


மேலும் சில பாதுகாப்பு குறிப்புக்கள்
கல்லீரல் பிரச்னைகளை, குழந்தைகளுக்கு, பெரியவர்களு க்கு என இரண்டு வகைகளா கப் பிரிக்கலாம். குழந்தைக ளுக்கானப் பிரச்னைகள் பிற வியிலேயே வரக்கூடியவை. பெரியவர்களுக்கு ஆல்க ஹால் மற்றும் ஆல்கஹால் அல் லாத காரணங்களால் கல் லீரல் நோய்கள் ஏற்படுகின்றன” என்று எச்சரிக்கும் டாக்டர்
நரேஷ் சண்முகம், கல்லீரல் பாதுகாப்புபற்றி அளிக்கும் குறி ப்புக்கள் இங்கே…
1. கொழுப்பை குறைப்போம்
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். அதிகப்படி யான கொழுப்புதான் கல்லீரல் பிரச்னைக்கு மிக முக்கியக் காரணம். கொழுப்பு கல்லீரல் திசுக்களில் சேகரித்து வைக்க ப்படும்போது, கல்லீரல் திசுக் கள் பாதிக்கப்படும். நாள் ஆக ஆக பாதிக்கப்பட்ட கல்லீரல் செல்களும் அழிந்துவிடும். பின்னர், அந்தக் கொழுப்பு ரத்தத் தில் பயணித்து உடலின் வேறு பகுதிகளுக்கும் சென்றுவிடு ம். இப்படி லட்சக் கணக்கில் கல்லீரல் செல்கள் அழியும்போ து கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis )ஏற்படும். இதைத் தவி ர்க்க உணவில் கொழுப்பு அளவைக் குறைக்க வேண் டும். நாம் சாப்பிடும் உணவி ல் உள்ள தேவைக்கு அதிகமான கலோரியைக் கொழுப்பாக மாற்றும் பணியைக் கல்லீரல் செய்கிறது. சராசரியாக பா சல் மெட்டபாலிக் ரேட் (basal meta bolic rate) என்பது ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 1,600 – 1,800 கலோரியாகவும் பெண்களுக்கு 1,300 முதல் 1,500 க
லோரியாகவும் இருக்கவேண்டு ம். உங்கள் உடலுக்கு ஏற்ற பாச ல் மெட்டபாலிக் ரேட் எவ்வளவு என்பதைக் கண்டறிந்து, அதற் கு ஏற்ற வகையில் உங்கள் உ ணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பாடி மாஸ் இன்டெக்ஸ் குறியீடு 17 முதல் 24.99 என்ற அளவில் இருக்கும் படி பார்த்துக்கொள்வது அவசி யம்.
2. இயற்கை உணவு
ஆட்டிறைச்சியையும் மாட்டிறைச்சியையும் தவிர்க்க வேண் டும். மாற்றாக, மீன் சாப்பிட லாம். அதுவும் எண்ணெயில் பொரிக்காமல், குழம்பு மீன்க ளாகச் சாப்பிடலாம். காய் கறிகள், பழங்கள், பருப்பு வ கைகளை சாப்பாட்டில் அதிக ம் சேர்த் துக்கொள்ளலாம். உடல் பருமன் ஏற்படாமல் இருக்க, ஐஸ் கிரீம், நொறுக் குத் தீனிகள், சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். இது மாரடைப்பு, சர்க்கரை நோய், ரத்தக் கொதி ப்பு போன்றவற்றையும் தவிர்க்க உதவும்.
3. உடற்பயிற்சி
கொழுப்பைக் கரைக்கவும் உடல் எடை யைக் குறைக்கவும் உடற்பயிற்சி நல்ல வழி. நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளி ங் , யோகா… உங்களுக்குத் தோதான உடற்பயிற்சி எதுவோ, அதைச்செய்யுங் கள். உடலைக் கட்டுக்கோப்பாக வைத் துக் கொள்ளுங்கள்.
4. மதுவுக்கு நோ நோ
மது அருந்தும்போது அது கல்லீரலைத்தான் சென்று அடை கிறது. அங்கு அது செல்களுக் கு ஆற்றலை அளிக்கக்கூடிய மைய அமைப்பான மைட்டோ கான்டீரியாவைத் தாக்குகிற து. இதனால், செல்களுக்குப் போதுமான ஆற்றல் கிடைக் காமல் பாதிக்கப்படுகின்றன. செல்கள் பாதிக்கப்படும்போது, அந்த இடத்தைக் கொழுப்பு ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனாலும், கல்லீரல் பெரிதா கும். பின்னர் அந்த செல் முற்றிலும் இறக்கும்போது, சுருங்
குதல் என்பது நடக்கும். பாதிப்பைத் தானாகவே சரிசெய்து கொள்ளும் தன்மை உள்ளதால், கல் லீரல் புதிய செல்களை உற்பத்தி செய்யும். ஆ னால், அந்த நேரத்தில் கல்லீரல் புற் று நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கி றது. இப்பிரச்னைகளைத் தவிர்க்க மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
5. பாதுகாப்பான குடிநீர்
எலிக் காய்ச்சல், டைஃபாய்டு போன் ற வைரஸ் மூலம் பரவு ம் நோய்கள் கல்லீரலில்தான் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கல்லீரலில் ஹெபடைடிஸ் ஏ, பி, சி என பல வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இந்தக் கிருமி கள் அசுத்த மான தண்ணீர், ஆரோக் கியமற்ற சூழ்நிலையில்தான் பரவு கின்றன. எனவே, சுத்தமான தண்ணீ ரும் உணவும் கல்லீரல் பாதுகாப்புக் கு முக்கியமான அம்சங்கள். இதில் கவனம் செலுத்துங்கள். ஹெபடைடி ஸ் ஏ, பி-யைத் தவிர்க்க தடுப்பு ஊசியும் போடலாம்.
6. பரிசோதனை
பிறந்த குழந்தைகளுக்குச் சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோத னைகள் மேற்கொள்வதன் மூலம், 101 வகை வளர்சிதை மாற்றப் பிரச்னைகளைக் கண் டறியலாம். ஆரம்ப நிலையி லேயே நோயைக் கண்டறிந் தால், அதைக் குணப்படுத்து வதற் கான வாய்ப்புகள் அதிகம்.
7. மருந்து
அதீதமான மருந்துப்பயன்பாடும் கல்லீரலை ப் பாதிக்கும். எனவே, மருத்துவர்களின் பரிந் துரை இன்றி மருந்துகள் எடுத்துக் கொள் வதைத் தவிருங்கள்.
8. ஹெல்த் செக்கப்
பொதுவாக 35 முதல் 50 வயதுக்குள் இருப்பவர்கள்தான் கல் லீரல் பாதிப்பை அதிகம் எதிர்கொள்கிறார்கள். எனவே, இந் த வயதினர் கூடுதல் எச்சரிக்கையு டன் இருப்பது நல்லது. வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்து கொள்வது நல்லது. வாய்ப்பு இல்லாவிட்டால், கல்லீரல் செயல்பாடு பரிசோதனை யாவது செய்து கொள்ள வேண்டும்.
எல்லாவிதத்திலும் நம் உடலுக்குக் கா வல்காரனாக இருக்கும் கல்லீரலை நா ம் எந்த அளவுக்குப் பாதுகாப்பாகப் பரா மரிக்கிறோம் என்பதைஎல்லோரும் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டி யநேரம் இது. காவல்காரனையும் காக் க வேண்டியது நம் கடமை அல்லவா!
sir,
ennoda dad ku liver problem irukku. ninga sonnathu enaku nalla puriuthu. chennai la oru nalla doctor ah sollunga sir engappavoda liver ah check panna.
fst enoda dad pathi solren…
he is a former. oru varusathuku munnala avaruku dengue fever vanthuchu appo avoroda liver veengiduchu atha doctor saria kavanikama vitutanga.. 2 month ku apram avaruku vaithula rompa vali thanga mudima pochu general doctor kita kamichapa liver veekama iruku and blood la kolupu athigamaiduchu nu tablet 6 mnth saapida sonnanga inum sari agala. ipo 8 month aguthu athan enna pandrathune theriala. avala nalla velailam seivaru but ipalam velai senjale valikithunu thudikiraru so plz inform if u know any best doctor for liver problem