Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எந்த இந்தியனும் காஷ்மீரில் சொத்துக்களை வாங்கவோ குடியேறவோ முடியாது!- வரலாறு காணாத தகவல்!

“பூலோக சொர்க்கம்’ காஷ்மீர், இந்தியாவின் வட எல்லை யாக உள்ளது. காஷ்மீரின் பெரும் பகுதியை, பாகிஸ் தான் ஆக்ரமித்து கொண்ட து மட்டுமன்றி, சொந்தம் கொண்டாடி வருகிறது. கா ஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா.. பாகிஸ்தா னுக்கா. அல்லது தனி நாடா க இருக்க வேண்டுமா .. இன்றும் அணையாமல் பற் றி எறிந்து கொண்டிருக்கும் இப்பிரச்னையின்

ஆரம்பம் இது தான்.

காஷ்மீர் பிறந்த கதை:

வேத காலத்தில் அங்கு வாழ்ந்த காஷ்யப் முனிவரின் பெயரி லிருந்துதான், காஷ்மீர் என்ற பெயர் வந் தது. காஷ்யப் முனிவரின் கடும் தவத்தா ல், காஷ்மீர் பள்ளத்தாக்கில் “சட்டிஸர்’ என்ற பெரிய ஏரியின் நீர் ஒன்றிணைந்து பெரும்நதி உருவாகி, அப்பகுதியை செழி ப்படைய செய்தது. அவரின் தவத்தின் பய னாக, சிவபெருமான் தோன்றி, அப்பகுதி க்கு ஆசி வழங்கியதாகவும், அவர் தோ ன்றிய இடமே அமர்நாத் என்பதும் ஐதீகம் . இது ஸ்ரீநகரிலிருந்து 145 கி.மீ., தொலை வில் உள்ளது. அமர் நாத்தில் தோன்றும் சிவலிங்கத்தைக் காண, இன்றும் லட்சக்கண க்கான மக்கள் பயணிப்பது வாடிக்கை.

காஷ்மீரின் ஆட்சியாளர்கள்:

காஷ்யப்பின் மகன் நீல் என்ப வரே காஷ்மீரை முதலில் ஆட்சி செய்தவர். கி.மு.,322 முதல் கி.மு.,185 வரையிலான கால கட்டத்தில் மவுரிய பேர ரசும், கி.பி.100ல் குஷான் பேரரசும் காஷ்மீரை ஆட்சி செய் தன. கி.பி., 1200ம் கால கட்டத்தி ல் தான், காஷ்மீர் மண்ணில் இ ஸ்லாமியர்கள் காலூன்றினர். கி .பி., 1327ல் காஷ்மீரை ஆட்சி செய்த இந்து மன்னர் ரிச்சன் ஷா என்பவர், மத்திய ஆசியாவை சேர்ந்த, அப்துர் ரஹ்மான் புல்பு ல் என்பவரால் மதம் மாற்றப்பட் டார். உதைனா தேவாதான் காஷ்மீரை ஆட் சி செய்த கடைசி இந்து மன்னர். 1346ல் உதைனா தேவாவிடம் இருந்து, சம்சுதீ ன் லுடுட்மஸ் எனும் துருக்கி சுல் தான், ஆட்சியை கைப்பற் றினார். அடுத்த 4 நூற் றாண்டுகள், ஆப் கன் நாட்டினரின் கட்டுப்பாட்டில் காஷ் மீர் இருந்தது. 1586ல் முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சியின் கீழ் வந்தது. பின், முகலாயர்களை வீழ் த்திய துரானி பேரரசு, காஷ்மீரில் ஆட்சி அமைத்தது. அகமது ஷா து ரானி 1757 முதல் 1819 வரை காஷ் மீரின் மன்னராக இருந்தார். 1819ல் துரானியர்களை வீழ்த்திய ரஞ்சித் சிங், சீக்கிய ஆட்சியின் கீழ் காஷ்மீ ரை கொண்டு வந்தார். 1846ல் ஆங்கில அரசு, சீக்கிய ர்களை வீழ்த்தி, காஷ்மீரை கைபற்றியது.

காஷ்மீர் பிரச்சனை:

1947ல், காஷ்மீரின் மன்னரா க இருந்த ஹரி சிங், காஷ்மீ ரை இந்தியா உடன் இணை ப்பதா, பாகிஸ்தானுடன் இ ணைப்பதா அல்லது தனி நா டாக செயல்படுவதா என்ற குழப்பத்தில் முடிவு எடுக்க‍த் அதீத நாட்கள் எடுத்துக் கொ ண்டார்.பின் ஒருவழியாக இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தார். மன் ன‍ர் குழப்ப‍தில் இருந்த இந்த இடைப்பட்ட‍ காலத்தில்தான் பாகிஸ்தான் தனக்குச் சாதகமாக பயன்படுத் திக்கொண்டது, ஆம் கா ஷ்மீரின் ஒருபகுதியை ஆக்கிரம்மித்துக் கொண் டு, இன்றுவரை, அவர்கள் ஆக்கிரமித்த‍ காஷ்மீர் மட்டுமின்றி ஒட்டுமொத் த‍ காஷ்மீரும் தங்களுக் கே என்று சொந்தம் கொ ண்டாடி வருவது குறிப்பி டத்தக்க‍து.

இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்த‍ மன்ன‍ர் ஹரி சிங், ஷேக் அப்துல்லாவை பிரதமராக நியமித்தார். அப்போதைய நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, அரசியல் சட்டப்பி ரிவு 370, காஷ்மீரில் அமல்படுத் தப்பட்டது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சட்டப்பிரிவு, இங்கு நீக்கப்படாமல் அமலில் உள்ளது . இச்சட்டப்பிரிவின்படி, இந்தியா வில் பிற பகுதிகளில் வசிப்பவர் கள், ஜம்முகாஷ்மீர் மாநிலத்தி ல் உள்ள சொத்துக்களை வாங்க வோ, குடியேறவோ முடியாது.

காஷ்மீர் – மத அரசியலின் கூடா ரம்:

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை உள்ளடக்கியதே ஜம்மு காஷ்மீர். காஷ்மீர் பிரி வினைவாத தலைவர்கள், சுய நலனுக்காக காஷ்மீரை பிரிக்க போராடுகின்றனர். அவ்வா று பிரிந்தால், பாகிஸ்தானுடன் இணைய முனைப்பு காட்டுவர் . சிறுநிலப் பகுதியான  காஷ்மீ ரில் போதிய வளங்கள் இல்லை; இங்கு வசிப்பவர்களில் பெ ரும் பாலானோர் முஸ்லிம்கள். இந்தியாவில் மகிழ்ச்சியாக வாழ்வதாக இவர்கள் கூறுகி ன்றனர். ஆனால், காஷமீர் பகுதி மக்கள் துன்பத்தில் தவிப்பதாக பிரிவினைவாதி கள் மட்டுமே கூறுகின்றனர். பாகிஸ்தானால் அபகரிக்கப் பட்ட காஷ்மீரில், காஷ்மீரி மொழி பேசப்படுவதில்லை. இவர்கள் காஷ்மீர் மக்களிட மிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். இதுதான் காஷ்மீரின் உண்மை யான வரலாறும் நிலைமையும்.

நாளேடு ஒன்றில் வெளிவந்த இக்கட்டுரையை கூடுதல் தகவல்களுடன் மெருகேற்றியது விதை2விருட்சம்

5 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: