Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீண்ட இடைவெளிவிட்டு உடலுறவு கொள்ளும் ஆண்களின் விந்தணுக்க‍ள் பாதிப்படையும்! அதிர்ச்சித் தகவல்

மாதம் இருமுறையோ வாரம் இருமுறையோ, உறவில் ஈடு பட்டால்தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்க ள் . ஆனால் தினசரி செக்ஸ் உற வில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஆய்வா ளர்கள் சமீபத்தில் நிரூபித்துள் ளனர்.

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு செக்ஸ் பற்றிய ஆர்வ மும், அதை அறிந்துகொள்ளவேண்டும் என்ற

வேகமும் அதிகம் இருக்கும். இதனால் தினசரி உறவில் ஈடு படுவார்கள். குழந்தை பிறந் தபின்பு இருவருக்கும் இடை யே கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு தாம்பத்யஉறவு கூட சம்பிரதாயமாக மாறி விடும். இவ்ளோதானா என் ற அலுப்பும், சலிப்பும் கூட தம்பதியரிடையே செக்ஸ் க்கு இடைவெளியை ஏற்படு த்திவிடும்.

சில நேரங்களில் தம்பதிகளிடையே சண்டை, நோய், களை ப்பு உள்ளிட்ட காரணங்க ளால் அந்த அளவும் நீண்ட போக வாய்ப்பு உள்ளது. இ ந்த காரணங்களை எல்லா ம் இல்லாவி ட்டாலும் சில தம்பதிகள் வேண்டுமென் றே செக்ஸ் உறவை தள்ளி போடுகின்றனர்.

இன்றைக்கு தினமும் செ க்ஸ் உறவு கொள்ளும் தம்பதிகளை பார்ப்பது மிகவும் அரி தாகிவிட்டது. பொதுவாக வாரத்தி ல் 2 அல்லது 3 முறை மட்டுமே செ க்ஸ் உறவு வைத்து கொள்வ தை வழக்கமாக கொண்டுள்ளனர். இந் த இடைவெளிக்கு தம்பதிகள் சொ ல்லும் முக்கிய காரணம் தினமும் செக்ஸ் உறவு கொண்டால், உடல் நலம் குன்றிவிடும், ஆண்மைக் குறைந்துவிடும் என விளக்கம் அளிக்கின்றனர். ஆனால் இது ஒரு தவறான கருத்து என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர்.

விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் இது தொடர்பாக ஆய்வு மேற் கொண்ட ஆஸ்திரேலியா டாக்ட ர் டேவிட் கிரீனிங், இடைவெளி விட்டு செக்ஸ் உறவு வைத்தா ல், ஆண்மை அதிகரிக்கும் என தம்பதியர் நினைக்கின்றனர். ஆ னால் அது தவறான கருத்து. தி னமும் உறவு கொண்டால் ஆண்களின் உடலில் உள்ள செக் ஸ் உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு, வளமான விந்து உரு வாக உதவுகிறது என்று கூறியுள்ளார். மனம் அ மைதியாகும் தகுந்த உண வும், மகிழ்ச்சியளிக்கும் தாம்பத்ய உறவும் மனிதனி ன் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத் தி வாழ்நாளை அதிகரிக் கிறது. வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது என்று தம்பதிகளுக்கு இன்பகரமா ன செய்தியை கூறியுள் ளார்.

வாழ்நாள் அதிகரிக்கும் தின மும் செக்ஸ் உறவு கொள்வத ன் மூலம் மனித விந்து பைக ளில் உள்ள விந்துகளின் வாழ் நாளும் அதிகரிக்கிறது. உடலி ல் ரத்த ஒட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது. தினமும் உறவு கொண்டு விந்துகளை வெளி யேற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாக்கத்திற்கு வழிவகை ஏற்படுகிறது. டி. என் .ஏக்கள் சேதமடையும் ஆண் கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள் கள் இருப்பதால், அவர்களி ன் விந்துகளில் உள் ள டிஎன்ஏ-க்கள் அதிகளவில் சேதமடை கின்றன. இதனால் நாட்கள் இடைவெளிவி ட்டு உறவு கொள்ளும் ஆண்களி ன் விந்துகள் மூலம் கருத்தரிக்கு ம் வாய்ப்பு மிகவும் குறைவு. வளமான விந்தாக மாறும் வள மில்லாத விந்துகளை கொண்ட ஆண்களை தினமும் உறவு கொள்ள செய்து ஆராய்ச்சி செய்ததில், 30 சதவீதம் ஆ ண்களின் விந்து செல்கள் வளமானதாக மாறியது தெரி யவந்தது, என்று மருத்துவர் கூறினார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த இனப்பெருக்க மருத்துவ இய ல் மாநாட்டில் இந்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது..

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply