Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்றைய டீன் ஏஜ் பெண்கள் எதை அணிந்தாலும் அழகுதான்! போங்க!

பார்க்கிற எல்லாவற்றுக்கும் ஆசைப்படுகிற வயது டீன் ஏஜ். சக மாணவி முதல் சினிமா நடிகை வரை யார் என்ன செய் தாலும்கவனிக்கவும்,  பிடித்திருந்தா ல் பின்பற்றவும் நினைக்கிற வயது. டீன் ஏஜுக்கு முந்தைய பருவத்தின ருக்கும் சரி… டீன் ஏஜை கடந்த பிற கும் சரி… ‘இப்படித்தான் உடை அணி ய வேண்டும், நகை அணிய வேண் டும்’ என சில வரை முறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். ஆனா ல், டீன் ஏஜி ல் மட்டும்தான்,  விருப் பங்கள் அனைத்தையும் முயற்சி செ ய்து பார்க்கிற சுதந்திரம் இருக்கும். அந்த வயதில் என்ன வேண்டுமானா லும் அணியலாம். காரணம், அவர்க ள்  எதைச் செய்தாலும் அது அழகு… ஃபேஷன்!

பெரிய பெரிய கலர் ஃபுல் வளையங்கள், பெரிய

ஜிமிக்கிகள் அணிவதை விரும்பவும் ஒரு பிரிவினர் உண்டு.

கல்லூரிப் பெண்களின் விருப்ப நகைகளில் ஜங்க் ஜுவல்லரி (பெரிதாக, கன்னாபின்னா கலர்களில், அளவுகளில், டிசைன் கள்), ஆன்ட்டிக் ஜுவல்லரி  (பழ ங்காலத்து தோற்றம் கொ ண்டவை), ஆக்சிடைஸ்டு ஜுவல்லரி (லேசாக கருத்துப்போ ன வெள்ளியின் தோற்றம் கொண்டது), பிளாக் மெட்டல்  மற் றும் ஒயிட் மெட்டல் ஜுவல்லரி என எல்லாம் உண்டு.

சில பெண்கள் காதணிகளில் மட்டும் அதிககவனம் செலுத்துவார்கள். குழ ந்தைகளைப் போலவே கல்லூரிப் பெண்களு க்கும் பொம்மைகள் மீது மோகம்  உண்டு. டெடி பியர் வைத்து விளையாடுவதிலிருந்து, பொம்மை உருவம் பதித்த பொருட்களை உப யோகிப்பது வரை எல்லாம் அதன் பிரதி பலிப்புகளே…  காதணிகளும் விதிவிலக்கல்ல. இது தவிர, ஒற் றைக் கல் வைத்தது, பூ உருவம் கொ ண்டது, பட்டாம் பூச்சி, இதயம், டயமண்ட், சிலுவை, மீன்,  எலும்புக்கூடு, செருப்பு என விருப்பமான உருவங்கள் தாங் கிய காதணிக ளை அதிகம் அணிகிறார்கள்.

‘ஃபெதர் ஜுவல்லரி’ எனப்படுகி ற இறகு வைத்த நகைகள் டீன் ஏஜ் மற்றும் கல்லூரிப் பெண்க ள் மத்தியில் ரொம்பவே ஹாட்.  அதில் மயிலிறகு தான்  நம்பர் 1. வேறு வேறு கலர்களில் கிடை ப்பதால் மற்ற இறகுகள் வைத்த நகைகளுக்கும் டிமாண்ட் அதிக ம். 

கொலுசு அணிவதிலும் நாகரீக ம் மாறிப் போயிருக்கிறது. ஒரே ஒரு காலில், கயிறு மாடல் கொலுசு அணிவதுதான் ஹா ட் ஃபேஷன். தன்னை இன்னும்  கொஞ்சம் தைரியமான, நாகரீகமான பெண்ணாகக் காட்டிக் கொள்ள விரும் புவோர், தண்டை வடிவிலான காலைக் கவ்வும் கொலுசு அணிகிறா ர்கள்.

கழுத்துக்கு மல்ட்டி கலர் மணிகள் வைத்த நீளமான செயின் … அல்லது பெரிய டாலர் வைத்த கருப்புக் கயிறு…

மோதிர விரலைத் தவிர்த்து, ஆள்கா ட்டி விரலில் பிளாக் மெ ட்டலில் பெரிய மோதிரம் அணிவதே லேட்டஸ்ட். இரண்டு கைகளிலும் 3 – 3  விரல்களிலும் மோதிரங்கள் அணிவதும் ஃபே ஷன். அந்த 3 மோதிரங்களும் பிளாஸ்டிக், பிளா க் மெட் டல் மற்றும் சில்வர் என கலவையாகவோ, ஒரே மாதிரியோ இருக்க லாம்.

கல்லூரிப் பெண்களின் நடை உடை பாவனைகள் பெரும்பாலும் அவர்க ளது மனநிலையின் பிரதிபலிப்புக ளாகவே இருக்கும். தினசரி காலேஜ் போகும்  போது, குட்டி டாலர் வை த்த மெல்லிய செயின், குட்டிதோ டு, மெல்லிய பிரேஸ்லெட்… இவை தான் பெரும்பாலான பெண்களின் சாய்ஸ். 

கல்லூரிப் பெண்களின் நடை உடை பாவனைகள் பெரும்பாலும் அவர்க ளது மனநிலையின் பிரதிபலிப்புக ளாகவே இரு க்கும்.

டிப்ஸ்… டிப்ஸ்…

*  ஹோம்லியான முகவாகு உள்ளவ ர்கள், குட்டி டாலர் வைத்த செயினு ம் சின்ன தோடும் அணியலாம்.

*  கழுத்து மிகவும் அகலமாக இருப்பவர்கள், கழுத்தை மூடி யபடி துப்பட்டா அணிந்து கொ ண்டு, காதுகளுக்கு (இன்னொ ரு துளையில்) இரண்டு தோடு கள்  அணியலாம். கழுத்தின் மீ து கவனம் திரும்பாமல், காது களின் மீது குவியும்.

*  உயரம் குறைவானவர்கள், நீள மான சங்கிலி மற்றும் தொ ங்கும் மாடல் காதணிகளைத் தவிர்க்க வேண்டும்.

*  உடைக்கு மேட்ச்சாக நகை அணி வது மட்டும் முக்கிய மல் ல… அதே கலரில் நெயில்பாலீஷ், செருப்பு மற் றும் ஹேண் ட்பேக் வைத்துக் கொள் வதும்  முக்கியம்.

நீளமாக முடி வளர்ப்பதும், இன்றை ய பெண்களிடம் ஒரு ஃபேஷன். நீள மான முடியை பின்னல் போடும் போ து, காதோடு ஒட்டிய சின்ன தோடு கள்  அழகு. அதுவே தலையை விரி த்தபடி விடுவதானால், நீளமான, தொங்கும் மாடல் கா தணிகள்தான் பொருத்தம்.

ஒற்றைக் கைக்கு பட்டையான, ஒரே வுட்டன், பிளாஸ்டிக், திரெட், மெழுகு, காப்பர் ஃபினிஷ் மற்றும் பிளாக் மெட்டலில் ஒரே ஒரு பெரிய வளையல்…

இது போரடிக்கும் போது, ஒரு கையில் மட்டும் மெலிதான வளையல்கள்… அதாவது, கையையே மறைக்கும் அள வுக்கு ஒன்று, ஒன்றரை டஜன்  வளை யல்களை மொத்தமாக அடுக்கிக் கொள்வது தான் இப்போது ஃபேஷன். 

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: