Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘வேதங்களால் என்ன பயன்? – இதுவே சுவாமி விவேகானந்தரின் இறுதியான போதனை – அரிய தகவல்

சுவாமிஜி, பிரேமானந்தருடன் உ லாவச் சென்றார். அது 1902-ம் ஆண்டு, ஜூலை 4-ம் தேதி, வெள்ளிக்கிழமை. அன்று மாலையில், பற்பல விஷயங்க ளைப் பற்றிப் பேசிக்கொண் டே சென்ற அவர், வேதத்தைப் பிரசாரம் செய்ய வேண்டிய தன் அவசியம் குறித்துச் சொன் னதுடன், வேதத்துக்காக ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் வெளியிட்டார்.

”சுவாமிஜி, வேதத்தைப் படிப்பதால் என்ன விசேஷ பயன் கிடைக்கும்?” என்று கேட்டார் பிரேமானந்தர்.

சுவாமிஜி பளிச்சென்று, ”மூடநம்பிக்கைகள் அழியும்” என் றார்.

மடத்துக்குத் திரும்பிய சுவாமிஜி சாதுக்களு டன் பேசிக் கொண்டிருந்தார். பற்பல நாடுகள் உன்னதமாக எழுந்ததையும், வீழ்ந்ததையும் பற்றிக் கூறினார். ஆனால் இந்தியாவைப் பற்றி அவர் பேசுகையில்,

”இந்தியா அமரத்து வம் பெற்றது. ஆண்டவனைத் தேடு வதிலேயே ஈடுபட்டால், இந்தியா என் றும் வாழும். மாறாக அரசியலையு ம், சமூக சச்சரவுகளையும் தேடிப் போனால், இந்தியா செத்துவிடும்” என்றார்.

இதுவே அவரது இறுதியான போதனை.

எத்தனையோ விவேகானந்தர்கள் வ ருவார்கள்!

தாம் யார் என்று அறிந்து, அதுவாக வே சுவாமிஜி மாறப்போகும் அந்த இறுதியான நாளில், அதி காலையில் எழுந்த சுவா மிஜி, சிறிது தேநீர் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்தார்.

வழக்கத்துக்கு மாறாக பூஜாகிருகத் தின் கதவுகளை எல்லாம் மூடிவிட்டு, ஏகாந்தமாக தியானம் செய்யலானா ர். தியானத் தைவிட தியாகம் பெரிது என்று வாழ்ந்திருந்த நாட்களெல்லா ம் முடிந்துவிடப் போகும் தினம் அது என்பதாலோ என்னவோ, சுவாமிஜி வெகுநேரம் தியான சமாதியில் ஆழ் ந்தி ருந்தார்.

தியானம் முடிந்து பூஜாகிருகத்தின் படிகளில் இறங்கி வந்த சுவாமிஜி, தன்னையும் அறியாமல் அம்பிகையைப் பற்றிய கமலாகாந்தரின் அற்புதமான பாடலைத் தமது அமுதமான குரலில் பாடினார். பேலூர் மடத்தினர் அந்தத் தீஞ்சுவைக் குரலைக் கேட்டனர்- அதுதான் தாங்கள் கடைசியாகக் கேட் கும் குரல் என்று அறியாமலே!

தம்மையறியாமலே பாடியது போல், பாடல் முடிந்ததும் தம் மையறியாமலே பேசவும் செய்தார் சுவாமிஜி. ”காளியை மட்டும்தானா… இந்த விவேகானந்தனையும்கூட யார் புரிந்துகொண்டார்கள்? அவன் என்ன செய்தான் என்று யார் தெ ரிந்துகொண்டார்கள்? இன்னொரு விவேகானந்தன் இருந்தால், அவனால்தான் புரிந்துகொள்ள முடியும். இன்னும் ஒரு விவேகானந்தன் என்ன… கால வெள்ளத்தில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்..!”

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: