Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாதயாத்திரைச் செல்வதற்குமுன் செய்ய‌வேண்டிய முன்னெச்ச‍ரிக்கைகள்

சபரிமலைக்கு மாலை போட்டுப் பாதயாத்திரை போவதும், பழநிக்குப் பாத யாத்திரை செல்வதும் என ஆன்மிக அன்பர்க ளுக்கே உரிய அற்புதமான கா லம் இது. பக்திப் பரவசத்தில், எந்த வித முன்னெச்சரிக் கையுமின்றித் திடீரென்று நடைபயணம் தொடங்கும் போது, பலருக்கு உடல்ரீதியான

பிரச்னைகள் வரும்.

‘நீண்ட நடைபயணம் மேற்கொள்பவர்களுக்கு தசைப்பிடிப் பும் மூட்டுவலியும்தான் பெ ரிய பிரச்னை. வயதானவர்க ளுக்கு ஏற்கெனவே மூட்டு வ லி இருப்பின் மூட்டுத்தேய்மா னம் அடைய வாய்ப்புள்ளது. நுரையீரல் சம்பந்தமான பிர ச்னை உள்ளவர்களுக்கு ‘வீசி ங்’ வரலாம். ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மதிய நேரங்க ளில் நடந்துசெல்லும்போது, ‘சன்ஸ்ட்ரோக்’ ஏற்படலாம். சி லர் குழந்தைகளை, தங்கள் தோள் பட்டையில் தூக்கி வை த்துக்கொண்டு நடப்பார்கள். அவர் களுக்கு முதுகுவலி ஏற் படும்

நடைபயணம் மேற்கொள்வதற்கு முன் செய்யவேண்டியவை :

இதய நோயாளிகள், சர்க்கரை நோ யாளிகள் டாக்டரின் ஆலோசனை யின் பேரில்தான் நடைபயணத்தை மேற்கொள்ளவேண்டும். பாதயாத்திரை தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு இரு ந்தே, கொஞ்சம் கொஞ்ச மாக ஓரிரு கி.மீ. வரை நடைப்பயி ற்சி செய்தால், தசைகள் மற்றும் தசை நார்கள் தொடர்பான பிரச் னைகளைத் தவிர்க்கலா ம். 35 வயதைத் தாண்டிய வர்கள் தங்களின் ரத்த அ ழுத்தம், ரத்தத்தில் சர்க்க ரை அளவைத் தெரிந்து கொண்டு நடைபயணத் தைத் தொடங்குவது நல்லது. உரிய பயிற்சிக்குப் பிறகு நடைபயணத்தை ஆரம்பித்தால், உடல் ரீதியான பிரச்னைக ள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.

நடைபயணத்தின்போது ஏற்படும் பிரச்னைகளும் தீர்வும்…

தசைப்பிடிப்பு, தசைவலிப் பிரச்னை உள்ளவர்கள் உடனடித்தீர்வுக்கு ஐஸ் கட்டி ஒத்தட ம் அல்லது குளிர்ந்த நீரை தசை ப்பிடிப்பு உள்ள இடத்தில் ஊற்றலாம். சிறிய ரத்தக் காய ங்களுக்கு ஐஸ் ஒத் தடம் கூடாது. ஒரு மணி நேரம் நடந்தால், குறைந் தது 10 நிமிடங்க ளாவது ஓய்வு எடுக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு, மூன் று மணிநேரம் நடப்பவர்க ள் அரை மணி நேரமாவது படுத்து ஓய்வு எடுக்க வே ண்டும்.

காலையில் நடக்க ஆரம்பிப்பதற்கு முன்பும், நடந்து முடிந்த பின்பும், மெதுவாகக் குதித்தல், தோள்பட்டையைச் சுழற்று தல், முழங்கை, முழங்காலை மடக்கி நீட்டுதல் போன்ற சின் னச் சின்ன ‘வார்ம் அப்’ பயிற்சிகள் செய்ய வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் காலில் காயம் ஏற்படா வண்ணம் பாதுகாப்பாக நடக்க வேண்டும். நாள்பட்ட சர்க்கரை நோயு ள்ளவர்களுக்கு காயங்கள் ஏற்படவில்லை என்றாலும் நர ம்புகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். இதய நோயாளிகள் அவ் வப்போது மூச்சுப்பயிற்சி கள் செய்யலாம். மெது வாக அதே சமயம் சீரான வேகத்தில் நடப்பது நல்ல து.

தொடர்ச்சியாக வெயிலில் நடக்கும்போது காலில் கொப்புள ம் வராமல் இருக்க, துணி அல் லது சாக்ஸ் அணிந்து கொண் டு நடக்கலாம். எச்சரிக்கையுட ன் செயல்பட்டால் பாதயாத்தி ரையும் பரவச யாத்திரையாக அமைந்துவிடும்.

பதமான பாதத்துக்கு…

உச்சி வெயிலில் நடக்கக் கூடாது. இதன் மூலம் சன் ஸ்ட்ரோ க்கில் இருந்து தப்பிக்க லாம்.

இரவில் நடப்பது வீசிங் பிரச்னையை ஏற்படுத்த லாம். எனவே, காலை நேரத்தில் நடப்பது நல் லது.

காலையில் நான்கு ம ணி நேரமும், மாலையி ல் நான்கு மணிநேரமும் நடந்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண் டும்.

வலி உள்ள இடங்களில் வலி நிவாரணிகளை, சூடு பறக்கத் தேய்க்கும்போது வலிகள் அதி கமாகுமே தவிர, குறையாது. மிதமாகத் தடவிவிடலாம்.

எக்காரணத்தைக் கொண்டும் சுளுக்கு எடுக்கக் கூடாது.

அதிக தூரம் நடைபயணம் மே ற்கொள்வதால் தண்ணீர், இளநீர், மற்றும் பழங்களை உணவாகச் சாப்பிடுவது நல்லது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: