Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நெஞ்சு வலி, மாரடைப்பின் அறிகுறியா? – மருத்துவர் குமார்

சின்னக்குழந்தைகள்முதல் பெரியவர்க ள் வரை இன்று எல்லோருக்கும் நெஞ்சு வலி வருகிறது. மற்ற வலிகளைக் கண் டு பயப்படுகிறோமோ இல்லை யோ, நெ ஞ்சுவலி என்றால் துடித்துப்போகிறோ ம். காரணம், நெஞ்சுவலியை மக்கள் எப்போதும், மாரடைப்பின் அறிகுறியா கப்பார்ப்பதுதான். ‘‘எல்லா நெஞ்சு வலி களும் மாரடைப்பின் அடையாள மில் லை…’’ என் கிறார் வலி நிர்வாக சிற ப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

‘‘மாரடைப்பினால் வரும் நெஞ்சு வலியானது, முதலில் நெஞ்சின் நடுப்பகுதியில் ஆரம் பிக்கும். மயக்கம், படபடப்பு, அதிக வியர்வை, வலி இடது கைக்கு ப் பரவுவது, நெஞ்சைப் பிசைகிற மாதிரியோ, அழுத்து கிற மாதிரியோ வலிப்பது, மூச் சுத் திணறல், அரிதாக சில நேரம் கழுத்திலும் வலி போன்றவை இருக்கும். ஆனால், ம ற்ற பிரச்னைகளின் காரணமாக வரக்கூ டிய நெஞ்சு வலிக் கும், இதயத்துக்கு ம் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நெஞ்சு வலிக்கான முக்கிய காரணங்களில் கழு த்து மற்றும் முதுகெலும்பு பாதிப்பு, தோள் பட் டை வலி, முதுகின் மேல் புற தண்டுவட சவ்வு பா திப்பு மற்றும் நெஞ்செலும்பு சந்திப்புகளில் உண்டாகிற தேய் மானம் போன்றவை அடக்கம். தவிர அக்கி எனப்படுகிற இன் ஃபெக்ஷனும் ஒரு காரணமாகலாம். வயதானவர்க ளுக்கு ஏற்படும் முதுகெலும்பு உ டைவதன் காரண மாகவும் இந்த வலி வரலாம்.

மேலேகுறிப்பிட்ட அனைத்தும் நா ள்பட இருக்கும். மயக்கம், படபடப் பு, மூச்சுத் திணறல் இருக்காது. எனவே வலி வந்ததும், இது ஆபத்தான இதய வலி இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கல்லீரல் பகுதி யில் ஏற்படும் வலி கூட நெஞ்சு வலியாக உணரப்படலாம். எக் ஸ்ரே, எம். ஆர்.ஐ ஸ்கேன் மற் றும் மருத்துவ ஆலோசனையி ன் மூலம் காரணத்தைக் கண்டு பிடித்து, அதற்கேற்ப சிகிச்சை யைத் தொடங்க வேண்டும்.

அக்கிவலியாக இருந்தால், ஒரு வித ஊசியின் மூலம் சரிசெய்யலாம். தோள்பட்டை வலியா னால், தோள்பட்டை தேய்மானம் மற்றும் வீக்கத்தைக் குறை க்க, தோள்பட்டை சந்திப்பில் ஊசியின் மூலம் மருந்தைச் செலுத்தி, சில பயிற்சிகளும் பரிந்து ரைக்கப்படும். நெஞ்செலும்பு சந்திப் புகளில் வயதானவர்களுக்கு வரும் வலிக்கு மாத்திரைகளும், பயிற்சிக ளுமே தீர்வு. முதுகெலும்பு நொறுங் குவதால் வரும் வலி வயதானவர்க ளுக்கு சகஜம். 11 மற்றும் 12- வது எலும்புகளே இத்தகைய நொறுங்குத லுக்குக் காரண ம்.

இது அடி படுவதாலோ, விபத்தினாலோ ஏற்படாமல், கால்சி யம் குறைபாடு காரணமாக வரும். மருந்து, மாத்திரைகள் பெரியளவில் உதவாது. வெ ர்ட்டிப்ரோபிளாஸ்டி எனப்ப டுகிற ஒரு ஊசி, எலும்பைப் பலப்படுத்தும் சிமென்ட்போ ல செயல்பட்டு, எலும்பை ப லப்படுத்தி, வலியைக்கு றை க்க உதவும். இதைப் போல ஒவ்வொரு காரணத் துக்கான பின்னணியைக் கண்டறிந்து, சரியான சிகிச்சை கொடுத்தாலே நெஞ்சு வலி யிலிருந்து மீண்டு நிம்மதியாக வாழலாம்…’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: