Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (12/01/14): செக்ஸ் உணர்சியைத்தூண்டி, படுக்கைக்கு அழைக்கும், ‘உன்னவர்’ எப்படிபட்டவர்’ …

அன்புள்ள அம்மாவுக்கு —

நான் 24 வயது பெண். படித்து முடித்து, தற்போது வேலைக் கு போய்க் கொண்டிருக் கிறேன். நான் கம்ப்யூட் டர் வகுப்பிற் கு போகும் போது, எனக்கு ஒரு நண்பன் கிடைத்தான். மனதில் பட்டதை அப்ப டியே கூறுவான். அதனா ல், அவனை ரொம்பப்பி டிக்கும். கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிந்ததும், எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல் லை. ஒருநாள் வழியில் பார்த்து, அவனுடைய மொபைல் எ ண்ணை தந்தான். அன்றிலிருந்து அவனுக்கு போன் செய்ய ஆரம்பித்தேன். இதனால்,

எங்கள் நட்பு அதிகமாகியது. 

இந்த இடத்தில், ஒரு முக்கியமான விஷயத்தை கூற வேண் டும். அவனுக்கு இரண்டு பெண் நண்பிகளும், ஒரு ஆண் நண்பனும் இருந்தனர். அவர்கள் நால்வரும், நண்பர்கள் எப் படியிருக்கக்கூடாதோ, அப்படியெல்லாம் எல்லைமீறி பழகி கொண்டிருந்தனர். இதை அறிந்த நான், அவனை திருத்தும் எண்ணத்துடன், அவனுடன் பழக ஆரம்பித்தேன். ஆனால், அந்தக்குழியில் நானும் விழுந்துவிட்டதுதான் என் துரதிர்ஷ் டம். 

அவன், என்னை ஒரேநா ளில் திரும்பி வரும் தொ லைவில் உள்ள ஒரு சுற்றுலா ஸ்தலத்திற்கு அழைத்தான். நான் மறு த்தும், அவன் அடிக்கடி கேட்க, என் மனம்இளகி, அவனுடன் சென்றேன். அங்கு, அவனது ஸ்பரிசம் கிடைத் தது. 

அதன்பிறகும் நானும், அவனும் போனில்தான் அதிகம் பேசு வோம். பெரும்பாலும், உடலுறவைப் பற்றியே அவன் பேசு வான். ஒரு கட்டத்தில், அவனுடன் அவ்வுறவில் ஈடுபட, என் மனம் ஏங்க ஆரம்பித்தது. இச்சமயத்தில், என்னுடன் பணிபு ரியும் தோழியுடன், அவனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இதனா ல், என்னைவிட்டு விலக ஆரம்பித்தான். என்னுடன் பேசுவ தைத்தவிர்த்தான். என்னிடம்போனில் எப்படியெல்லாம் பேசி னானோ, அதே போல் அவளுடனும் பேச ஆரம்பித்துள்ளான். அவள் பேசுவதை வைத்து, இதைத்தான் பேசிக் கொள்கின்ற னர் என்று துல்லியமாக அறிய முடிந்தது. இதனால், என் மனதில், அவன் மீது ஆத்திரம் அதிகமாகிறது. 

இதற்கிடையில், அவனுக்கு மூன்று மாதத்திற்கு முன் திரும ணமாகி விட்டது. இருப்பினும், அவர்களது உறவில், எந்த மாற்றமும் இல்லை. அவளுடைய வீட்டிலேயே அவன் அடிக் கடி உள்ளான். அவர்கள் வீட்டிலும் தவறாகநினைப்பதில் லை. இப்பொழுது, அந்தத் தோழியால், எனக்கும், அவனுக் கும் பிரச்னை அதிகமாகி, இருவரும் பேசிக் கொள்வதில் லை. என்னால், அவனை மறக்க முடியவில்லை. என்னால், என் மனதை அடக்கவும் முடியவில்லை. 

அவன் நல்லவனா, கெட்டவனா? என்னால் அவனை மறக்க முடியுமா? என் மனதைக் கட்டுப்படுத்துவது எப்படி? 

இது எல்லாம் தவறு என்று, எனக்குத் தெரிகிறது. நான், ஏன் இப்படி மாறிப் போனேன் என்று, எனக்கே தெரியவில்லை. நல்ல ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

— இப்படிக்கு,
உங்கள் மகள். 

பிரியமான மகளுக்கு, 

உன் கடிதத்தை படித்து, விவரங்களை அறிந்தேன். என்ன மாதிரியான மனநிலையில், தற்பொழுது, நீ இருக்கிறாய் என்று, என்னால் உணர முடிகிறது. 

இன்றைய நவீன கால ஆண்களும், பெண்களும், ‘செக்ஸை’ ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்த்து, அது பற்றிய எண்ண ங்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். 100க்கு 99% இன் றைய காதலர்கள், உடல் சம்பந்தமான விஷயங்களைத்தா ன் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். உள்ளம் சம்பந்தப்ப ட்டதாகவோ அல்லது வருங்கால திட்டங்கள் பற்றியோ அவ் வளவாக அவர்கள் பேசுவதாக தெரியவில்லை. இது, மிகவு ம் வேதனைக்குரிய விஷயம். 

எனவே, இது காதல் இல்லை; காமம். இத்தகைய நட்பு, ‘அது’ கிடைத்தவுடன், சே… என்றாகி விடும். பின்பு உன்னவர், நீ நினைத்து உருகும் அந்த ஹீரோ, மற்றுமொரு பூவை நோக் கி சென்று விட, நீயோ அதையே அல்லது அவரையே நினை த்து, புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான். காதல் என்ப து, புரிந்துகொள்வது, விட்டுக்கொடுப்பது; எந்த எதிர்பார்ப்பு ம் இல்லாமல் அன்பு செலுத்துவது; மாஞ்சி மாஞ்சி மற்றவரு க்கு உதவி செய்வது என்ற, நல்ல விஷயங்களை நீ படித்ததி ல்லையா? 

திருமணம் ஆன, ‘உன்னவரிடம்’ மேற்கூறியவைகளில், ஏதா வது ஒரு தகுதியாவது இருக்கிறதா? திருமணம் ஆகிவிட்ட உணர்வே இல்லாமல், உன்னிடமும், உன் தோழியிடமும் ஆபாசமாய்பேசி, செக்ஸ் உணர்ச்சியைத்தூண்டி, படுக்கைக் கு அழைக்கும், ‘உன்னவர்’ எப்படிபட்டவர் என்று, இப்பொழு தாவது தெரிகிறதா? அவரது உள்நோக்கம் உனக்கு புரிகிற தா? 

அவனைப் பொறுத்தமட்டில், நீ கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி. இல்லை என்றாலும், கவலையில்லை. உன்னைப் போல, உன் தோழியைப் போல, நிறைய நண்பிகள் கிடைப்பர். அவ னது குறிக்கோள், அவனுடைய செக்சுக்கு ஒரு வடிகால் தே வை. அவன் விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில், பெ ண்களை தொட்டுப் பேச ஒரு ஆள் தேவை. அவ்வளவுதான். 

இச்சூழலில் உன் மனதும், உடலும் சீராக, அமைதியாக இரு க்க, என்ன செய்ய வேண்டும்… 

உடனே, அவனை மறக்க முடியாவிட்டாலும், சிறுக சிறுக, அவனை உன் ஆழ்மனத்திலிருந்து அகற்று. நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். கடந்தவைகளை நினைத் து, கவலைப்படுவதை தவிர். கண்களை மூடி, ‘என்னுள் இரு க்கும், அவனை, நான், என் நினைவுகளிலிருந்து தூக்கி எறி ந்து விட்டேன். அவனால், என் வாழ்க்கையில் எந்த பாதிப் பும் ஏற்பட போவதில்லை, ஏற்படுத்தவும் முடியாது…’ என்று, அழுத்தம் திருத்தமாக, தினமும் கொஞ்ச நேரம் சொல்லிக் கொள். 

உன்மனதிடம், ‘செக்ஸ்வாழ்க்கை, என் கணவன்மூலம் தான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்றும், வேறு எவருடனும் அல்ல…’ என்று, அடிக்கடி சொல்லிக் கொள். 

எந்த காரணத்தைக் கொண்டும், எந்த சூழ்நிலையிலும், நீ தப்பு செய்து விட்டாய் என்று, எண்ண வேண்டாம். இதையே நினைத்துக் கொண்டிருந்தால், குற்ற உணர்வு வளர்ந்து, உன் மனம் வேதனைப்பட்டு, விபரீதமான எண்ணங்களை, உன் மூளை யோசிக்க ஆரம்பிக்கும். அது மிகப் பயங்கரமா ன விளைவுகளை உருவாக்கும். 

நீ பிறந்ததிலிருந்து, இன்று வரை, உன் பெற்றோரிடம் அன்பு செலுத்தி, பழகி இருந்திருக்கிறாய். எனவே, அவர்களை நண்பர்களாக பாவித்து, உன் நிறை, குறைகளை அவர்களி டம் சொல்லி, கலந்து ஆலோசித்து, நல்ல பையனாக பார்த் து, உனக்கு திருமணம் செய்து வைக்கச் சொல். இது உன் மனநிலையை வளப்படுத்தும். இவ்வாறு செய்வதில் கூச்சப் படத் தேவையில்லை. 

பெற்றோரிடம் பேச தயக்கமாக இருக்கிறது என்றால், நல்ல குடும்ப நல ஆலோசகரை அணுகி, உன் பிரச்னைகளை விள க்கி, ஆலோசனைகளைப் பெற முயற்சி செய்யலாம். 

மகளே… விரைவில், நீ நினைக்கிற மாதிரி, நல்ல கணவன் கிடைத்து, ஒரு ஒளிமயமான வாழ்க்கையை துவக்க வாழ்த் துகள். 

— அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.
(நன்றி – தினமலர் வாரமலர் நாளிதழ்)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: