மல் இழிசொல் சொன் னானே … கலி மீது நடக் கா கொடுமையாய் மொ ழி ஒன்று சொன்னா னே …உடன்பிறப்பு தொன் னூற்றொம்பது….. மற்றவரை விடு த்து எனை ஏவினானே அதை என்னென்பது….இனி என்ன நிகழப்போகிறதோ… மமதை த லைக்கேறிய முன்னவன், எங்கள் மன்னவன் என்ன இயம் புவானோ…..

சஞ்சலத்தில் துச்சாதனனின் பாசமும், பண்பும் முட்டி மோதி யதில் வெப்பமுண்டாகி வியர்வையாய் வீரத்தேகம் நனைந் து வழிந்தது.

இடியாய் இறங்கியது அண் ணனின் அடுத்த கட்டளை….

அவள் ஆடையைக் களைந் து அவமானப்படுத்து…..

காய்ச்சிய கம்பிகளாய் அண் ணனின் சொல் காதுகளில் நுழைந்தது….

அய்யோ ஆடையெடுப்பதிலும்மேல் அவள் ஆவியெடுப்பது …. நானா அந்த பாதகத்தை செய்ய வேண்டும்….எனக்கா இ ந்த இழி செயலுக்கான ஓலை….இதுவல்லவே என் வேலை ….

டவுளே எனைக் காப்பாற் று….தனயனால் தாயின் மானம் தகர்க்கப் படுவதை தடுத்து நிறுத்து…..ஒன்றாய் வளர்ந்த பாவத்திற்காக, க ன்றே பசுவை களங்கப்படுத் தலாமா. …

துச்சாதனா ஏன் தயக்கம்? எதற்கு இந்த மயக்கம் …. துகி லுரித்து தூய்மை ஒழி ….மகிழும் உன் அண்ணனி ன் விழி.

துரியோதனன் துரிதப்படுத்தினான்……

வழியின்றி அந்த இழிசெயலை துவங்கினான் துச்சாதனன் ….

கண்ணா…கார்மேகவண்னா, மாயம் போதும்…..கதறும் என் குரல் உன் காதுகளை கடக்க வில்லையா ….. எனைக்காக்க இந்த அவதாரம் நீ எடுக்கவில் லை யா…என்மேல் கரிசனம் காட்டு…உன் தரிசனம் காட்டு….

பாஞ்சாலியின் அபயக் குரல் அந்த ஆயர்குலத்தோனின் செ விசேர்ந்த மறுநொடி அங்கு உதித் தான்…..துகில் கொடுத்து திரௌபதியின் துயர் துடைத்தான் …..

தெய்வமே எனைக் காத்தாய்…..இந்த பாவியின் குருதியெடு த்து கூந்தல் தடவி முடிந்து கொள்கிறேன்…அதுவரை அவிழ் ந்தது…அப்படியே இருக்கட்டும்….

பாஞ்சாலியின்சபதம் கேட் டு துச்சாதனன் மகிழ்ச்சியா ல் மனதுக்குள்துள்ளினான்.

ஆ…..பரந்தாமா….நீ ஆபத் தாந்தவன்…..அபய ரட்சகன் …. என் தாயின் மானம் காத்து நீ என்னைக் காத்தாய்…..தாயே என்னை மன்னித்துவிடு …. அடுத்த பிறவியில் என்னை மகனாய் பெற்றெடு……உன் பா தங்களில் பூக்களிட்டு என் பாவங்களைக் கழுவிக்கொள்கி றேன்…..என் குருதி உன் கூந்தலடைந்தால்…இப்பிறவிப் பாவத்தில் சொற் பமேனும் குறையும்….என் மனதின் பாரம் அற்பமேனும் மறையும்…..

தாயே நீ வாழ்க!

துச்சாதனன் எழுந்தே – அன்னை துகிலினை மன்றிடை யுரிதலுற் றான்.

“அச்சோ, தேவர்களே!” – என்று அலறி அவ்விதுரனுந் தரை சாய்ந் தான்.

பிச்சேறியவனைப் போல் – அந்தப் பே யனுங் துகிலினை உரி கையிலேஉட்சோதியிற் கலந்தாள் – அன்னைஉலகத்தை மற ந்தாள், ஒருமையுற்றாள்

(இந்த பாரதியின் வரிகளை வாசித்த போது…துச்சாதனனின் இன்னொரு பக்கம் எப்படி யோசித்திருக்குமென்று கற்பனை செய்தேன்.பாரதிக்கு அன்னை யாய் தோன்றிய பாஞ்சாலி துச்சாதன னுக்கும் அன்னையாய் தோன்றியிருந் தால் அவன் மனம் என்னபாடு பட்டிருக் குமென்றுசொல்ல நினைத்தேன்.)

– கலைப்புதையல்

One Comment

Leave a Reply