Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களை யாரவது ஓசி-ன்னு கூப்பிடறாங்களா? இல்ல‍ நீங்க யாரையாவது ஓசி-ன்னு கூப்பிடறீங்களே! – இந்த ஓசி-க்கு என்ன‍ அர்த்த‍ம்

உங்களை யாரவது OC OC-ன்னு கூப்பிடறாங்களா? இல்ல‍ நீங்க யாரையாவது OC OC-ன் னு கூப்பிடறீங்களே! உங்க யாருக்காவது இந்த OC OC-க்கு என்ன‍ அர்த்த‍ம் தெரியுமா? தெ ரியாட்டி கீழே உள்ள‍ வரிகளை ப்படிங்க, புரிஞ்சுக்கோங்க‌.

நம்மில் யாரேனும் ‘எல்லாவற் றையும் இலவசமாக’ அனுப வித்தால், அவரை ‘ஓசி’யிலே யே எல்லாவற்றையும் அனுப விப்பவர் என்று நாம் சொல்வதுண்டு.

அது என்ன ஓசி..?

இந்தியா, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்

டில் இருந்தபோது, ‘இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு’ அரசாங்கக் கடிதங்களும், ஆவணங்களும் மற்ற கோப்பு களும் தபால் மூலமாக கடல் வழியாக அனுப்பப்பட்டு வந்த ன.

இதில், ஒவ்வொரு கடிதத்திலு ம் ‘அஞ்சல் தலைகளை’ கடித ங்களின் எடைக்கேற்ப மதிப்பீ டுசெய்யப்பட்டு ஒட்டப்பட்டது.

இங்கே இருக்கும் ‘ஆங்கிலேய அரசிடமிருந்து’ இங்கிலாந் தில் இருக்கும் ‘தலைமை அரசாங்கத்திற்கு’ அனுப்பப்படும் கடிதங்களுக்கு எதற்காக வீண்செலவு என்று யோ சித்த பிரித்தானிய அரசு, புதிய நடைமுறையைக் கொண்டுவந்தது.

அதாவது, அரசாங்கம் சம்பந்தப்பட்ட கடிதப்போ க்குவரத்துகளில் தபால் தலைகளை ஒட்டி வீண் செலவு ஏற்படுத்துவதற்கு பதிலாக, அக்கடிதங்களில் O.C.S [On Company Service] என்று அச்சிடு வது என முடிவு செய்து, அதன் படியே செயல்படு த்தப்பட்டது.

அதாவது, O.C.S. என்றால், பண ம் செலவு செய்யாமல் கடிதங் களை அனுப்புதல் என்று பின் னாளில் நம்மக்களுக்குத் தெரி ந்தது.

இதனைத் தொடர்ந்து O.C.S. என்ற வார்த்தை மக்களிடையே பிரபலமடைந்தது.

அதன்பிறகு O.C.S. என்ற இந்த வார்த்தை, எல்லா கட்டங்களிலும் பயன் படுத்தப்பட்டது.

பின்னாளில் O.C.S. என் ற வார்த்தை மருவி O.C. என்று சுருங் கியது.

அதன்பிறகு, எவரேனும் ‘இலவசமாக பணமேதும் கொடுக்கா மல்’ பொருட்களை வாங்கினால், அவரை O.C. என்று அழை க்கும் பழக்கம் மக்களிடையே ஏற்பட்டது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: