Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்னையில் நடிகை அஞ்சலி மரணம்! –

சென்னையில் இன்று நடிகை அஞ்சலிதேவி மரணம மடைந்தார். இவருடன் பணியாற்றி சக நடிகர் கள் நடிகைகள் இவரை அஞ்ச லி, அஞ்சலி என்றே செல் ல‍மாக அழைப்பார்கள்.

நடிகை அஞ்சலிதேவி, எம் .ஜி.ஆர்., சிவாஜி கணேச ன் ஜெமினி கணேசன், என் .டி.ராமராவ், ஏ.நாகேஸ்வ ரராவ் ஆகியோருடன் ஜோடி யாக நடித்தவர், இவரை சக நடிகர்கள் நடிகைகள் அஞ்சலி அஞ்சலி என்றே செல்ல‍மாக அழைப்பார்கள். இவருக்கு

உடல் நலக்குறைவுகாரணமாக சென்னையில் இன்று பழம் பெரும் நடிகை அஞ்சலிதேவி மரண மடைந்தார்.

அஞ்சலிதேவியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி னம் அருகே உள்ள பெத்தாபுரம் .அவருக்கு 5 வயது ஆன போது, குடும்பம் காக்கிநாடாவில், குடி யேறியது. பள்ளியில் படித்து வந்தபோது, அங்கு நடைபெற் ற நாடகங்களில் பங்கு கொண்டார். காக்கிநாடாவில், இசை அமைப்பாளராகவும், நடன இயக்குனராகவும் இருந்த ஆதி நாராயணராவ் என்ற இளைஞர், நடனநாடகத்தை ப் பார்த்தார். அஞ்சலிதேவி யின் அழகும் நடனமும், அ வரைக் கவர்ந்தன. தன் நாட கங்களில் நடிக்க வாய்ப்பளி த்தார்.

அஞ்சலிதேவி நடித்த “தெருப்பாடகன்”, “லோபி” ஆகிய நாட கங்கள், ரசிகர்களிடம் அமோக ஆதரவைப் பெற்றன. இந்த நிலையில், அஞ்சலிதேவிக் கும், ஆதிநாராயணராவுக்கு ம் காதல் ஏற்பட்டது. இருவ ரும் திருமணம் செய்து கொ ண்டன ர். 1945-ம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த பிர பல திரைப்பட இயக்குனர் சி. புல்லய்யா, “தெருப்பாடகன்” நாடகத்தைப் பார்த்தார். அஞ் சலிதேவி சிறப்பாக நடனம் ஆடியதை பார்த்து மகிழ்ந்து, தன்னுடைய “கொல்லபாமா” என்ற தெலுங்கு படத்தில் மோ கினி வேடத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் ஆந்திராவில் மட்டுமி ன்றி தமிழ்நாட்டிலும் வெளியாகி வெற்றிவாகை சூ டியது. அதனால் அஞ்சலிதேவிக்கு படவாய் ப்புகள் குவியத் தொடங்கின.

தெலுங்கில், ஏ.நாகேஸ்வரராவுட ன் அஞ்சலிதேவி நடித்த “தீலு குர் ரம்” என்ற படம், “மாயக்குதிரை” என்ற பெயரில் தமிழில் “டப்” செய் யப்பட்டு திரையிடப்பட்டது. மாயா ஜால ங்கள் நிறைந்த இந்தப் படம், ஓகோ என்று ஓடியது. அஞ்ச லிதேவி தமிழ்நாட்டிலும் புகழ் பெற்றார். தமிழ்ப்பட வாய்ப் புகள் வந்தன. “மகாத்மா உதங் கர்”என்ற தமிழ்ப்படத்தில் நடி த்தார். 1949-ல் நடிக மன்னன் பி.ï. சின்னப்பாவுடன் “மங் கையர்க்கரசி” என்ற படத்தில் நடித்தார். 1949-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “மா யாவதி” என்ற படத்தில் TR. மகாலிங்கத்துடன் இணைந் து நடித் தார்.

1954-ல் ஏவி.எம். தயாரிப்பா ன பெண் படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா ஆகியோருடன் இணைந்து நடித்தார். தமிழ்ப்படங்களில், அ வர் சொந்தக்குரலில் பேசி நடித்தது குறிப்பிடத்தக்கது. 1955-ல் நாராயணன் கம்பெனி தயாரித்த “கணவனே கண்கண்ட தெய்வம்” என்ற மெகாஹிட் படத்தில், ஜெமினி கணேசனுக்கு ஜோடியா க நடித்தார். இந்தப் படத்தில், அஞ் சலிதேவியின் நடிப்பு அற்புதமாக அமைந்தது. இந் தப்படம், அவர் வாழ்க்கையில் பெரி ய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ஆந்திராவில் ஏற்கவே பிரபலமாகியிருந்தவர், தமிழ்ப்பட உலகிலும் பானுமதி, பத்மினி வரிசையில் இடம் பெற்றார். ஏராளமான தமிழ்ப்படங்களி ல் நடித்தார். சிவாஜியுடன் “ முதல் தேதி”, “நான் சொல் லும் ரகசியம்” படங்களிலும், எம் .ஜி.ஆருடன் “சக்ரவர்த்தி திருமகள்”, “மன்னாதி மன்ன ன்” ஆகிய படங்களிலும் நடி த்தார். ஜெமினி கணேசனுடன் இவர் நடித்த “காலம் மாறிப் போச்சு” சிறந்த படம் என்ற பெயருடன் வசூலையும் குவித் தது. மற்றும் “இல்லறமே நல்லறம், “பூலோக ரம்பை ”, “வீர க்கனல்” முதலான படங்களில் ஜெமினி கணே சனுடன் நடித் தார்.

தமிழில், ஜெமினி கணேச னுடன்தான் அதிக படங்க ளில் நடித்தார். அஞ்சலி தேவி, சொந்தப்படங்களை த் தயாரிப்பதிலும் வெற்றி பெற்றார். ஜெமினி கணேசனுடன் “மணாளனே மங்கையின் பாக்கியம்” படத்திலும், நாகேஸ் வரராவுடன் “அனா ர்கலி”யிலும் நடித்தார். இந்தப் படங்களில் இடம் பெற்ற பா டல்கள், மிகவும் பிரபலமாயி ன. இசை அமைத்தவர் அஞ் சலிதேவியின் கணவர் ஆதி நாராயணராவ். அஞ்சலிதேவி தயாரித்த மற்றொரு படம் “அடுத்த வீட்டுப் பெண்”. இது நகைச்சுவைப் படம். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடி டி. ஆர்.ராமச்சந்திரன். தெலுங்கில், என்.டி.ராமராவுடன் பல படங்களில் அஞ்சலி தேவி நடித்துள்ளார். அவற்றில் முக்கி யமானது “லவகுசா”. இப்படம் தமிழிலு ம் வெளிவந்தது. ராமராவ் ராமராகவும், அஞ்சலிதேவி சீதையாகவும் அற்புதமா க நடித்தனர். பிற்காலத்தில், அண்ணி, அம்மா வேடங்களிலும் அஞ்சலிதேவி நடித்தார்.

ஸ்ரீதர் தயாரித்த “உரிமைக்குரல்” படத்தி ல், எம்.ஜி.ஆருக்கு அண்ணியாக நடித்த து குறிப்பிடத்தக்கது. “அன்னை ஓர் ஆலயம்” படத்தில், ரஜினிகாந்துக்கு அம்மாவாக நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 150-க்கும் மேற் பட்ட படங்களில் அஞ்சலிதேவி நடித்துள்ளார்.

படித்த செய்தி!

Leave a Reply