Sunday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எங்கேயும் எப்போதும் எச்சரிக்கை வேண்டும்: – உங்களிடமோ /உங்களைச்சுற்றியோ, உறவாடும் உளவாளிகள்!

1.ஒற்று என்னும் உளவு பார்க்கும் செயல் ,நாடுகளின் முன் னேற்றத்திற்கு மட்டுமல்ல தனி நபர்களின் முன்னேற் றத்திற்கும் அவசியம். ஒவ் வொரு மனிதனும் உறவு மற்றும் நட்பு வட்டம், பணி வட்டம், எதிர்ப்பு வட்டம் எ ன்னும் மூன்று வட்டங்களு க்குள் தனது மனித உறவுக ளை மேலாண்மை செய்து வருகின்றான்.

2.இந்த மூன்று வட்டங்களும் பெரும்பாலும் தனித்து

இயங் குவதில்லை. ஒரு உறவு வட்டம் பணிவட்டத்திற்குள் ளும், உறவு வட்டமும் பணிவட்டமும் எதிர்ப்பு வட்டத்திற் குள்ளும் மாறிமாறி இயங் கும் .

3.இந்த மூன்று வட்டங்க ளில் உள்ளவர்கள் ஒவ் வொருவரும் நம்மைப் பொறுத்து ,ஒவ்வொரு மாதிரி செயல்படுவார்கள் .இந்த செயலை நமது நி லைக்கு ஆதரவான செய ல் ,நமது நிலைக்கு எதிரான செயல்,நடுநிலை என்று பிரிக் கலாம். இ ந்த மூன்று நிலைகளையும் நமது மேலே சொன்ன நட்பு,பணி ,உறவு என்னு ம் மூன்று வட்டங்களில் உள்ளவர் களும் மாறி மாறி மேற்கொண்டு நம து வாழ்வில் வலம் வரு வார்கள் .

3.இப்படி வலம் வருபவ ர்கள் எப்பொழுது நட்பு மற்றும் உறவு வட்டத்திற்குள்ளும் எப்பொழுது எதிர்ப்பு வட் டத்திற்குள்ளும் எப்பொழுது நடுநிலையுடனும் செயல்படு வார்கள் என்று முன்னிட்டு அ றிந்து கொள்ளவில்லை என் றால் நாம் பல செயல்களை வெற்றிகரமாகச் செய்வது என் பது முடியாது.

4. இவர்களைக் கையாள நா ம் ஒரு ஒற்றனாக இருக்க வேண்டும் .மூன்று வட்டத்தி னரும் எவ்வெப்பொழுது என்ன நிலைப்பாட்டினை கொண் டிருக்கின்றார்கள் என்பதை தொ டர்ச்சியாக அறிந்து கொண் டே இருக்க வேண்டும் .ஆகவே தான் ஒற்று என்னும் உளவு பார்க்கும் செயல் நாடுகளின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல தனி நபர்களின் முன்னேற்றத் திற்கும் பாதுகாப்பிற்கும் அவசி யம்.

5.இந்த உளவு பார்க்கும் முறையை ஒவ்வொருவரும் தெரிந் தோ தெரியாமலோ உணர்ந்து,அறிந்து வைத்து தங்களது நிலைப்பாட்டினை தக்க வை த்து வெற்றி அடைந்திருக்கி ன் றார்கள்.சரி இந்த மூன்று வட்டத்தினரையும் எப்படி உ ளவு பார்க்கலாம் என்று பார் ப்போம்.உளவு பார்ப்பதில் மூன்று முறை உண்டு .ஒரு வகை நாமே உளவு பார்ப்பது, அடுத்தவ கை மற்றவர்கள் மூலம் உளவு பார்ப்பது மூன்றாவது வகை தாங்களே தங்கள் நிலைப்பாட்டினை கூறு பவர்களை அடை யாளம் காண்பது.

6.முதல் வகை உளவைப் பற்றி பார்ப்போம்.நமது மூன்று வட்டங்களில் உள்ளவர்கள் பற்றி முழு வதும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் .அவர்களுக்கு என் ன பிடிக்கும், பிடிக் காது.அவர்கள் எந்தெந்த பிரிவுகளில் திற மை காட்டுவார்கள் எந்தெந் த பிரிவுகளில் அவர்களுக்கு பலவீனம் .அவர்கள் எந்த மு றையில் நம்மை உளவு செய் கின்றார்கள் , அவர்க ளுக்கு உதவிகள் புரியும் நபர்கள் யார், அவர்களுக்காக நம் மை உளவு பார்ப்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொ ள்ள வேண்டும்.

7.இந்த நபர்களுடன் நாம் தொடர்பு கொள்ளும் சூழ் நிலைக ளில் அவர்களது உளவு மனப்பாண்மையை நம்மிடம் காட்ட மாட்டார் கள் மறைத்து வைப்பார்க ள்.ஆகவே இதனை நாமே உளவு பார்ப்பது சிறந்தது . இந்த நபர்களுடன் நாம் தனிமை யில் உரையாட வேண்டும் அவர்கள் கலக்கத்திலோ ,குழப்ப த்திலோ இருக் கும் பொழுது தங்களைப் பற்றிய உண்மைக ளை கூற அதிக வாய்ப்புகள் உண்டு .

8.அடுத்து மூன்றாம் நபர்களிடம் எ ப்படி நடந்து கொள்ளுகி ன்றார்கள் என்பதை பொறுத்து நாமே அவர் களின் நிலைப் பாட்டினை அறிய லாம் .மற்றவர்கள் மூலமாக உளவு பார்க் கப்படும் நபரைப் பற்றி நாம் உளவுதான் பார்க்கின்றோம் என்று அறியப்படாமல் உண்மைகளை அறிவது.

9.இதெல்லாம் போக மற்றொரு மு றை அவர்களது கொள்கைகளை ஏற்பதுபோல் பேசித்தெரிந் துகொள்வது. மற்றொருமுறை அவர்களது கொள்கைகளை எதிர்ப்பதுபோல பேசி அவர்கள து மனதில் என்ன நினைத்திரு க்கின்றார்கள் என்பதனையும் ,அவர்களது நிலைப்பாடு என் ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

10.இதெல்லாம் நாமே உளவு பார்ப்பது.மற்றவர்களை வைத் து உளவு பார்ப்பதற்கு முதலில் நமது இலக்கு நபரின் சுற்று வட்டத்தில் நெருக்கமானவர்கள் யார் என்பதை உளவு பார் க்க வேண்டும்.பின்பு அந்த நபர்களுடன் பேசி இலக்கின் குறி க்கோளை தெரிந்து கொ ள்ள வேண்டும் .எந்த சூழ் நிலையிலும் நாம் உளவு பார்க்கின்றோம் என்னும் உணர்வே இவர் களுக்கு வரக்கூடாது.

11.சுருக்கமாகச் சொன் னால் அடுத்தவர்களின் எ ண்ண ஓட்டத்தை அறிந் து,அதற்கு ஏற்றாற் போல, நமது வாழ்விற்கு அதனை பயன் படுத்தும் திறமையை வளர்த்துக் கொள்ளும் போது வெற்றி எளிதாகின்றது.

12.உளவு பார்க்க சில டிப்ஸ் கள்:

அ).நாம் உளவு பார்க்கும் சம யம் நாமும் உளவு பார்க்கப்படு கின்றோம் என்ற எச்சரிக்கை தேவை.

ஆ) நமது மூன்று வட்டத்தில் இருக்கும் நபர்கள் தனிமையி ல் அவர்களைப் பற்றிய ஒரு ரகசியம் என்று உங்களிடம் சொல் கின்றார்கள் என்றால் ,அவர் உங்களைப் பற்றிய ஒரு உண்மையை தெரிந்து கொ ள்ள கண்னி வைக்கின்றார் என்று பொருள் எச்சரிக்கை யுடன் நடந்து கொள்ளும் தருணம்.

இ) பல பேருடன் உல்லாச மாக இருக்கும் பொழுது ந ம்மை அறியாமல் ஒவ்வொ ருவரது வீரதீர பராக்கிமங்க ளைச் சொ ல்லுகின்றார்கள் என்பதற்காக சுயம் இழந்து விட வேண்டாம்.இதுவும் உளவு பார்க்க ,பார்க்கப்பட நல்ல சந்தர் ப்பம்.

ஈ) சில கில்லாடிகள் நம் மை இப்படி உளவு பார்க்கி ன்றார்கள் என்பதைத் தெரி ந்து உண்மையை மறைத்து பொய்யை உலவ விடுவார் கள் . இவர்களை உளவு பா ர்க்க மூன்றாம் படி நிலையி ல் அதாவது இலக்கின் நெ ருக்கத்திற்கு ,நெருக் கம் எ ன்னும் படி நிலையில் வை த்து உளவு பார்க்கலாம்.

இந்த உலகில் யாரும் உளவு பார் க்காமல் இல்லை ,உளவு பார்க் கப்படாமலும் இல்லை என்பதை உணருங்கள் ,வாழ்வில் வெற்றி அடையுங்கள்.

– சக்திவேல் பாலசுப்பிரமணியன்

Leave a Reply