Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அபூர்வ வகையான பய உணர்வுகளும் (Phobias) அவற்றிலிருந்து விடுபடும் வழிகளும்!

பய உணர்வு தோன்றுவதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. பயம் என்பது ஆழ்மனதில் பதிந்த நிரந்தர பயமாகவும், அவவ ப்போது ஏற்படும் தற்காலிக பயமாக வும் இருக்கலாம். நம் மூளையிலுள் ள இருபக்க டெம்பொரல் லோபின் உட்புறம் உள்ள ´அமிக்டலா´ என்னு ம் திசுக் கூட்டம்தான் பயம் ஏற்படுவ தற்கான அடிப்படை மூளை அமைப் பாகும். எதிர் மறை மன உணர்ச்சிக ளை வெளிப்படுத்துவதில் இது முக் கியமாகச் செயல்படுகிறது. தன்னம் பிக்கையின்மையும், மனத் தடுமாற்

றமுமே பயத்தின் முதல் அறிகுறி.

பயம் என்பது பொதுவாக சிறுவயதிலேயே குழந்தைகளிடம் ஏற்பட்டுவிடுகிறது. பாதுகாப் பு இல்லாமைதான் ஒருவர் மனதில் பய உணர்வு ஏற்படு வதற்கு முக்கிய காரணமாகு ம். ஒருவருக்கு பயம்ஏற்படும் போது கண்களை அகல விரி ப்பது, கண் இமைகளை சுருக் குவது, வாய் மற்றும் உதடுகளை சுழிப்பது ஆகிய மாறுபட்ட முக பாவனைகள் உண்டாகின்றன. பயத்தில் கண்களையும் இறுக்கமாக மூடிக் கொள்கின் றனர். உடல் தசைகள் விறைப் பாகி வேர்க்கிறது. உடல் நடுக்க மும், படபடப்பும் ஏற்பட்டு மயங் கி நினைவிழக்கின்றனர். இதய த்துடிப்பும் அதிகமாகிறது.

2005 ஆம் ஆண்டு அமெரிக்கா வில் 13 – 15 வயதுள்ள இளம் வயதினரிடம் கணக்கெடுத்ததி ல் அவர்கள் எதன் மீது, எத்த கைய பயம் கொள்கிறார்கள் எ ன்று ஆராயப்பட்டது. அதில் முக் கியமாக கருதப்பட்ட சிறந்த 10 வகையான பயங்கள் வரிசைப்படு த்த ப்பட்டன.

1. தீவிரவாதத் தாக்குதல்கள்
2.சிலந்திகள்
3. இறப்பு
4. முயற்சியில் தோல்வி
5. போர்
6. உயரங்கள்
7.குற்றவாளி/குழு வன்மு றை
8. தனிமை
9.வருங்காலம்பற்றிய கவலை
10. அணு ஆயுதப் போர்
ஆகியவைகளாகும்.

அளவற்ற பயங்கள் இருந்த போதி லும், சிலருக்கு கேள்விப்படாத சில பயங்களும் ஏற்படுவது ண்டு.

அந்த அபூர்வமான 10 வகையான பயங்கள்.

1. புல்லாங்குழலைப் பார்க்க, இசை யைக்கேட்கபயம்- ஆலொஃபோபியா

2. சாக்லெட் போன்ற பொருட்கள் வாயின் உட்புறம் மேலன்னத்தில் ஒட் டிக் கொள்வதால் பயம் – அரக்கி புடி ரோ ஃபோபியா

3.முழங்கால்களைப் பார்க்க, நினை க்க பயம் – ஜெனு ஃபோபியா

4. நீளமான சொற்களுக்கு பயம் – (Hippo) கிப்போ பொடோ மான்ச்ட் ரஸ் ஸ்ஃயுப்ட் அலிஓ ஃபோபியா

5. நூல் மற்றும் நூல்கண்டைப் பார்த்து பயம் லினனோ ஃபோபியா

6. பாடல்களைப் பார்க்க, படிக்க பயம் – மெட் ரோ ஃபோபியா

7.ஷெல் மீன்களைப் கண்டால் பயம் – ஆஸ்ட்ரா கோனோ  ஃபோபியா

8. மஞ்சள் நிறத்தைக் காண பயம் – ஃசாந்தோ ஃபோபியா

9.சிரிக்க பயம்- ஜீலியோ ஃபோபியா

10. பயம் என்று நினைத்தால் பயம் – ப்போபோ ஃபோபியா

பயத்தை போக்குவது எப்படி?

முன்பு புரட்சி நடிகர் M.G.R நடித்த ´ கலங்கரை விளக்கம்´ என்ற சினி மாவில் கதாநாயகி சரோஜா தேவியைப் பார்த்து சொல்வார். பயம் என்பது ´சுவற்றில் ஒட்டிய சுண்ணாம்பு போல´, பல மாக தட்டினால்பட்டென்று விழுந்துவிடும் என்பார். அதுபோ ல துணிச்சலுடன் எதிர்கொண்டா ல் பயத்தையும் வெல்லலாம். மன தில் தோன்றும் பயத்தை தடு மாற் றமின்றி, தன்னம்பிக்கை துணை கொண்டு, மனஉறுதியுடன் செயல் பட்டால் பயத்தை வெல்வது நிச்ச யம்.

தனிமையைத் தவிர்த்து, உற்ற துணையுடம் இருக்க வேண் டும். பெரும்பாலும் இருட்டில் செல்வ தை தவிர்க்க வேண்டும். வீட்டில் தனிமையில் இருக்க நேரும்பொழுது, நல்ல புத்தகங்களைப் படிக்கலாம், ரேடியோ அல்லது சி.டிபிளேயரில் நல்ல இசை யை சப்தமாக க்கேட்டு ரசிக்க லாம். தொலைக் காட்சியில் நல்ல மகிழ்ச்சியான நிகழ்ச்சி க ளைப் பார்க்கலாம்.

பய உணர்வு ஏற்படும் நேரங்க ளில், பயம் நீங்கி தைரியம் பெ றும் வகையில் மனத்தில் ஓடு ம் எண்ணத்தையும், சுற்றுப்புற சூழ்நிலைகளையும் சமயத்திற் குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளவேண்டும். ஆன்மீக த்தில் நம்பிக்கையுடன், தெ ய்வ நம்பிக்கை மற்றும் தெ ய்வ வழிபாடுகளில் ஈடுபா டு கொண்டும் பயத்திலிரு ந்து விடுதலைபெறலாம். தேவைப்பட்டால் தகுந்த மனநல மருத்துவரிடமும் ஆலோச னை பெறலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: