Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ச‌மயோசித புத்தியை வளர்த்துக்கொள்வது எப்ப‍டி?

1.ஒரு மனிதன் பேசுகின்றான் என்றால் சதையினால் உரு வாக்கப்பட்ட அவனது நா வினால் அல்ல .சமயோசித ம் என்றால் தகுந்த சமயத் தில் நாம் இருக்கும் நிகழ் கால சூழ்நிலையில் எல் லோரும் ஏற்றுக் கொள்ளு ம் வண்ணம் அந்த சூழ்நி லையை படைப்பாற்றல் மிக்கதாக ஆக்குவது.அதே சமயத்தில் நாம் எந்த சூழ் நிலையில் இருக்கின்றோம் என்பதைக்கூடவும் நமது சுற்று ப்புறத்தை மறந்தும் இருத்தல் ஆனது சூழ்நிலையில்

இருந்து விலகி இருப்பது ஆகும்.

2.தனது பக்கம் எல்லாவற்றையும் கவர்ந்திழுப்பது சம்யோ சிதத்தின் அடிப்படை. ஒரு சூழ்நிலையை அழகுபடுத்துவது என்பது அந்த சூழ்நிலையில் இருப்பவர்கள் எந்த அளவிற்கு அந்த சூழ்நிலையுடன் ஒன்றி இருக்கின்றார்கள் என்பதை ப் பொறுத்தது.சில நபர்கள் தன்னு டன் ஒத்த சூழ்நிலையில் இருந்து விலகி இருப்பவர்களையும் தனது  சமயோசித புத் தியினால் சூழ்நிலைக்குள் கொண்டு வரும் திறமையினைப் பெற்றிருப்பார்கள்.இத்திறமை இயல்பாகச் சிலருக்கு அமைந்திருக் கும்,சிலர் தங்களது சுய முயற்சியின் மூலமாக இதனை வளர்த்து இருப் பார்கள்.

3.இப்படிப்பட்ட தனித்தி றமையை நாம் உணர் ந்து வளர்க்க வேன்டும் .நாங்கள் சிறு வயதினராக இருக்கும் போது கிரா மத்திற்கு விடுமுறையில் செல்வோம் அப்போது எனது தாத்தா டேபே ராண்டி இங்கவா நான் கேட்கும் கேள் விகளுக்குப்பதில்சொல் என்று “உங்க வீட்டுச்சேவல் என் வீட்டில முட்டை யிட்டா அது யாருக்குச் சொந்தம் “எ ன்று கேட்பார் .அவரது கேள்வியில் இருக்கும் சூட்சுமத்தை எல்லாம் புரிந் து கொள்ளும் வயதில்லை, நாம் அத னை கோழிதானே முட்டையிடும் என் று பகுத்து பார்க்கவெல்லாம் முடிய வில்லை ,யாருக்கு உரிமை என்பதிலேயே மனது இருக்கும்.

4.இப்படித்தான் பல கேள்விகளும் மாட்டுக் கணக்குகளும் ,மாம்பழங்களைப் பிரிக்கு ம் கணக்குகளும் கேட்கப் படும் நமது முழித்தல் ரசிக்கப்படும்.சமயோசித புத்திதான் வாழ்க்கையி னை  அனுபவிப்பதற்கு அ டிப்படை என்பதனை மனி தர்கள் பன்னெடுங்கால மாக உணர்ந்து வந்திருக் கின்றார்கள் .அதனை மன தில் விதைக்கும் அடிப்படைக் காரணிகள் தான் இப்படிப்பட்ட கேள்விகள் என்பதைப் புரிந்துகொள்ள நமக்குப் பன்னெடுங் காலங்கள் ஆகின்றது அப்போது நாம் சமயோ சிதத்தைப் பயன்படுத்தக்கூடி ய நிலையில் இல்லாது, நமது அறிவு வளர்ச்சி முதிர்ச்சியடைந்து விடுகின் றது.

5.ஆனால் பெரிய தலைவர் கள் ,அறிஞர்கள், அறிவிய லார்கள்,சமூக சிந்தனை யாளார்கள் தங்களது வாழ் நாளின் இறுதி வரைக்கும் இந்த சமயோசித புத்தியை த்தகுந்தபடி உபயோகம் செ ய்து வந்தார்கள். இவர் களின் இப்படிப்பட்ட சமயோசித அறி வால் தனி நபர்களின் மன முடிச்சுகளும் சமூகத்தின் மன மு டிச்சுகளும் விடுக்கப்படுகின்றன. சமயோசித அறிவு என்ப தை  வேறு கோணத்தில் எதனையும் பார் என்னும் மனச்சிந் தனையை நாம் எல்லோரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொருள் கொள் ளலாம்.

6,இதனை மாற்றுச் சிந்தனை என்று கூட சொல்லலாம், இய ற்கை தன்னை எப்போதும் ஒ ரே மாதிரியான நிலையில் வைத்திருக்க விரும்புவதில் லை. அதன் அடிச்சுவட்டில் வா ழும் நம்மையும் தான் .மாறுதல்க ளை மட்டுமே மாறாமல் வைத்துத் தன்னைப் புதுப்பொலிவுடன் எப்போ தும் வைத்துக் கொண்டே இருக்கின் றது.இந்த சிந்தனை மனநிலையை நாம் கற்றுக் கொள்வதற்கு அடிப்படை கற்பனை தான் .

7.மனிதனின் கற்பனைக்குக் கட்டுப்பாடு விதிக்க அவனைத் தவிர வேறு யாருக்கும் உரி மை இல்லை.எதனை வேண்டுமா னாலும் எப்படி வேண்டுமானா லும் கற்பனை செய்வதற்கு ம னிதனுக்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.அவனது கற்பனை க்கு எல்லையோ வரையறை யோ கிடையாது இதுதான் கற் பனைக்கான எல்லையும் வரை யறையும் ஆகும் .கற்பனையையே எப்படி கற்பனை செய்வ து என்பதனைக் கற்போம் ,கற்பனையில் கற்பனை யைப் பய ன்படுத்துவோம்.

8.ஒருசின்னக் கற்பனை பொ துவாக ஒரு வரியை நாம் படி க்கும்போது அதனைப்புரிந்து கொண்டு உணர்வாகவும் அதனை வரியாகவும் மனதி ல் பதிப்போம்.மனதில் அந்த வரி எப்படிப் பதிக்கப்பட்டு வெளிக் கொணரப்படுகின்ற து என்பதனைப் பார்த்தோம் என்றால் நாம் எப்படி ஒரு வரியை நேர்கோட்டில் உள்ளதுபோல் படி த்தோமோ அதே போல்தான் வெளிக் கொணரப்படும் போதும் நம்மால் உணரப்படுகின்ற து.

9.ஏன் இந்த வரியை முக்கோணமாக நம்மால் கற்பனைசெய்ய முடியாதா ?சதுரமாக அமைக்க முடியாதா, வட் டமாகக் கற்பனை செய்து படிக்க முடியாதா?முடியும் . இத னால் என்ன பயன் ?மனித மனம் தனக்கும் சமூகத்திற்கும் ஒரு செயலால் ஏற்படும் பயனை அளவிட்டுத்தான் எதனையும் மதி ப்பிடுகின்றது.நமது வாழ்க்கையி ன் பல தருணங்களில் பல விதமா ன பாடங்களையும் கொள்கைக ளையும் வழி காட்டுதலையும் நம து செயலின் நிமித்தமாகப் படித்து மனதில் பதிவு செய்து வைத்து தகு ந்த தருணத்தில் அதனைப் பயன்படுத்த வேண்டியிருக்கின் றது

10.நாம் இந்த நேர் வரி மன கற்பனையில் ஒரே விதமாகப் பாடங்களைப் பயிலும் போது மனதின் இயற்கை குணமான எதுவும் மாறிக்கொண்டே இரு க்க வேண்டும் என்னும் விதியி னைப் புறக்கணித்து நாம் ஒரே நிலையில் தொடர்ச்சியாக ஒரு வரியை நேராகவே படித் து பொருள் கொள்ளும்போ து சலிப்பும் அதனைத் தகுந்த நேர த்தில் தகுந்தபடி பயன்படுத்து ம்போது அது முழுஆற்றலுடன் வெளிப்படுவதில்லை ஏன் எனில் அதில்தான் மாற்றத்திற்கா ன சிந்தனையே இல் லையே.

11.அதனால் எதனையும்படிக்கும்போ து அந்த வாக்கியங்களைப் பல கோ ணங்களில் நாம் படித்து மனதில் பதி த்து அதனை நமது முழு ஆற்றல் மை யத்தில் இருந்து தகுந்த சமயத்தில் வெளிப்படுத்தலாமே.சமயோசிதம் என்பது நாம் இருக்கி ன்ற சூழ்நிலை யில் நமது கண்ணுக்குத் தெரிந்த மற் றவர்களின் கண்ணுக்கும் சிந்தனைக் கும் தெரியாத சிந்தனைகளை ஒருங் கிணைத்து அந்த சூழ்நிலையின் மறு பக்கத்தை வேறு ஒரு கோணத்தில் மற்றவர்களை உணரச் செய்வது .

12.ஒரு மனிதன் பேசுகின்றா ன் சதைகளால் உருவாக்கப் பட்ட நாவினால் அல்ல ,ஒரு மனிதன் ஓவியம் தீட்டுகின் றான் அவன் கைகளால் அல் ல,மனதில் சிந்தனைகளின் தாக்கம் நம்மால் தாங்கமுடி யாதபோது அந்த சிந்தனை யின் அடி ப்படையில் செய லை மட்டும் தான் செய்ய வேண்டும் இது தான் அந்தச் செய லைச் செய்ய ஒரு நல்ல தருணம். சாக்ரட்டீஸ் சொல்லுகின் றார் நான் யாருக்கும் எதையும் கற்றுக்கொடுப் பதில்லை ஆனால் சிந்த னை செய்வதற்கு மட்டு ம் அவர்களைத் தயார் செய்கின்றேன்.

13.ஒரே ஒரு வாழ்க்கை க்குத்தான் பலவித அர்த் தங்களைப் பலரும் சொ ல்லுகின்றார்கள் எல்லாமும் சரியா கத்தான் இருக்கின்றது அத னைக் கடைப்பிடிக்காத வரைக்கு ம்.இந்த சமயோசித சிந்தனையை எப்படிக் கடைப்பிடிப்பது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

– சக்திவேல் பாலசுப்பிரமணியன்

One Comment

Leave a Reply