Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கம்பராமாயணத்துக்கு அடுத்தபடியாக ‘ராமநாடகம்’தான் பிரஸித்தம்! – சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

‘ராமநாடகம்’ பாட்டைப் போட்டவர் அருணாசலக் கவிரா யர். ராமர் விஷயமான இலக்கியம் என்று தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால் கம்ப ராமாயணத்துக்கு அடுத்த படியாக அவ ருடைய ‘ராம நாடகம்’தான் பிரஸித்தம்.
பிரஸித்தம் என்று புகழ் பெற்றிருப்பதில் இப்படி இர ண்டாவது ஸ்தானம் என்றால், ஜனங்களின் வாயிலே புர ண்டு வருகிறதிலேயோ அதற்கே கம்பராமாயணத்தை விடவும் முன் ஸ்தானம், முதல் ஸ்தானம். ஏனென்றால்
கம்பராமாயணம் எல்லாப் பொதுமக்களுக்கும் புரியாததா கக் கால வித்தியா ஸத்தால் ஆகி, இப்போது புலவர் மொ ழிக் காவியம் என்பதாக ஆகி விட்டது.
அருணாசலக்கவிராயர் இர ண்டே நூற்றாண்டு முன்னாடி தான் இருந்தவர் என்பதாலும் பதினெட்டாம் நூற்றாண்டி ன் ஆரம்பக் காலத்தில் பிறந்து எ ழுபது, எண்பது வயசு ஜீ வித்தவர் (1711-1788) அவர். அத னாலும் அவர் பேச்சு மொழி, முக்கியமாக ராக, தாளங்கள் போட்டுப் பாடும்படியான கீர்த்தனங்க ளாக, மொத்தத்தில் ஸர்வ ஜனரஞ்ஜ கமாக ஜனங்களின் வாய்ப் புழக்கத்து க்கு ஜாஸ்தியாக வந்துவி ட்டது.
‘ராமநாடகம்’ என்பதாக அது இருப்பது ம் ஸர்வ ஜன வசீ கரத்துக்கு இன்னொ ரு காரணம். அதிலே ராமாயணக் க தை முழுவதையும் சொல்லிக் கொ ண்டு போகும்போது கவி தன்வாய் மொழியாக மட்டும் அவசியமான அளவுக்கே விருத்தமா கவும் பாட்டாகவும் பாத்திரங்களின் வசனங்களாகவே பாட்டுக்களின் மூலம் சொ ல்வது, அதைவிட ஜாஸ்தி யாக அதிலே வருகிற பாத் திரங்களின் வசனங்களாக வே பாட் டுக் களின் மூலம் சொல்வது என்று ரூபம் பண்ணியிருக் கிறதால் அ து நாடகமாகவே நடிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது. அதி லும் Opera என்கிற ஸங்கீத நாடகமாக மாத்திரமில்லாம ல் நாட்டிய நாடகம், Dance-Drama என்று சொல்கிறார்க ளே அப்படி! அந்தப் பாட்டுக்க ளை நாட்டியத்துக்கு ஏற்ற மாதிரியே அவர் உசிதமான வார்த்தைகளையும் ரஸபாவ ங்களையும் கலந்து பண்ணி யிருக்கிறார்.
இப்படியெல்லாம் அந்த நூல் இருப்பதால் பொது ஜனங்க ளிலிருந்து ஸங்கீத வித்வான்கள் வரை பல பேரும் பாடி யும், கதாகாலகே்ஷபக்காரர்கள் கையாண்டும், ஸதிர்க் கச்சேரி ஸ் திரீகள் ஆடியும், நாட்டிய- நாடக மாக அப்படிப் பல பெண்டுகள் சேர் ந்து நடித்துக் காட்டியும் பல தினு ஸிலே அது பரவிவிட்டது. கீர்த்த னை என்று அந்தப் பாட்டுக் களைச் சொன்னாலும் ‘ராம நாடகக் கீர்த்த னைகள்’ என்றே அந்த ‘ஒர்க் ’குக்கு ப் பெயர் சொல்வதுண்டு.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ் வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Leave a Reply