தென்னிந்தியர்களின் உணவில்இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம். பண்டிகை நாளி ல் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரை ண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவா கி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்க ம் விரிவடைந்துக்கொண்டேபோகிறது. இட் லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகி றது. மறுபுறம் வீட்டில் இருந்தபடி
யே பணம் ஈட்டும்தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகி றது.
சிறிய மளிகைக்கடை முதல் பெ ரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசைமாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அரை கிலோ பாக் கெட் மாவு ரூ.30. பாக்கெட்டுக ளில் விற்கப்படும் மாவுகளில் தயாரிக்கப்ப ட்ட தேதி, எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம்.
தயாரிக்கப்பட்ட இடம், தரம், சேர் க்கப்பட்டுள்ள அரிசி, உளு ந்து விகிதம் என அனைத்தும் குறிக்க ப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக் கப்படும் மாவு தரமான உளுந்து , அரிசி, அரைக்கப்படும் கிரைண் டர், பயன்படுத் தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான மு றையில் தயாரிக்கப்பட வேண்டு ம் என நிபந்தனை. ஆனால், இந்த நிபந்தனைகளை பின்பற்
றுகிறார்களா என்பது கேள்விக்குறியே. இம்மாவில் ஆமண க்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ் ட், படிகார ம், பிளீச்சிங் பவுடர், ஒயிட் கெமிக்கல்ஸ் போன்ற வை கலப்படம் செய்யப்படுவ தாக குற்றச்சாட்டுகள் எழுகி ன்றன.
இவ்வாறு கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை உட் கொள்வதால் குழந்தைகள்முதல் பெரியவர்களுக்குதண்ணீ ரால் பரவும் நோய்கள், வயிற்றுவலி உட்பட பல்வேறு பாதி ப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கி ன்றனர். குடிசைதொழி ல் போல் பெருகி வரும் மாவு விற்பனை தொழி லை முறைப்படுத்தி ஆ ய்வுக்கு உட்படுத்தி சுகா தாரமான முறையில் தர மான மாவு பொது மக்க ளுக்கு கிடை க்க அதிகாரிகள் முயற் சிக்கவேண்டும்.
மதுரை மருத்துவக்கல்லூரி ஓய்வு பெற்ற நுண்ணுயிரி யல் துறை பேராசிரியர் டா க்டர் மீனாட்சி சுந்தரம் கூறு கையில் ‘இட்லி, தோசை மாவு தரமான அரிசி, உளுந் து கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விற்கப் படும்போது யாருக்கும், எவ் வித பாதிப்பும் கிடையாது. மாவு தயாரிக்க நல்ல தண்ணீர் அல்ல து மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுவது அவசியம்.
மாவு தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து 7 நாட்கள் வரை தான் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியும். அதற்குமேல் கெட்டு ப்போய் விடும். இம்மாதிரியா ன சூழலில் மாவு தயாரிக்கும் அனைவரும் தரமான அரிசி, உளுந்துகளை பயன்படுத்துகி றார்கள் என சொல்ல முடியா து. கடைகளில் மக்கிபோன, பூஞ்சை படர்ந்த அரிசி, உளுந் து போன்றவை மாவு தயாரிப்பவர்களுக்காக மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகி றது.
எடுத்துக்காட்டாக ஒரு கிலோ இட்லி அரிசி ரூ.35 என்றால் காலாவதியான அரிசி கிலோ ரூ.5 முதல் ரூ.10க்கு கிடைக்கிறது. அ தேபோல் உளுந்து கிலோ ரூ.70 என் றால் இந்த உளுந் து அதிகபட்சம் கி லோ ரூ.20 தான். தற்போது கிடைக்கும் விலையில்லா அரி சியைக் கொண்டு குறைவான செலவில்
அதிக லாபம் ஈட்ட லாம். மாவு வெண்மையாக, பஞ்சுபோல் இரு ப்பதற்காகசிறிதளவு சுண்ணாம்பு ,பிளீச்சிங்லிக்குவிட் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அரைத்த வுடன் புளிப்பதற்கு ஈஸ்ட் பயன்ப டுத்தப்படுகிறது.
மாவு தயாரிக்கும் அனைவரும் இம்மாதிரியான முறைக ளையே பின்பற்றுகின்றனர் என்று சொல்ல இயலாது. பெரு ம்பாலானவர்கள் குறிப்பாக வீடுகளில் மாவு தயாரிப்பவர்க ள் சுகாதாரமான முறைகளை பின் பற்றுவது கடினம். மின ரல் வாட்டரை மாவு தயாரிக்கு ம் அனைவருமே பயன்படுத்து வதற்கான வாய்ப்பு குறைவு. தயாரிக்கப்படும் கிரைண்டர், இடம் சுகாதாரமான முறையி ல் இருக்கிறதா? என்பதும் கேள் விக்குறியே. இவ்வாறு தயாரி க்கப்படும் மாவுகளை உண்ணு ம்போது உடனடியாக 6 வயதுக் குகீழ் உள்ள குழந்தைகள் மற் றும் 60 வயதுக்கு மேற்பட்டவ ர்களை பாதிக்கும். கொஞ்சம், கொஞ் சமாக எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும்.
சரியான முறையில் அரிசி, உளுந்து கழுவப்படாமல் இ ருந்தால் நீரில் பரவும் நோய் களான டைப்பாய்டு, காலரா, போன்றவை வர வாய்ப்புள் ளது. இதனையே தொடர்ந்து பயன்ப டுத்தும் போது தோல் சம்மந்தமான வியாதிகள், குடல் பாதிப்புகள், உணவு விஷமாதல்(புட் பாய்சன்) ஏற்படும். செறிமான கோளாறு, அடிக்கடி வயிறு வலி, வயிறு எரிச்சல் வரும். பிளாஸ்டிக்
பைகளில் பேக்கிங் செய்யப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்ப டுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். வெளியில் மாவு வாங்குவதை தவி ர்ப்பதன்மூலமே இம்மாதிரியான நோய்களை தடுக்க இயலும்‘ என்றா ர்.
மாவு விற்பனை மூலம் அதிக லாபம்
வீடுகளில் மாவு விற்பனை செய்யும் சாந்தி கூறியதாவது: ‘ஒரு படி ரேஷன் அரி சிக்கு, கால் கிலோ ரேஷ ன் உளுந்து பயன்படுத் துவோம். ஒரு டீஸ்பூன் வெந்தயம் போடுவோம். ரேஷன் அரிசி இலவச மாக கிடைக்கிறது. ரேஷன் உளுந்து ஒரு கிலோ ரூ.30 தான். அப்போது கால் கிலோ உளுந்து ரூ. 7.50. இதனை அரைக்க
ஒரு யூனிட் கரன்ட் தான் செலவாகும். ஆக மொத்த ம் ஒரு படி மாவு அரைக்க தயாரிப்பு செலவு ரூ.10தா ன். மாவு பஞ்சு போல் சாப் ட்டாக வருவதற்கு கொ ஞ்சம் ஆப்ப சோடா சேர்த் துக்கலாம். ரேசன் பச்சரிசி பாதி, ரேஷன் புழுங்கல் அரிசிபாதிசேர்த்தால் மாவு வெள்ளையாதான் இருக்கும். நல்லா கழுவிட்டா வாடை
யே இருக்காது. இந்த மாவை ஒரு கப் ரூ.20க்கு 5 பேருக்கு விற்க லாம். ஒரு நாளைக்கு எப்படியும் 5படி அரைச்சு விற்போம். இதனா ல் குறைந்தது ரூ.400 லாபமாக கிடைக்கு ம்‘ என்றார்.
புகார் வந்தால்நடவடிக்கை உறு தி
மதுரை மாவட்ட உணவு மற் றும் மருந்தியல் பாதுகாப்பு நிர் வாக அலுவலர் டாக்டர் சுகுணா கூறியதாவது: ‘ மது ரை மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம்பேர் உணவு பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். இதில் 8 ஆயிரம்பேர் இட்லி, தோசைமாவு தயா ரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடைகளில் பாக்கெட்செய்து இட்லி
தோசை மாவு விற்பனை செ ய்பவர்கள் எங்களிடம் பதிவு செய்துள்ளனர். அவர்களின் தயாரிப்பு இடம், தயாரிப்பு மு றை, பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தையும் ஆய்வு செய்து உரிமம் வழங்கியிரு க்கிறோம். வீடுகளில் மாவு த யாரிப்பவர்களையும் எங்களிடம் பதிவுசெய்து கொள்ளும் படி அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் யாரும் முன்வருவது
இல்லை. மேலும், சுகாதார மான முறையில் எவ்வாறு மாவு தயாரிக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் புகா ர் பெறப்பட்டால் மாவு ஆய் வகத்தில் சோதனை செய்ய ப்பட்டு, கலப்படம், சுகாதார மின்மை கண்டறியப்பட்டா ல் உணவுப் பாது காப்பு தர நிர்ணயச் சட் டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.
3 வருடம் சிறை தண்டனை உண்டு
நுகர்வோர் கண்காணிப்பகத் தின் தலைவர் வக்கீல் பிறவி ப் பெருமாள் கூறுகையில், கலப்பட தடைச் சட்டம் மற்று ம் உணவுப்பொருள் தர நிர் ணயம் சட்டப்படி புகாருக்கு ள்ளான உணவுப்பொருளின் மாதிரி எடுக்க வேண்டும். 14 நாட்களுக்கு பகுப்பாய்வு செ ய்து அதன் முடிவை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கொ டுக்க வேண்டும். ஆய்வு முடிவின் அடிப்படையில் இருவித
மான சட்ட நடைமுறைக ள் மேற்கொள்ளப்படும். உயிருக்கு ஆபத்தை வி ளைவிக்கும் வ கையில் இருந்தால் மாஜிஸ் திரேட் கோர்ட்மூலம் வழக்கு நடைபெறும். இதில் 3 ஆ ண்டு வரை சிறை தண்ட னை கிடை க்கும். அடுத்த நிலையில் டிஆ ர்ஓ கோர் ட் மூலம் வழக்கு நட த்தப்பட்டு அபராதம் விதிக்கப் படும். அதிகளவில் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகை யில் கலப்பட தடுப்பு பிரிவிற் கு என தனியாக நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
செய்தி தினகரன்
படங்கள் கூகுள்
Reblogged this on Gr8fullsoul.
If you think that these are really bothered about people getting affected, then do know this one even,
மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா?
—To know about it in full click the link—>> https://www.facebook.com/divine.pagibig/posts/679105958796874
Do go through the other posts in the page even.
with pag
NARESH KUMAR .V
Touch Therapist & Admin. – Pag-IBIG
(A page on TRADITIONAL HEALTH and QUOTES)
https://www.facebook.com/divine.pagibig