Thursday, February 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாரடைப்பால் மரணத்தை தழுவுவது 15 முதல் 20 வயது வரை உள்ள இளம் பெண்களே அதிகம்! – அதிர்ச்சித் தகவல்

மாரடைப்பு பெண்களை அதிகமாக நெருங்காது என்ற காலம் ஒன்று இருந்தது. இன்று அனை த்திலும் ஆண்களுக்கு சரிநிகர் சமான மாக சாதனை படைக்கும் பெண்களுக் கும் ஆண்களுக்கு சமமாக மாரடைப்பு அபாயம் அதிகரித்துள்ளது. பெண்கள் கருவுறும் காலம், மாதவிடாய் காலங்க ளில் `ஈஸ்டோஜன்’ என்ற ஹார்மோன் சுரக்கிறது. 

இதன் காரணமாக ரத்தக்குழாய் சுருங்குவது தவிர்க்கப்படு ம். ரத்தத்தில் கெட்ட கொழுப்பு குறைத்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால்

பெண்களுக்கு ரத்த ஓட்டம் சீரடையு ம். மாரடைப்பு வருவது தவிர்க்கப்படும். இதன் காரணமாக பெண்களுக்கு மாரடை ப்பு ஏற்படும் விகிதம் குறைவாக இருந்தது. 

இன்றைய கால கட்டத்தில் உண வு வகைகள், வாழ்க்கை மு றை, பழக்க வழக்க மாற்றம் காரணமா க பெண்களுக்கும் மாரடைப்பு அதிகரித்துள்ளது. ஆண்களைப் போலவே பெண்களும் மாரடைப்பால் மரணம் அடையும் விகிதம் 50-க்கு 50 என்ற அளவில் அதிகரித்துள்ளது என்று சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்து ள்ளது.

15 முதல் 20 வயதுவரை உள்ள இளம் பெண்களும் தற்போது மாரடைப்பால் உயிர் இழக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தக வலும் வெளியாகி இருக்கிறது. இதை தடு ப்பது எப்படி?… இதய நல மருத்துவர் டாக் டர் பிரியா சொக்கலிங்கம் விளக்குகிறா ர்…

கொழுப்புசத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதும், உடல் உழைப்பு குறைந்துவிட்டதும், சரிவிகித உணவில் அக் கறை காட்டாததும் பெண்களி டம் மாரடைப்பு விகிதம் அதிக ரிப்பதற்கு காரணம் என்று கண் டறியப்பட்டுள்ளது. எனவே பெ ண்கள் இதை உணர்ந்து வழக் கை முறையை மாற்றி அமை த்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

அலுவலகங்களுக்கு செல்லும் பெண்களும், வீட்டில் சமை யல் செய்பவர்களும் தங்கள் உடல் உழைப்புக்கு தேவையா ன சக்தியை தரும் உணவு வகைகளை தேவையான அள வு மட்டுமே சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிடக்கூடாது. காலை உணவாக இட்லி, தோ சை, பழ வகைகளை தேவைக் கு ஏற்ப அளவோடு சாப்பிட வே ண்டும்.


காலை உணவுசாப்பிடாமல் இருக்கக்கூடாது. மதியம் குறை ந்த அளவு சாப்பிடவேண்டும். இரவில்அதைவிட குறைவாக சாப்பிடவேண்டும். இரவில் அதிகமாக சாப்பிடக் கூடாது . கணவன்-மனைவி இருவரு ம் வேலைக்குப்போகும் வீடு களில் இரவு உணவை ஓட்ட ல்களில் வாங்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதை தவி ர்க்க வேண்டும்.

தினமும் குறைந்தது 3 லிட்டர் சுத்தமா ன தண்ணீர் குடிக்க வேண்டும். இதை கடைப்பிடித்தால் உடல் எடை அதிகமா வதை தவிர்க்கலாம். பெண்கள் உடல் நிலையை நன்றாக பராமரிக்க மனநிலையை சரியாக வைத்துக் கொள்ள வே ண்டும். தினமும் அரைமணி நேரமாவது பயிற்சி செய்ய வே ண்டும்.

நடை பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் இதி ல் ஏதாவது ஒன்றை வாரத்தில் 5 நாட்களாவது செய்ய வேண் டும். இதுதவிர யோகா, தியான ம் போன்றவற்றையும் செய்தா ல் மனநிலை சீராகும். இதனால் மாரடைப்பு அபாயம் நீங் கும். உடற்பயிற்சி ரத்த ஓட்ட த்தை சீராக்கி மன அழுத்த த்தை குறைக் கும்.

சாப்பாட்டில் கால்பங்கு அரிசி, சப் பாத்திபோன்ற மாவுசத்து, பாதி அளவு காய்கறி, பழங்கள், கால்ங் கு மீன், பருப்பு, முட்டை போன்ற புர தசத்து இருக்கும்படி பார் த்துக் கொள்ள வேண்டும். இனிப்பு, வறுத்த உணவு பண்டங் களை தவிர்க்க வேண்டும். குறிப் பாக சோடா, கோக், பெப்சி போ ன்ற பானங்களையும், காபியை யும் குறைத்துக் கொள்வது உடல் நலத்து க்கு நல்லது.

இறைச்சி சாப்பிட விரும்புகிறவ ர்கள் வாரம் ஒருமுறை கோழி இறைச்சி வாங்கி சமைத்து சாப் பிடலாம். ஆடு, மாடு, பன்றி இறைச்சியை முடிந்த வரை சா ப்பிடாமல் இருப்பது நல்லது. காரணம் இதில் அதிக கொழு ப்பு உள்ளது.

கலப்பு தானியங்கள், விதைக ளில் உள்ள பருப்பு வகைகளில் ஊட்டச்சத்துகள் அதிகம், பாதா ம், பிஸ்தா, வேர்கடலை, முந்தி ரி போன்றவற்றை குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் ரத்த த்தில் நல்ல கொழுப்பு அதிகரி க்கும்.

கொழுப்பு இல்லை என்று உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதும் பிரச்சினையை உருவாக்கும். தேவைக்கு அதி கமான உணவு கல்லீரலில் கொழுப்பு சத்தாக மாற்றப்பட்டு உடலின் பல்வேறு பகுதிகளில் சேமிக்கப்படும். இதனால் பெண்களுக்கு வயிறு, இடுப்பு, தொடை பகுதியில் கொழுப்பு சேகரிக்கப்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும்.

இதனால் ரத்தத்தில் கொழுப்பு அதிகமாகி ரத்தக் குழாயில் படிந்து மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகும். சுவாசிக்கும் காற்று, குடிக்கும் தண்ணீர் தவிர எந்த உணவையும் தேவை க்கு அதிகமாக சாப்பிட்டாலு ம், அந்த அளவு கலோரிசக்தி செலவாகும் வரை உடல் உழை ப்பு வேண்டும்.

இல்லையென்றால், அதிக உணவு கொழுப்பாக மாற்றப் பட்டு உட ல் பருமனை அதிகரிக்கக் செய்து விடும். இதனால் மூட்டுவலி, சர்க்கரைநோய், ஆஸ்துமா போன்ற கோளாறு கள் ஏற்படும். உடல் பருமனால் அதிக வேலை செய்ய முடி யாது. உடற்பயிற்சி செய்ய முடியாது.

உணவு செரிக்காது. தசை, நரம்பு பலவீனமாகும், நெஞ் செரிச்சல், வாயுதொல்லை, அஜீரணம் உருவாகும். மார் பக புற்று நோய், கர்ப்பபை புற்று நோய் உருவாகவும் இது காரணமாக லாம். இதுபோன்ற பிரச்சினை களால் பெண்கள் தன்னம்பிக்கை இழக்கும் நிலை உருவாகு ம்.

இவற்றைஆரம்பத்திலே யே தடுக்க உணவு கட்டுப் பாடு, சரிவிகிதஉணவு, ம னதை மகிழ்ச்சியாக வைத் துக் கொள்வது, உடற்பயி ற்சி ஆகியவை அவசியம். இவற்றை முறையாக கடைப்பிடித்தால் ரத்த ஓட்டம் சீராகு ம். ரத்தக் குழாயில் அடை ப்பு ஏற்படாது. மாரடைப்பு வராது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: