Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் குற்றவாளி ஆகிவிட்டேன்!” – ‘சுவாமி விவேகானந்தர்’ சொன்ன‍து

‘துறவியர்க்கு எல்லோரிடத்தும் எல்லாவற்றி லும் சம பாவம் இருக்கவேண்டும்’ என்று சுவா மிஜி உணர்ந்து கூறிய ஒரு நிகழ்ச்சி.

சுவாமிஜி அப்போது ஜெய்ப் பூரில், மன்னரின் விருந்தின ராகத் தங்கியிருந்தார். ஒரு நாள் மாலையில், மன்னருக் காக ஒரு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதற் கு சுவாமி விவேகானந்தரையும் அழைத்தார் மன்னர். ஆனால் சுவாமிஜியோ, நாட்டியப்பெண் ஒருத் தியின் கலை நிகழ்ச்சிக்கு சந்நியாசி ஆகியதாம் வருவதற்கி ல்லை என மறுத்துவிட்டார். இச்செய்தி அந்த நாட்டியப் பெண்ணுக்குத்

தெரிந்துவிட்டது. அம்புபட்ட வெண் புறா கதறுவதுபோல மிகவும் சோகத்து டன் பாடினாள் அவள். அந்தப் பாடலின் கருத்து…

‘பரமனே! சமபாவம் என்பதையே இயல்பா கக் கொண்ட நீ, பாவம் செய்தவள் இவள் என்று என்னை ஒதுக்கிட நினைக் கலாமா? இரும்புத் துண்டு ஒன்று, இறைவனின் பது மையில் பஞ்ச உலோகங்க ளில் ஒன்றுமாக அமைகிறது. பிறிதொரு இரும்புத் துண்டோ பிராணிகளைக் கொல்லும் பாவியின் கைவாளாக பாதகம் புரிகிறது. ஆயினும், இரண்டும் ரஸவாதியின் திறனால் மாச ற்ற பொன்னாய் மாறுவதையும் நீ அறிவாய்! பாவம் செய்த வள் இவள் என்று என்னை விலக்க 

நினைக்காதே!

சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ? காளிந்தி நதியின் புனித நீரும், கழிகாலி ல் வழிகின்ற இழிநீரும் ஒரு நிலையி ல் இனிய கங்கையில் இணைகின்றபோது ஏற்றம் பெறுவதை நீ ஏற்றுக்கொண்டவ ன் அன்றோ! பாவம் செய்தவள் இவள் என்று என்னை விலக்க நினைக்காதே! பரமனே, சமபாவம் என்பதே நின் இயல் பன்றோ?’

அவளது அந்த அற்புதகீதம் சுவாமிஜியி ன் காதில் விழுந்தது. உள்ளத்தைத் தொ ட்டது. சுவாமிஜியின் இதயம் இளகியது. ‘மாசு நிறைந்தவள்’ என்று உலகத்தவர் யாவரும் கருதிய ஒரு பெண்தான் எவ் வளவு அழகாக தனக்கு உயர்ந்ததொரு தத்துவத்தை உணர்த்திவிட்டாள்! பாவமு ம் புண்ணியமும் இறைவனின் சந்நிதி யில் ஏது? பரமனின் முன்பு யாவும்ஒன் று தானே! மாயைக்கு உட்பட்ட உலக மக்களுக்கு பேதங்கள் இருப்பது இயல்பு. ஆனால், மாயையைக் கடந்து, பிரம்மத்தில் லயித்திருக்கும் சந்நியாசிக்கு சமபாவம்தானே இருக்கவே ண்டும்?’

சுவாமிஜி உடனே நேராக நாட் டியம் நடைபெற்றுக் கொண்டி ருந்த இடத்துக்குச் சென்றார். இயல்பிலேயே ஒளிவீசும் அவரது கண்கள் கண்ணீரால் பள பளக்க, பாடிய அணங்கை அன்னையைக் காண்பதுபோல் அன்புடன் நோக்கி, ”தாயே! நான் குற்றவா ளி ஆகிவிட்டேன். இங்கு வராமலே இருந்து உன்னை அவமதித்த பாவத்துக்கு ஆளாகி இருப்பேன். ஆயினும் தாயே… அதிர்ஷ்டவச மாக உன் சங்கீதம் என் அறிவை விழிப்புறச் செய்துவிட்டது!” என்றார்.

 

2 Comments

Leave a Reply