Tuesday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேலைக்குச் செல்லும் தம்பதியரா நீங்கள் ? – உங்கள் உங்கள் உறவு, நல்லுறவாக இருக்க‍ சில வழிகள்

நிறைய மக்கள் எவ்வாறு பழகுவது என்பதை கற்றுக் கொ ள்ளுவதில்லை. இந்த திற மை இல்லையென்றால், ஒரு மனிதன் நெருங்கிய உறவினர்களுக்கிடையே உறவுகளை தொடரும் தன்மையை இழக்கிறான். தன்னுடைய உணர்வு களை வெளிபடுத்தும் திறமையும், பிறரை கவனிக்கும் திற மையும் இல்லாதவர்கள், நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. உ ங்கள் உரையாடும் திறனை வளர்ப்பதன் மூலம், உங்களுக் கும் உங்கள் துணைக்கும் இடையே

ஆன அன்பு அதிகரித்து உங்கள் உறவை பாதுகாப்பாகவும் வைக்க முடியும்.

இன்றைய காலகட்டத்தில், மரி யாதைக்குரிய உறவுள்ள தம்பதி யர்கள், தங்களுடைய வேலையி ன் காரணமாக தங்களுக்குள் நல் ல உறவு மற்றும் அன்பை பகிர்ந் து கொள்ள நேரம் இல்லாமல் உ ள்ளனர். வெளிப்படையான, உண் மையான மற்றும் நேர்மறையா ன உரையாடும் திறன் மட்டுமே ஒரு நல்ல மற்றும் சந்தோ ஷமான உறவு முறையை ஏற்ப டுத்துவதற்கு சிறந்த அடித்த ளமாக அமையும்.

தொடர்பு இன்மையால் நிறைய விவாதங்கள் மற்றும் கருத்து வே றுபாடுகள் ஏற்படுகின்றன. தம்பதி யருக்குள் ஏற்படும் வாதங்கள், சண்டைகள் மற்றும் முன்னும் பின் னுமாக பேசுவது போன்றவற்றை அவர்களுடைய திருப்தி யான உறவு முறையால் மட்டுமே தவிர்க்க முடியும். யாரா வது ஒருவர் விட்டுக் கொடுப்ப து, பிரச்சனையை நல்லவழியி ல் மாற்றி செலுத்த உதவுகிறது.

தனிப்பட்ட வேலையால், தம்ப தியர் சேர்ந்து சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் இருப்ப தால், உங்கள் உறவு மற்றும் தொடர்பு பெரிதும் பாதிக்கப்படு கிறது. நீங்கள் வெளியிலே யே அதிக நேரம் செலவிடுதலால் ,உங்களுக்கும் உங்கள் து ணைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு, உங்கள் உறவு முறை பாதிக்கப்படுகிறது. இதனால் யாராவது ஒருவர் முதிர்ச்சியுடன் கவனமாக செயல்பட்டு இந்த மாதி ரியான கஷ் டமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு மு றையாவது நேரம் ஒது க்குவதன் மூலமும், வெளியில் அழைத்து செல்வதன் மூலமும் உங்களுக்குள் இருக் கும் இடைவெளியை ந ல்ல வழியில் சரி செய்ய வேண்டும்.

கவனித்தல் சிறந்த உறவுமுறை நல்ல உரையாடல்களை பொறுத்தே அமையும். அதற்கு கவனித்தல் மிகவும் முக்கிய மாக விளங்குகிறது. இருவரும் சேர்ந்துபேசுவது என்பது ஒரே நேரத்தில் நடக்காத ஒன்று, ஒருவர் பேசும்போது மற்ற வர் கவனிக்க வேண்டும். அ தே போன்று ஒரே ஆளே தொ டர்ந்து பேசுவதும் தப்பான உறவு முறைக்கு வழிவகுக் கிறது. நீங்கள் உங்கள்து ணையின் பேச்சிற்கும் காது கொடுத்து கேட்டு அவர்களை நீங்கள் எந்த அளவிற்கு கவ னிக்கிறீர்கள் என்பதை காட் டவேண்டும்.

வெளிப்படையாயிருத்தல் நம்மு டைய உணர்வுகள் மற்றும் எண் ணங்கள் ஆகியவற்றை வெளிப் படையாக உங்கள் து ணையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது நம் அனைவருக்கும் இயற்கையா க வரும் சுபாவம் அல்ல. எனினும் இந்த பழக்கம்,எளிமையாகவும் இ யற்கையாகவும் உங்களுக்கு வரு வதற்கு தேவையான முயற்சிக ளை முதலில் மேற்கொள்ள வே ண்டும். இந்த நேரத்தில் கவனிப்ப தை விட பேசு வதில் கவனத்தை செலுத்த வேண்டும்.

நீங்கள் உங்கள் துணையி டம் ஒவ்வொரு நாளும் உங்கள் நாள் கழிந்த வித த்தையும், நீங்கள் வேலை செய்த இடத்தில் நடந்த சம்பவங்களையும் பகிர்ந் து கொள்ள வேண்டும். நே ர்மை நீங்கள் உங்கள் து ணையிடம், உங்கள் எண் ணங்க ளையும் உணர்வுக ளையும் வெளிப்படுத்துவதில் நேர்மை இல்லாவிடில், உங்க ள் உறவிற்கு எந்த மதிப்பும் இல்லை. எனவே உண்மை எவ் வளவு கசப்பாக இருப்பினும், கடினமான விஷயமாக இருப் பினும் உண்மையை கூறுவதும், நேர்மையாய் இருத்தலும் மிகவும் முக்கியமானது.

உறவில் ரகசியமும், பொய்யும் இல்லா மலிருந்தால், எளி மையாகவும், சிக்கல் இல்லாமலும், குழப்பம் இல்லாமலும் உறவு விளங்கும். மேலும் கடைசியாக, தேவையற்ற ஆச்சரியங்கள் மற்றும் விவரங்கள் போன்றவை கவனிக்கப்படா மல் இருந்தாலும் அவைஒளிவுமறைவின்றி பகிர்ந்து கொள் ளப்பட வேண்டும். கவனம் சிலநேரங்களில் சாதாரண உரை யாடல்கள்தான், பயங்கர மோதல்களுக்கும், விவாதங் களுக்கும் வழிவகுத்து விடு கின்றன.

எனவே ஒவ்வொருவரும் அவர்களுடைய துணையிட ம் பேசும்போதும், அவர்கள் கூறுவதை கேட்கும் போதும் கவன த்துடன் செயல் பட வேண்டும். உங்களுடைய துணை பேசும் போது, அவர்கள் பேசுவது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்க ள் பேசுவதை பொறுமையாக கேட்கவேண்டும். மரியாதை மற்றும் ஒத்துழைப்பு மரியா தைக் குறைவால்தான், பெரு ம்பாலான திருமணங்களில் சண்டைகளும் மோதல்களு ம் ஏற்படுகின்றன. கட்டாயப் படுத்துதல் மற்றும் தொழிலில்தாழ்வுபோன்றவைகளும் சில நேரங்களில் காரணங்களாகி விடுகி ன்றன. எனவே மரியாதை கொடுத்த லும், வாழ்வின் எந்த நிலையிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்த லும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமான வழியாகும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

One Comment

 • Very Nice and useful Article.The points given are Practically True. Also
  1. Couples should not give importance to their personal ego.
  2. Drinking habits spoil the family life.
  3. Cheating by Husband/Wife should be avoided. For example, having
  affair with other woman/man by either of the couple should be
  avoided.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: