Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு – பருவ பெண்களுக்கான சரும பராமரிப்பு

பதிமூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரையிலான டீன் ஏஜ் பருவம் மிகவும் அழகா கவும், வண்ணமையமாகவும் பிரகாசமாகவும் இருக்கும் பருவ மாகும். ஒவ்வொருபெண்ணின் வாழ்வில் வரும் பருவம் டீன் ஏஜ்பருவம்தான் .அவளுக்கு பல வித புது அனுபவங்களை கொடு க்கின்றது. அவர்களது உடல் மற் றும் மனரீதியான மாற்றங்களா ல் சாத்தியமாகிறது. டீன் ஏஜ் பருவத்தில்தான் உடல் மற்றும் மனதில் அதிக மாற்றங்களை நாம் பார்க்கலாம் .

இந்த வயதில் ஏற்படும் சுரப்பிகளின் மாற்றங்களால்

பெண்க ளின் தோலில் பல்வேறு மாற்றங்களை காண முடிகிறது. சருமம் சம்மந்தமான எந்த வித பிரச்ச னைகளையும் பெண் களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. வயதிற்கு வரு ம் போதும் சருமத்தில் இத்தகைய மாற் றங்களை காண முடி யும்.

பருக்கள் கரும் புள்ளிகள் ஆகியவை வர வாய்ப்புகள் அதிக ம். ஆகையால் இந்த பருவத்தில் சரும பராமரிப்பு மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. குளிர் காலத்தில் நமது தோலின் தன்மை கடி னமாகி விடும். இந்த காலத்தில் சருமத் தில் ஏற்படும் பிரச்சனைகளும் வெளிப்படையாக தெரியும். ஆகையால் குளிர் காலத்தில் சருமத்தை மிக முக்கியமாக பராமரிப்பது அவசியமாகும். அழகான பருக்கள் இல்லாத மென் மையாக சருமத்தை பாது காக்க முயற்சி செய்யுங் கள். குளிர் காலத்திற்கெ ன்று இருக்கும் தனிப்பட்ட சரும பாதுகாப்பு பொருட் களை பயன்படுத்துங்கள். உங்கள் தோலில் அற் புதம் செய்யும். டீன் ஏஜ் பெண்கள் தங்களுடைய சருமத்தை பரா மரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ் கள் இதோ

தோலை தூய்மைப்படுத்துல் இந்த செயல்தான் மிகவும் முக்கியம். சரும பராமரிப்பில் இது முதல் படி யாகும். டீன் ஏஜ் பெண்களின் சுரப்பி களின் மாற்றங்கள் காரணமாக சரு மத்தில் துளைகளும் அடைப்புகளும் ஏற்படக்கூடும். ஆகையால் இதை பயன்படுத்தினால் துளைகளில் உள் ள அழுக்குகளை எடுத்து விடலாம்.

அழகு சாதனங்கள் நல்ல நிறுவனங் களில் தயார் செய்யப்பட்ட தரம் நிறைந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத் துங்கள். குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகும் வாய்ப் புகள் அதி கம். ஆகையால் இவற்றை பயன்படுத்துவ து நமது சருமத்திற்கு ஈரப்பதமூட்டி வெடிப்பு க்கள் வரமல் தடுக்கும்.

ஒப்பனை செய்யும் பொருட்களை தவிர்க் கவும் அதிக அளவு ஒப்பனை செய்யாமல் இருப்பது நல்லது. அவை சருமத்திற்கு கேடு விளைவிப்பவையாகும். சருமத்தில் கரும் புள்ளிக ள், பருக்கள் ஆகியவற்றை அவை வரவழைத்து விடும். கடுமையான ரசாயன பொருட் களை கொண்டிருப்பதால் டீன் ஏஜ் பெண் களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் .

மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள் குளிர்காலத்தில் ஏற்படு ம் வறண்ட சருமப் பிரச்சனைகளையும், அது தொடர்பான பிற பிரச்சனைகளை யும் உடனடியாக நீக்க முயற்சி எடுங்கள். குளித்த உடன் நல்ல மாய்ஸ்சுரைசரை உடலில் தடவிக் கொள்ளுங்கள். இது உங்கள் சருமம் வெடிப்பு ஏற்படாமல் தடு க்கும். குளிர் காலத்தில் டீன் ஏஜ் பெண்க ள் சரும பாதுகாப்பிற்கு மாய்ஸ்சுரை சர்கள் மிகவும் உகந்ததாகும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply