Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புகைப்படங்களை எளிதாக பகிர உதவும் உன்ன‍த தளம்

உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளாமல் நேரடியாகவே பயன்படுத்தலாம் என்றுசொல் லும் இணையதளங்களை வி ரும்புகிறர்வர்கள், சிம்பில்நோ ட் இணையதளத்தை நிச்ச யம் நேசிப்பார்கள். புகைப்படங்க ளை எளிதாக பகிர்ந்து கொள் ளும் வகையில் உருவாக்கப்ப ட்டுள்ள இந்த இணையதளம் வழங்கும் முதல் எளிமை, பதிவு செய்யாமலே

பயன்படுத்தும் வசதி தான்.

இணையத்தில் புகைப்பட ஆல்பத்தை உருவாக்க விருப்பமா, சிம்பில்நோட் தளத்தில் நுழையுங்கள், புகைப்பட ங்களை பதிவேற்றத்துவ ங்குங்கள் அவ்வளவுதான் !. உங்களுக்கான ஆல்பம் தயார். தேவை என்றால் அதற்கு முன்னதாக , உங் கள் ஆல்பம் எப்படி இருக் கும் என்று பார்த்து கொள் வதற்காக மாதிரி ஆல்பத்தை கிளிக் செய்து பார்க்கலாம். மா திர் ஆல்பம் அட்டகாசம்,அசத்தல் என்றெல்லாம் சொல்ல முடியாது. சிம்பிளாக இருக்கிற து. வரிசையாக புகைப்படங்க ள்.மேலே ஒரு தலைப்பு. இதுதா ன் ஆல்பம். புகைப்படங்களை பெரிய அளவில் பார்கும்/ டவு ண்லோடு செய்யும் வ்சதி இருக் கிறது.

சரி, மாதிரி ஆல்பம் பார்த்தாகிவிட்டது. அடுத்து என்ன?  புதி ய ஆல்பம் பகுதியை கிளிக் செய்துவிட்டு உங்கள் புகைப்பட கோப்பை இழுத்து வந்து ஆல்பம் பகுதியில் வைத்தால்போ து. அல்லது பொறுமையாக ஒவ்வொருபடமாக கிளிக்செய் தும் பதிவேற்றலாம். உ ங்கள் வசதியை பொறு த்து.

இப்போது ஆல்பத்துக்கு ஒரு தலைப்பு கொடுக்க வேண்டும். அந்த ஆல்பத்தை மற்றவர்கள் பார்க்க அனுமதி க்கலாமா அல்லது நண்பர்களுக்கு மட்டும்தானா என குறிப் பிட வேண்டும். நண்பர்களுக்கு மட்டும்தான் என்றால், ஆல் பத்துக்கான  இணைப்பை இமெயில் வாயிலாக அனுப்பி வைக்கும் வசதி இருக்கிறது.

எளிதாக புகைப்பட ஆல்பத்தை உரு வாக்கி பகிர்ந்து கொள்ள விரும்புகி றவர்களுக்கு மிகவும் ஏற்ற சேவை. தனிப்பட்ட முறையிலும் இந்த சே வையை பயன்படுத்தலாம். அதே நே ரத்தில் மற்றவர்களையும் புகைப்படங்களை பகிர்ந்து கொ ள்ளும் கூட்டு முயற்சி நோக்கிலும் பயன்படுத்தலாம். இதற் காக ,ஆலபம் உருவாக்கும்போதே மற்றவர்களும் படங்களைபகிர அனு மதிக்க வேண்டுமா? என கேட்கப்படு கிறது. குறிப்பிட்ட நிகழ்ச்சி சார்ந்த எல்லா புகைப்படங்களையும் திர ட்டி பங்கேற்பு ஆல்பத்தை உருவாக்க இந்தவசதி உதவியாக இருக்கும். வர் த்தக் நிறுவங்ங்கள் தங்கள் பிராண்ட சார்ந்த நிகழ்ச்சி ப்டங்களை வாடிக் கையாளர்கள் பகிர வைக்க இதை பயன்படுத்தலாம். தனி நபர்களும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் போது விருந் தினர்கள் எடுக்கும் புகைப் படங்களை ஒரே இடத்தில் திரட்ட இதை பயன்படுத்த லாம்.

அட எளிமையான சேவை யாகவும் இருக்கிறதே. சூப்ப ராகவு ம் இருக்கிறதே என்று நினைக்கத்தோன்றுகிறதா? உண்மைதான். ஆனால் ஒரு சின்னசிக்கல். பகிர்வு வசதி கட்டணசேவை. இலவச சே வை உண்டென்றாலும் ஒரு மாதத்திற்கு தான் புகைப்படங் களை சேமித்து வைத்திருப்பார்கள். அதன் பிறகு மாத கட்ட ணம் உண்டு. பயன்பாடு இருந்தால் காசு கொடுத்தால் தான் என்ன?

இணையதள முகவரி: http://www.simpleneat.com/

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: