Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (05/01/14) பெண்கள், இப்பருவத்தில் வரும் மன உளைச்சல்களில் இருந்து விடுபட்டு, அமைதியாக‌ வாழ

அன்புள்ள அம்மா —

ல்லூரியில் படிக்கும் மாணவி நான். பள்ளியில் படிக்கும் போது, நான் ஒருவரை காதலித்தேன். ஆ னால், அது இனக் கவர்ச்சி என்று, இப்போது புரிந்து கொண்டேன். நானும், அவனும் காதலித்த காலத்தில், பல இடங்களில் சுற்றி யுள்ளோம். இந்த விஷயம், வீட்டி ல்தெரிந்து, என்னைகண்டித்தனர். 

அப்பொழுதும் என்மனம், அவனையே நினைத்துக் கொண் டிருந்தது. மறுபடியும், அவனுடன், பல இடங்களில் சுற்றினே ன். விஷயம், மீண்டும் என் வீட்டிற்கு

தெரியவந்து, பெற்றோ ர் கடு மையாக கண்டித்தனர். 

என் பெற்றோரை இழந்து விடுவோமோ என்ற பயத்தில், அவனை பிரிய நேரிட்டது. ஒருவகை யில், அவனை பிரிந்தது நல்லதாக போயிற்று. அதற்குபின்தான், அவனு க்கு, மற்ற பெண்களுடனும், தொடர் பு இருப்பது தெரிந்தது. இதற்காக, நான் என் பெற்றோருக்கும், கடவுளு க்கும் நன்றி சொல்ல வேண்டும். 

அவனுடன் பழகிய நாட்களில், என் உடம்பில், அவனது பெய ரை, சூடு போட்டுக்கொண்டேன். எனக்கு, அப்போது அது பெரிய பிரச்னை யாக தெரியவில்லை. ஆனால், அது எவ் வளவு பெரிய தவறு என்பதை, இப்போ து உணர்கிறேன். என் வீட்டில் இது தெரிந்தால், மிகவும் வேதனைப்படுவர். தற்போது என் வீட்டில், மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கின்ற னர். 

இந்த விஷயத்தை, பெற்றோரிடம் சொ ல்ல முடியவில்லை. கணவனாக வருப வனிடமும் சொல்ல முடியாது; அதே சம யம் மறைக்கவும் முடியாது. என்னால், நிம்மதியாக இருக்க முடியவில்லை. இதற்கு, நீங்கள், ஒரு நல்ல பதிலைத் தர வேண்டும். தழும்பு மறைய வழி கூறுங் கள். 

ஒழுங்காக இருக்கும் பெண்க ளிடமே பல குறைகளை கண்டு பிடிக்கும் உலகத்தில், இப்படி ஒன்று இருப்பது தெரிந்தால், என்னாகும் என்றே சொல்ல முடியவில்லை. 

எனவே, உங்களிடம் எல்லாவற்றையும் மனம் விட்டு கூறி விட்டேன். தயவுசெய்து என்வாழ்க்கையின் நிம்மதிக்கு, ஒரு வழி கூறுங்கள். 

 இப்படிக்கு,
உங்கள் மகள். 

பிரியமான மகளுக்கு, 

உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன். உன் மன குமுறல்களை நன்கு உணர்கிறேன். 

‘பள்ளியில் படிக்கும்போது ஏற்பட் ட காதல், வெறும் இனக் கவர்ச்சி என்பதைப்புரிந்துகொண்டேன்…’ என, மிகத் தெளிவாக எழுதிய, உன்னை, நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். எல்லாப் பெண்க ளும் இந்தஉண்மையைத்தெரிந் து, பிரச்னைகள் வருவதற்கு முன் விழித்துக் கொண்டால், இப்பருவத்தில் வரும் மன உளைச்ச ல்களில் இருந்து விடுபட்டு, அமைதியான வாழ்க்கை வாழ லாம். 

இப்போது உனக்கு இருக்கும் ஒரே பிரச்னை, உன் உடம்பில் உன் காதலனின் பெயரை சூடு போட்டு க்கொண்டதும், அதனால் மாறாம ல் இருக்கும் தழும்பும்தானே… உட ம்பில் தழும்பு எந்த இடத்தில் இ ருக்கிறது என்று நீ குறிப்பிடவில் லை. பொதுவாக, உன்னை போன்ற பெண்கள், சூடு போட்டு க் கொள்ள, உடம்பின் மறைவான பகுதியை தான் தேர்வு செய்வர். 

நீ போட்டுக்கொண்ட சூடு, சாதா ரணமாக இருக்கிறதா இல்லை மிக ஆழமாக இருக் கிறதா, சிறி யதா, மிக பெரியதா போன்ற விபரங்கள் இல்லை. எது எப்படி இருப்பினும், நீ இதுகுறித்து, கவ லைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில், உன் பிரச்னைக்கு தீர்வு நிச் சயமாக உண்டு. 

முதலில் உணர்ச்சிவசப்படாமல், வெளிப்படையாக, உன் தழும்பு பற்றி உன் பெற்றோரிடம் கூறி விடு. 

நிச்சயமாக காதலனால் கெட்டுப் போகவில்லை; மனம் திரு ந்திவிட்டேன்; இடையில் ஏற்பட்ட, சின்னசறுக்கலில் இருந்து, மீண்டு வர உங்களது உதவி தேவை என் று, மனம்விட்டு கேள். 

அவர்களின் துணையுடன், திறமை யான, ‘பிளாஸ்டிக் சர்ஜனை’ அணு கி, முறையான சிகிச்சையின் மூல ம், அவற்றை சரிசெய்து விடலாம். 

இத்தழும்பு பற்றியோ, டாக்டரிடம் சென்ற விஷயம் குறித்தோ, நண்பி கள், உறவினர்கள் என்று யாரிடமு ம் எக்காரணத்தைக் கொண்டும் மூச்சுவிடக்கூடாது. பிற்கா லத்தில் இவர்கள் மூலம், உன் கணவருக்கு தெரிய வந்தால், விபரீதமான விளைவுகள் ஏற்படும். 

தன்னைத் தானே உடலாலும், மனதாலும் வருத்திக் கொண் டால்தான் பிரச்னைகளை தீரு ம் என்று, இனி, எக்காரணத்தை க்கொண்டும் நினைக்கக்கூடா து. 

பெண்கள், எளிதில் உணர்ச்சி வசப் படக்கூடியவர்கள் என்ற, இச்சமூகத்தின் சிந்தனையை மாற்றும் விதமாக, நீ நன்கு படித்து, பட்டம் பெற்று, நல்ல வேலையில் சேர்ந்து, கடி னமாக உழைத்து, உன் குடும்பத்தை உயர் நிலை க்கு கொண்டு வர முயற்சி செய். 

ஒரு பெண் நினைத்தால், எதையும் செய்வாள் என்ப தை நிரூபிக்க, இதுவே நல்ல தருணம். நீ வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துகள். 

— அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.
(நன்றி – தினமலர் வாரமலர் நாளிதழ்)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply